(Reading time: 14 - 27 minutes)

அறுபதாம் கல்யாணம்லாம் இல்ல சும்மா சொன்னே . ..ஆகாஷ் கல்யாணம் இப்ப வேணா அப்ப வேணானு சீன் போட்ட . . உனக்கு கல்யாணமே செஞ்சிவெக்க மாட்டேன்.” என்றார் அலுப்பாக அவன் அப்பா

ஆகாஷ் விளையாட்டாக “இல்ல . .இல்லப்பா இப்பவே வேணா தாலிகட்டிடவாஎன்றவனை முறைத்து தலையில் அடித்துக் கொண்டார் அவரும் விளையாட்டாக

ஆகாஷ் அம்மா பத்மாவதி அக்கா லலிதா அவள் குடும்பத்துடன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.

ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடந்தாலும் துரை வெளியே வராமல் இருக்க அத்தனை ஏற்பாடுகளும் நடந்தன. இயற்கை ஆர்வளர்கள் மூலம் துரை மேல் நிறைய வழக்குகள் போடப்பட்டன.

ராமமூர்த்தி தான் செய்யும் வேலையை பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என ஆகாஷ் மற்றும் சாருவிடம் அன்பு கட்டளை இட்டார். சாரு பெற்றோர் பொருத்தவரை சுவாதி மன உளைச்சளால் சிறிது காலம் ஆசிரமத்தில் இருந்தாள் என சொல்லப்பட்டது.

பத்மாவதி லலிதா ராகவ் மற்றும் சாரு பெற்றோருக்கு எந்த விஷயமும் காதுக்கு எட்டவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு சாரு சுவாதியின் பெற்றோருக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட்டிருந்தது. தன் இரண்டு மாப்பிள்ளைகளையும் தலையில் வைத்து ஆடாத குறைதான். அதிலும் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் மற்றொரு செல்ல குட்டி நபர் அத்தனை மனதையும் கொள்ளை கொண்டிருந்தது. பூமியில் கால் பதிக்கும் முன்னமே அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்டது.

பத்து நாட்களுக்கு பிறகு சுபமுகூர்த்த சுபதினத்தில் ஆகாஷ் சாரு திருமணம் விமர்சையாக நடந்தது. இருவரும் இல்லறத்தில் கால்வைத்தனர். சாரு மகிழ்ச்சியில் திக்குமுக்காடினாள். தன் வாழ்க்கையில் வசந்தமே இல்லை என நினைத்திருந்தவளுக்கு ஆனந்தம் பொங்கியது. தன்னைவிட தன் அக்கா சுவாதி வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டினாள்.

திருமணத்திறகு சூர்யா லியா மற்றும் காஞ்சனா அவர் நடன குழுவோடு வந்திருநதார். திருமணம் சிறப்பாக முடிந்தது.

ஒரு வாரத்திற்கு பிறகு  “உங்க ரெண்டு பேருக்கும் யு.எஸ்க்கு டிக்கெட் புக் பண்றேன் டேட் சொல்லுஎன ராமமூர்த்தி ஆகாஷிடம் கேட்க

அப்பா நாங்க இனிமே இங்கதான் இருக்க போறோம் . . உங்க வேலைல துணையா நான் இருக்கப் போறேன். சாரு டான்ஸ் பெர்பாமென்ஸ்க்கு சிலசமயம் போவா. நான் ஒரு தடவை மட்டும்  யு.எஸ். போயி என் கேசை எல்லாம் லியாக்கு கொடுத்துட்டு. பென்டிங் வொர்க முடிச்சிட்டு வந்திடுவேன். இனிமே இங்கதான் எங்க வாழ்க்கை. உங்களோடவும் அம்மாவோடவும்என்றான்.

இதைக் கேட்டு பத்மாவதி கண் கலங்க “அம்ம்மாஎன சமாதானம் செய்யும் வகையில் அவரை அமர்த்தி அவர் மடியில் தலை வைத்து ஆகாஷ் படுத்துக் கொண்டான்.

ஐ லவ் யூம்மாஎன்றான்

கண்ணை துடைத்துக் கொண்ட பத்மாவதி “போடா இதெல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லுஎன்றார் செல்ல கோபத்துடன்

அதெல்லாம் தினம் தினம் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன்என்றான்

எல்லார் முன் இப்படி அவன் உளறுவான் என சாரு எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தில் வெட்கமும் கோபமும் போட்டிப் போட்டது.

அதற்குள் லலிதா மகன் ஹரி தன் பிஞ்சு கைகளால் “பாத்திஎன சொல்லிக் கொண்டே ஆகாஷை பத்மாவதி மடியில் இருந்து தள்ள எத்தனிக்க அவனை அப்படியே தூக்கிய ஆகாஷ்உனக்கு முன்னால இந்த சீட் நான் ரிசர்வ பண்ணிட்டேன்டாஎன்றான்.

குழந்தைக்கு அவன் பேசியது ஒன்றும் புரியவில்லை எனினும் அது கெக்கே பிக்க்கே வென சிரித்த்து. அவர்கள் வாழ்க்கையில்  இன்பம் பரிபூரணமாய் நிலவதியது.

அப்பொழுது ராமமூர்த்தி போன் அலற அவர் தனியே தன் அறைக்கு சென்றார். ஆகாஷ் பின்னே வந்தான். இரண்டு நிமிடத்தில்ஆகாஷ் நானும் பத்ரிநாத்தும் கொள்ளிமலைக்கு போறோம். யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”

அதற்குள் சுவாதி வீட்டிற்கு வந்தாள். “வாம்மாஎன பத்மாவதியும் ல்லிதாவும் அவளை உபசரித்தனர்.

அவளும் சில நொடிகள் பேசிவிட்டு “அங்கிள் இல்லயாஎன அவர் அறைக்கு இயல்பாக வந்தாள்.

கொள்ளி மலை பத்தின சில இன்பர்மேஷன் இதுல இருக்குஎன பென்டிரைவை கொடுத்தாள்.

நானும் ரவியும் கிளம்பி வறோம்என்றாள்.

ராமமூர்த்தி “வேண்ட புள்ளதாச்சி பொண்ணு நீ வர வேண்டாம். . ரவியும் உன் கூடவே இருக்கட்டும்என்றார்.

ஆகாஷ் “உனக்கு எப்படி தெரியும் சுவாதி . . இப்பதான் அப்பாகே போன் வந்திச்சிஎன கேட்டான்.

சுவாதிய சாதாரணமா எடைப் போட்டுடாத ஆகாஷ் . .  ” ராமமூர்த்தி கூறிவிட்டு கிளம்பியும் விட்டார்.

அவரின் அடுத்த டார்கெட் கொள்ளிமலை என புரிந்துவிட்டது. இந்த வயதிலும் அவரின் நாட்டுப் பற்று அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

அவனும் மனதளவில் செல்ல தயாரானான். “ஹனிமூனுக்கு கொள்ளிமலை போலாமா?”  அவன் மனதை புரிந்துக் கொண்ட சாரு  கேட்டாள்.  

வணக்கம்

என் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

கமெண்ட்ஸ், லைக்ஸ், வாவ், லவ் என தங்கள் ஆதரவை பல விதத்தில் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

லைண்ட் ரீடர்ஸ்களுக்கும் நன்றி.

THANK YOU SO MUCH FOR ALL YOUR SUPPORT.

நன்றி

சுபஸ்ரீ

சுபம்

Episode # 26

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.