“ஹலோ ரினி..ஆர் யு ஓ.கே?”
“ரேஷ்..யா அதெல்லாம் ஒண்ணுமில்ல..வந்து..”
அவளின் தயக்கத்தை உணர்ந்தவனுக்கு சற்றே உதட்டோரப் புன்னகை எழுந்தது.இருந்தும் அவளை மேலும் தவிக்க விட விரும்பாதவனாய் மறு யோசனையின்றி அவளிடம் கூறியிருந்தான்.
“ஐ லவ் யூ ரினி..”
“லவ் யூ டூ ரேஷ்…”
“தேங்க்ஸ் பார் பீயிங் மை ப்யூச்சர் ரினி..”
“ரேஷ்!”
“இல்லை ரினி உனக்கே தெரியும் எனன் பாஸ்ட் நான் மறக்க நினைக்குற ஒரு விஷயம் அது எந்தளவு உண்மையோ என் எதிர்காலத்தை ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழணும்னு நான் நினைக்குறதும் உண்மை.
இதை ஏன் சொல்றேன்னா கண்டிப்பா எந்த ஒரு கட்டத்துலயும் உன்னோட கண்ணீருக்கு காரணமா நான் இருக்க மாட்டேன்.இப்போ உனக்கு கிடைக்குற அத்தனை சந்தோஷமும் பல மடங்கா அதிகமா தான் ஆகும் அதுக்கு நான் பொறுப்பு.”
“ரேஷ் உங்க கூட இருந்தா என்னால சந்தோஷமா இருக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்ததுனால மட்டும் தான் நான் உங்களை விரும்புறேன்.பணம் பேர் புகழ் எல்லாம் கடந்து இரண்டு மனசும் இணைஞ்சு வாழ்க்கையை தொடங்குறப்போ வர்ற சந்தோஷம் தான் முக்கியம் என்னை பொறுத்த வரைக்கும்.
அப்படி பார்த்தா உங்ககூட இருக்குறப்போ அதை நிறைவே உணர்ந்துருக்கேன்.அது எந்தவித எதிர்பார்ப்பும் உறவும் இல்லாம இருக்கும்போதே அத்தனை வெளிப்படையா தெரியுதுனா கல்யாணம்ங்கிற பந்தத்துல இணையும் போது அதிகமா தான் ஆகும்.அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.”
“தேங்க்ஸ் ரினி நீ இந்தளவு என்னை புரிஞ்சுக்குறதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஆனால் இப்போவும் இதெல்லாம் கனவு மாதிரா தான் இருக்கு.”
“அப்படியா?!இருங்க இப்போவே இது கனவில்லைனு ப்ரூவ் பண்றேன்.கொஞ்ச நேரம் லைன்ல அமைதியா இருங்க நான் சொல்ற வரை பேசக்கூடாது.”,என்றவள் அவன் அழைப்பை ஹோல்டில் போட்டுவிட்டு ஜீவிகாவிற்கு அழைத்தாள்.
கான்பர்ன்ஸ் கால் போட்டவள் ஜீவிகாவிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஹாய் ஜி பிஸியா?”
“இல்லைனு சொன்னா பேச மாட்டாங்களா?”
“ஐயோ போச்சு மாட்டினேனா?”
“என்ன மாட்னீங்க?அப்போ என்ட்ட பேசினா மாட்டின மாதிரியா?”
“கடவுளே சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டேனே!”,எனும்போதே ரேஷ்வா சிரித்துவிட ஜீவிகா ஆரம்பித்துவிட்டாள்.
“அட ஃப்ராட்டுங்களா..முன்னயெல்லாம் எனக்குத் தெரியாம மொக்கை போட்டுட்டு இருந்தீங்க இப்போ என்னடானா எனக்கு கால் போட்டு சொல்றீங்க..அப்பறம் நான் எதாவது சொன்னா அந்த நல்ல உள்ளம் வந்து ச்ச ச்ச அப்படியெல்லாம் எதுவுமே இல்லைனு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணும்.”
“ஜீஜீஜீஜீஜீ!!!போதும்..நானே பஞ்சாத்துக்கு உங்களை நாட்டாமையா கூட்டிட்டு வந்துருக்கேன்.நீங்க இப்படி பண்றீங்களே!”
“பஞ்சாயத்தா??!யோவ் ரேஷ் சின்னப் பொண்ணை என்னயா பண்ண?பாவம் பச்ச மண்ணு ரினி பேபி..”
“அப்படி சொல்லு ஜீவி..என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லிட்டாரு ஜீ உன் ப்ரெண்ட்..”
“ஐயையோ கைப் பிடிச்சு இழுத்துட்டான்..சின்ன குழந்தையோட மனசை கெடுத்துட்டான்.கிராதகா..உன்னை என்ன பண்ணலாம்..”
“சிரிப்பை அடக்க மாட்டாதவனாய்,”ஜீ சத்தியமா முடில விட்டுரு..நீ தான லவ்வா லவ்வானு கேட்டுட்டே இருந்த அதான் உன் ஆசையை நிறைவேத்திட்டேன்..”
“அடப்பாவி..இந்த டயலாக்கெல்லாம் படத்துல பேசிருந்தா இந்நேரம் எங்கேயோ போய்ருக்கலாம்..இருந்தாலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.”
“ஜி இவ்ளோ பேசுற அந்த பச்சை மண்ணு என்ன பதில் சொல்லிச்சுனு நீயே கேளேன்.”
“அதான பஞ்சாயத்துனு வந்துடுச்சு இரண்டு பக்கமும் பேச வேண்டியது நம்ம