(Reading time: 12 - 24 minutes)

கடமை.சொல்லுமா ரினிஷா அவருக்கு நீ என்ன பதில் சொன்ன?”

ரசிகைகளின் கனவு கண்ணன் மிகப் பெரிய ஹீரோ ப்ரோப்போஸ் பண்ணி நோ சொன்னா நல்லாயிருக்காதுல அதான் ஓகே சொல்லிட்டேன்.”

மங்குனி அமைச்சரே இப்படியா முதல் பால்லயே க்ளீன் போல்ட் ஆகுறது.ஒரு ஹீரோயின்ங்கிற கெத் காட்டிருக்க வேணாம்..”

ஐயோ ஜீ அப்படியா சொல்ற..அச்சோ பாரேன் கொஞ்சம் கூட உலகம் தெரியாதவளா இருந்துருக்கேன்.இப்போ என்ன பண்றது?!”

இப்போ இரண்டு பேரும் நிறுத்தப் போறீங்களா இல்லையா?ஜீ உனக்கு ஏன் இந்த உயர்ந்த உள்ளம் கமிட் ஆன அன்னைக்கே பிரிச்சு விட்டுருவ போலேயே..கருணை காட்டும்மா..”

ஹா ஹா பொழச்சுப் போங்க..எப்படியோ அடுத்த கல்யாணத்துக்கு ஆள் ரெடி சீக்கிரமே கல்யாண சாப்பாடு சாப்டலாம்..”

ஐயோ ஜீ நீ வேற இப்போதைக்கு எல்லாம் கல்யாணம் இல்ல குறைஞ்சது ஒரு வருஷமாவது ஆகும்.இருக்குற படத்தெல்லாம் முடிச்சு ஆகணும்..அப்பறம் தான்.”

அடடா என்ன ரேஷ் இது கமிட் ஆகியும் உங்களை சந்நியாசியா அலைய விட்டுறாங்க..”

நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான் வேற என்ன பண்றது பொறுத்துதான் ஆகணும்..”

ஹா ஹா ஜோக்ஸ் அப்பார்ட் ஜீவி ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி..சூப்பர் பேர் தெரியுமா நீங்க இரண்டு பேரும்.மேட் பார் ஈச் அதர்னு சொல்லுவாங்களே அப்படியிருக்கீங்க.இன்னையோட வீடியோ கூட பார்த்தேன் அவ்ளோ நேச்சுரலா இருக்கு.இதே மாதிரி சந்தோஷமா நூறு வருஷம் வாழணும் ரெண்டு பேரும்.சீக்கிரமே வீட்டுல சொல்லி சம்மதம் வாங்குங்க..”

தேங்க் யூ சீனியர் சீக்கிரமே சிறப்பா செஞ்சுரலம்..”

நான் சீனியரா?”

இல்லையா பின்ன..உங்களையும் ப்ரோவையும் பார்த்து தான் நாங்களே கமிட் ஆய்ருக்கோம்..நீங்க தான எங்க ரோல் மாடல்..”

ஆஹா..இப்படி வேற ஒண்ணு இருக்கா..இருந்தாலும் சும்மா சொல்ல கூடாது என் சூப்பர் மார்கெட் கொஞ்சம் இல்ல ரொம்ப ரொம்வே பாசக்கார பயபுள்ள தான்..என்ன என்கிட்ட மாட்டிகிட்டு முழிக்குறாரு பாவமா..”

அப்படி எல்லாம் இல்லை ஜீ..நீங்க ரெண்டு பேரும் பார்க்குறதுக்கு அப்படியே க்யூட் ஆன டாம் அண்ட் ஜெர்ரி..பார்த்துட்டே இருக்கலாம்..”

ரேஷ்எங்களை பார்த்துட்டே இருந்தா நீங்க எப்போ லவ் பண்றது?”

ப்பாபா தெரியாம சொல்லிட்டேன் ஜீ..இப்படி மொக்கை மட்டும் போடாதயேன்..”

ம்ம் சரி சரி பொழச்சு போங்க..சரி முதல்ல அம்மாகிட்ட விஷயத்தை சொல்லுங்க கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..”

ம்ம் நானும் அதை தான் நினைச்சுருக்கேன் ஜீ..பேசிட்டு சொல்றேன்..”

அவர்கள் பேசி முடிக்கவும் ஜெயந்த் கடையிலிருந்து வரவும் சரியாய் இருந்தது.

வாங்க தொழிலதிபர் அவர்களே..ஏன் இன்று இத்தனை தாமதம்?”

உனக்கே அநியாயமா தெரில..போனதே மதியானத்துக்கு மேல..இப்போ எல்லாம் கடைக்கு பாதி நாள் இப்படி தான் போறேன்.வேலை பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க..”

விடுங்க விடுங்க அரசியலில் இதெல்லாம் ஜகஜம்..அப்பறம் இப்போ தான் ஒரு காதல் ஜோடி கால் பண்ணி விஷயத்தை சொன்னாங்க..”,என்றவள் ரேஷ்வா ரினிஷாவைப் பற்றி கூற ஜெயந்திற்குமே மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனாலும் நீ ஒரு தீர்க்கதரிசி ஜீவிக்குட்டி எப்படி அப்போவே இதை கண்டுபிடிச்ச..”

ரொம்ப புகழாதீங்க மாம்ஸ் வெட்கமா இருக்கா இல்லையா!”

வெட்கமா?!அதுக்கு ஸ்பெல்லிங் சொல்லு பார்க்கலாம்?”

அடப்பாவி எனக்கே கவுண்ட்டர் கொடுக்குறீங்களா..இதோ வரேன் இருங்க..”,என்றவள் அவனைத் துரத்த ஆரம்பிக்க சில நொடிகள் ஆட்டம் காட்டியவன் அவளைத் தன்புறம் இழுத்து தன்னோடு சாய்த்துக் கொண்டான்.

நாட்கள் அத்தனையும் அழகழகாய் நகர்ந்து கொண்டிருக்க ஆத்விக் ஷான்யாவிற்கு இரு வீட்டாராலும் முடிவு செய்யப்பட்டு திருமணம் முடிவானது.ஒரு மாதத்தில் வரும் முகூர்த்ததில் திருமணம் என்று முடிவு செய்தனர்.

இங்கு ரேஷ்வா ரினிஷாவின் படம் இன்று முதல் திரையிடப்படுகிறது.இருவரும் காலையில் முதல் காட்சிக்கே கிளம்பி விட்டனர்.ஆனாலும் ரேஷ்வா ஒரு இடத்திலும் ரினிஷா ஒரு இடத்திலும் பார்ப்பதாய் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.