Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானாமதுரை

மறுநாள் காலை விடிந்ததும் முத்துவின் செல்போன் நெம்பருக்கு மெசேஜ் டோன் வரவே அந்த சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான். சுற்றி முற்றி பார்த்தவன் அமைதியாக எழுந்து அமர்ந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தான்.

என்றும் இல்லாமல் இன்று வெகுநேரம் தான் தூங்கியதை உணர்ந்து அதிர்ந்தவன் அடித்து பிடித்து எழுந்தான். அருகில் தன் ஃபோன் இருக்கவே

வைஷூக்கு சாரி சொல்லனும்என நினைத்தபடியே ஃபோனை பார்க்க அதில் வைஷூவிடமிருந்து காலை வணக்கம் தோழா என வந்திருப்பதைக் கண்டு குதூகலமானான்.

உடனே பதில் மெசேஜ் அனுப்ப நினைத்தான், கல்லூரி நாட்களில் பதில் மெசேஜ்க்கு ஒரு ஹைக்கூ கவிதையுடன் காலை வணக்கத்தை அனுப்புவது வழக்கம் அந்த விசயம் அந்நேரம் நினைவிற்கு வர உடனே அதே போல செய்ய நினைத்து பலமாக யோசித்தான்.

கல்லூரி பருவம்  என்பதால் எந்தவித கவலையும் இல்லை உடனே கவிதைகள் மழை போல அவன் மனதில் பொழிந்தது, ஆனால் இன்றோ ஒரு கவிதை கூட அவன் மனதில் தோன்றவில்லை அதை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டவன் வெறும் காலை வணக்கம் என மட்டும் அனுப்பி வைத்துவிட்டு சோகமாக தன் அறையை விட்டு வெளியேறி முற்றத்திற்கு வந்து சேர்ந்தான்.

அங்கு அதற்குள் வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து குளித்து ரெடியாகி டிபன் சாப்பிடுவதைக் கண்டு நொந்துப் போனான்.

ஒரு தூணில் சாய்ந்தபடி சோக தேவனாக நின்றிருந்த தனது மூத்த மகனைக் கண்ட மாணிக்கமோ தனது தந்தையிடம் சாப்பிட்டபடியே

ஐயா ஐயாஎன அமைதியாக அழைக்க அவரோ

என்னலே என்ன விசயம்என அவரும் சாப்பிட்டபடியே அமைதியாக கேட்க அதற்கு மாணிக்கம்

அங்க நிக்கறது நம்ம முத்து பயலுதானே, எதுக்கு தூண் கீழே விழாம தாங்கி பிடிச்சிக்கிட்டு நிக்கறான்என கிண்டலாகச் சொல்ல அவரும் சாப்பிட்டுக் கொண்டே எதேச்சையாக பார்ப்பது போல் பார்த்து அதிர்ந்தார்

எழுந்ததே நேரம் கழிச்சிதான் இதுல எதுக்கு முகவாட்டமா நிக்கறான் என்னாச்சி இவனுக்கு

கேட்டா பதில் சொல்வானா

அவன் முகமே சரியில்லை, நாம கேட்டா ஓடிடுவான் இரு இரு இதுக்குன்னு சரியான ஆள் ஒருத்தன் இருப்பானே முந்திரிக்கொட்டை எங்க ஆளைக் காணலைஎன கேட்க

யாரு கார்த்தி பயலைதானே கேட்கறீங்க

ஆமாம் அவனேதான் எங்க அவனும் சாப்பிட வரலை

தெரியலையே இவனுங்க வாழ்க்கையில பொண்ணுங்க வந்தாலும் வந்தானுங்க இரண்டு பேரும் பித்து பிடிச்சி அலையறானுங்கஎன அலுத்துக் கொண்டிருக்கும் போதே கார்த்தி வந்து சேர்ந்தான்.

அவன் வரவும் மகா ஆசையாக அவனிடம் சென்றாள்

மாமா மாமா வாங்க மாமா சாப்பிடுவீங்கஎன அன்பாக அழைக்க அவனோ அவளின் ஆசையான அழைப்பில் மதி மயங்கினாலும் வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றினான்

காலையிலயே உன் முகத்தை பார்த்துட்டேனா இனி விளங்கின மாதிரிதான்என நக்கலாகச் சொல்ல அவளோ கார்த்தியின் மீது கோபம் கொண்டு தூணிற்கு காவலாக சாய்ந்திருந்த முத்துவிடம் பஞ்சாயத்துக்குப் போனாள்

முத்து மாமா பாருங்க உங்க தம்பி என்ன சொல்றாருன்னுஎன அழாத குறையாக அவள் கேட்டதும் முத்துவின் நினைவுகள் மாறியது.

எதிரே இருந்த மகாவை குழப்பமாக பார்த்தவன் அவளுக்கு பின்னால் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த கார்த்தியை கண்டு கோபத்தில் கத்தினான்

ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையாடா, சும்மா சும்மா இந்த பொண்ணை எதுக்கு வம்பு இழுக்கற அடிவாங்க போற வேலையை போய் பாரு போஎன கத்த அவனோ

வேலைக்கு போகத்தான் போறேன் இவள்தான் குறுக்க வந்து தொல்லை பண்றா

உனக்கெல்லாம் நேரத்துக்கு சோறு பரிமாற ஆள் இருக்கவே கொழுப்பு ஏறிக்கிடக்குஎன கார்த்தியை பார்த்துச் சொல்லியவன் மகாவிடம்

அவன் உன்னை ஓட்டறான், நீ என்னடான்னா அழுது வடியற, நீ இந்த வீட்டு மருமகள் தைரியமா நின்னு பேசாம கோழையா இருக்கியேஎன காட்டமாகச் சொல்ல உடனே மகாவோ கார்த்தியிடம் ரோஷமாக வந்து நின்றாள்.

இப்ப சாப்பிட வரப்போறீங்களா இல்லையா மாமாஎன அவள் அதிகாரமாக கத்த அதைக் கணட கார்த்தியோ முத்துவிடம் பிராது தந்தான்

பாருங்கண்ணா தைரியமா இருக்க சொன்னா எப்படி மிரட்டறாள்ன்னு, இவள் எனக்கு வேணாம்ணாஎன சொல்ல முத்துவோ

போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும் என்னால தாங்க முடியலை, இப்படியே சண்டை போட்டீங்க நாளைக்கே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடுவேன்என மிரட்டவும் அதைக்கேட்டு மகா மகிழ்ந்தாள் கார்த்திக்கும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே அதைக்காட்டிக் கொள்ளாமல்

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகாராணி 2019-05-30 08:14
அருமையான பதிவு
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகாmadhumathi9 2019-05-29 21:39
wow nice epi sasi (y) romba interesting aaga kathai poguthu.ippadiye kadhai neelaathaa endru ninaikka vaikkuthu. :dance: hey karthiyum,mahavum raasiyaagittaanga :clap: waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகாadharv 2019-05-29 20:19
poruthu irundhu parkuradhukku yenunga ninga ippove ivalo kelvi ketkuringa??? ;-) cool and interesting update sasi ma'am :clap: :clap: Karthi n Maha oda part was cute oru vazhiya renduperum avanga avanga feelings purunjikittanga but pavam renduperayum indha sivagami aunty ippadi seasoning panurangale facepalm maha advance aga Inga vandhadhu unga idea so inimi andha aunty over pesama parthukonga :P nama poet-i parkave pavamga irukku :sad: hope vaishu brings him back to form soon. Indha baby heroin avanga hero patri eppadi therinjipanganu parka waiting.

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகாதீபக் 2019-05-29 18:51
Sis today's episode awesome :clap: . Eagerly waiting for next episode whether viashu gets any clue or not ? :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகாmadhumathi9 2019-05-29 17:22
wow 14 pages.padiththuvittu solgiren. :thnkx: 4 this big epi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top