(Reading time: 11 - 21 minutes)

தெரில.சரி விடுங்க காலம் எல்லாத்துக்குமே ஒரு பதில் வச்சிருக்கும்.அப்படியிருக்க எதையோ நினைச்சு நாம என் இந்த நிமிஷத்தை வேஸ்ட் பண்ணணும்..ஈவ்னீங் ஃப்ரீ தான எங்கேயாவது டின்னர் போலாமா?”

ஷீவர் கண்டிப்பா போலாம் ரினி..”,என்றவனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.

அங்கு ஆத்விக்கோ ஷான்யா வீட்டிலிருந்து வந்தவுடன் தன் தாய்தந்தையிடம் விஷயத்தைக் கூறினான்.இருவருக்குமே யோசிப்பதற்கு வேறேதும் விஷயம் இல்லை என்பதால் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்திருந்தனர்.

அதன்பின் தனதறைக்கு வந்தவன் மனம் கேட்காமல் ஷான்யாவிற்கு அழைத்தான்.முதலில் முழு அழைப்பும் சென்று துண்டிக்கப்பட்து.மீண்டுமாய் அவன் முயற்சி செய்ய இரண்டாவது நொடியே அழைப்பு ஏற்கப்பட்டு மறுபுறம் அதியாய் இருந்தது.

ஹலோ…”

“….”

ஹலோ ஷான்யா..”

“…”

ஹலோ..”

ம்ம்

ஹே கால் அட்டெண்ட் பண்ணா பேசமாட்டியா நீ?”

அதற்கும் லேசான விசும்பல் சத்தமே பதிலாய் கிடைத்தது.அவனுக்கே ஒரு நொடி தன் தவறு புரிந்தது.

ஷான் அழறியா?சாரி டா  நான் வேணும்னு பண்ணல எதையும்..”

ஐ அம் சாரி..”

ஷான்..”

உங்களை நிறைய நிறையவே கஷ்டப்படுத்திட்டேன் ஆத்விக்..அதிலேயும் நேத்து நான் பேசினது ரொம்பவே டூ மச்னு எனக்கே தெரியும்..ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க.”

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை..உண்மையை சொல்லனும்னா நான் தான் உன்னை நிறையவே கஷ்டப்படுத்திட்டேன்.உன் நிலைமைல இருந்து பார்த்தா தான் உன் கஷ்டம் புரியுது.ஆனாலும் அங்கிள் இவ்ளோ சீக்கிரம் சம்மதிப்பாருனு நினைக்கவே இல்லை.உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான?”

“…”

அடிப்பாவி என்ன அமைதியா இருக்க கஷ்டப்பட்டு அந்த ஹிட்லரை வழிக்கு கொண்டு வந்துருக்கேன்..”

ஹா ஹா எங்கப்பா உங்களுக்கு ஹிட்லரா?”

பார்ரா அப்பாவை சொன்னதும் கோபம் வருது..என் மாமனாரை நான் என்ன வேணாலும் சொல்லுவேன்..”

..அவ்ளோ பாசமா இருந்தா மாமனாரோடேயே குடும்பம் நடத்துங்க..என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்குறீங்க?”

ஆனா நிஜமாவே உன்னை விட உங்கப்பா பரவால்லை தான்..நீ தான் சரியான கல்நெஞ்சக்காரி..என்னை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லை உனக்கு..”

சாரி ஆத்விக்…”

ஏய் சும்மா விளையாட்டுக்கு சொன்னா ஏன் இவ்ளோ சீரியஸ் ஆகுற..சரி ஜோக்ஸ் அப்பார்ட் நிஜமாவே என்னை உனக்கு பிடிச்சுருக்கா..மனசுல உள்ளதை மறைக்காம சொல்லு

ஐ லவ் யூ ஆத்விக்..”

ஷான்!!!”

லவ் யூ மேட்லி ஆத்வி..இப்போ இல்லை நீங்க உங்க காதலை வெளிப்படையா என்கிட்ட சொன்னதுல இருந்தே.அன்னைக்கு நைட் யாருக்கும் தெரியாம எப்படி அழுதேன் தெரியுமா.ஏன்னு தெரியாமயே அவ்ளோ பாரம் மனசுல.அந்த நிமிஷம் கண்டிப்பா காதல் எல்லாம் இல்லை தான்.இருந்தாலும் யார் மேலேயும் ஏற்படாத ஒரு உள்ளுணர்வு.அதை எப்படி எடுத்துக்குறதுனு கூட தெரியாம தான் அப்படி அழுதேன்.

அதுக்கப்பறம் ஒவ்வொரு தடவை உங்களை மீட் பண்ணணும் போதும் தேவையில்லாம என்னால நீங்க கஷ்டப்படுறீங்கனு மனசுகுள்ள வலிச்சுட்டே இருக்கும்.எதாவது மேஜிக் நடந்துறாதானு ரொம்ப ஏங்கிருக்கேன்.இன்னைக்கு நடந்தது அப்படி ஒரு மேஜிக் தான் ஆனா அதுக்காக நான் ஒண்ணுமே பண்ணல.எனக்காக நீங்க எந்த அளவு உங்க இடத்தை விட்டு இறங்கி வந்துருக்கீங்கனு நினைக்கும் போது தேங்க்ஸ்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட முடியுமானு தெரில.

என் மேல இப்போ உங்களுக்கு இருக்குற அன்பை விட ஆயிரம் மடங்கு உங்க மேல எனக்கு இருக்கு.அதை எதிர்காலத்துல உங்க மனைவியா வாழும்போது தான் உணர வைக்க முடியும்.அதனால தான் இப்போதைக்கு ஐ லவ் யூ சொல்லி புரிய வைக்க முயற்சி பண்றேன் ஆத்விக்..”

அட ஷான் நீ இவ்ளோ அழகா கூடா பேசுவியா..நீ பேச பேச இப்போவே உன்னை என்னோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.