(Reading time: 12 - 24 minutes)

படத்தின் பாடல்களும் ட்ரெய்லருமே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் முதல் காட்சியே ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது.பல காட்சிகள் வெகுவான கைத்தட்டலைப் பெற்றிருந்தன.

ரேஷ்வாவிற்கு மனம் நிறைந்திருந்தது.மீண்டும் இழந்த பெயரைப் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.படம் முடிந்து வெளியில் வரும் நேரம் அவனை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்களும் பார்வையாளர்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

காரில் ஏறி அமர்ந்தவனுக்கு இனம்புரியா உவகை எழுந்திருந்தது.அதை தன் தாயோடு பகிர்ந்து கொள்ள எண்ணியவனாய் அவருக்கு அழைத்தான்.

ரேஷ் படம் பாத்துட்டியா ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?”

மாம்..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு..கண்டிப்பா எதாவது கேட்டகிரில அவார்ட் வாங்கிடும்னு சொல்றாங்க..”

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா..நான் போய் கோவில்ல அர்ச்சனை பண்ணிட்றேன்.”

ம் மா..அப்பறம் உங்ககிட்ட இன்னொரு சந்தோஷமான விஷயத்தைக் கூட சொல்லலாம்னு இருக்கேன்.”

சொல்லுப்பா!!”

ம்மா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.அவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.”

ரேஷ் கண்ணா!!”

ஆமா மா கண்டிப்பா நம்ம பேமிலிக்கு ஏத்த பொண்ணா தான் ம்மா இருப்பா..அவளும் என்னை மனசார விரும்புறா..”

உன் சந்தோஷம் தான் ரேஷ் எனக்கு முக்கியம்.குடும்பம் குழந்தைனு நீ ரொம்ப வருஷம் சந்தோஷமா இருக்கணும் அது மட்டும் தான் நான் கடவுள்கிட்ட வேண்டுறது.பொண்ணு பேர் என்னப்பா என்ன பண்றா?”

ரினிஷா மா!”

இந்த மூவியோட ஹிரோயின் இல்ல?!”

ஆமா மா..”

ம்ம் நானும் நிறைய கேள்விப் பட்டுருக்கேன் அவளைப் பத்தி..ரெண்டு பேரும் ஒரே பீல்ட் அது பல நேரத்துல ப்ளஸ் சில நேரத்துல மைனஸ்.வாழ்க்கையை ரொம்பவே ப்பேலென்ஸ்டா கொண்டு போனும் கண்ணா..”

உங்க பயம் புரியுதும்மா கண்டிப்பா எந்த தப்பும் நடக்காது..”

நல்லது கண்ணா..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..நீ இத்தனை தெளிவா பேசுறதே எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு..”

உண்மைதான் இத்தனை பொறுமையும் தெளிவும் என்கிட்ட இருந்தது இல்லம்மா கண்டிப்பா..இதுக்கெல்லாம் காரணமான சில பேர் இருக்காங்க இந்த வீக்கெண்ட் சென்னை வரீங்களா நீங்க அவங்களையெல்லாம் கண்டிப்பா பாக்கணும்..ப்ளீஸ்..”

கண்டிப்பா பாக்கலாம்..முடிஞ்சா என் மருமகளையும் பார்க்கலாம்..ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன் ரேஷ்

தேங்க்ஸ் மாம்..வெயிட்டிங் டு சீ யூ..பை..”

அழைப்பை த் துண்டித்தவனுக்கு அடுத்த அழைப்பு ரினிஷாவிடமிருந்து வந்தது.

ரேஷ்!!”

ரினி பேபி!!”

ஹா என்ன ஜி செம ஹாப்பி மூட்ல இருக்கீங்க போல?”

ம்ம் ரொம்பவே..சரி சொல்லு ஷோ முடிஞ்சுதா ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு..”

ஹா ரொம்ப ரொம்ப பாசிடிவ் ரிவ்யூஸ் ப்ரம் ஆல் சைட்..அதுவும் உங்க கம் பேக் தான் ஹாட் டாப்பிக்..”

அதுமட்டும் தானா?”

அப்படினா??புரில ரேஷ்..”

ஹான்..ஹீரோ ஹீரோயின் பேர் கூட நைஸ்னு கேள்விப்பட்டனே?!”

“….”

ரினி பேபி..”

ம்ம்..”

ஐ லவ் யூ

லவ் யூ டூ ரேஷ்..ஐ அம் சோ ஹேப்பி..”

ம்ம் இன்னொரு ஹேப்பி நியூஸ் கூட சொல்றேன்..அம்மாகிட்ட நம்ம லவ்வை பத்தி சொல்லிட்டேன்.அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.இந்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லிருக்காங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.