(Reading time: 13 - 25 minutes)

தெரியுது. “ என்றார் துர்கா

“ஹி.ஹி கண்டுபிடிச்சுட்டீங்களா?” என்று வழிந்தாள்.

“உன்னைப் பெத்தவடி நானு. உன் நினைப்பெல்லாம் எப்படிப் போகும்னு எனக்குத் தெரியாதா ?” என்றார்.

“சரிம்மா, சொல்லுங்க. இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க?”

“என்னவோ தெரியலைடா . உன்கிட்ட பேசணும் போலே இருந்தது. சொல்லு இப்போ எங்கே இருக்கே?”

அவள் உதய்பூர் அரண்மனை பற்றி எல்லாம் விலாவரியாக விளக்க, அவரும் கேட்டுக் கொண்டார். கண்ணாடி மஹால் பற்றிச் சொல்லியவள், பிரெண்ட்ஸ்சோடு சேர்ந்து கிண்டல் அடித்தது எல்லாம் சொன்னாள்.

அவள் சொல்லக் கேட்டவர், அங்கே நிறைய கடைகள் இருப்பதை தெரிந்து கொண்டு,

“செல்லம், வரும்போது நல்லா அழகா காட்டுற கண்ணாடி இருந்த ஆர்டர் பண்ணி அனுப்பி விடேன்” என்றார்.

“அம்மா, அது கண்ணாடி. பி.சி ஸ்ரீராம் கேமரா இல்லை. அவர்தான் மொக்க சீன் கூட தன்னோட கேமரா வழியா அழகான சீன்னா காமிப்பார். இந்தக் கண்ணாடியில் இருக்கிற மொக்கை இன்னும் மொக்கையாத் தான் தெரியும்” என்று கலாயிக்க,

“அடிப் போடி. எங்களுக்கு இது தெரியாதாக்கும். உங்கள மாதிரி வானரங்களையே இத்தனை நேரம் அந்தக் கண்ணாடி சமாளிச்சு இருக்குன்னா, என்னை மாதிரி அமைதி சிரோன்மணியை அழகாதான் காட்டும்” என்றார்.

“ஹையோ .. அடுத்த மிஸ் யுனிவர்ஸ் நீங்க. கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும் “

“போடி. உனக்குப் பொறாமை” என்று பதில் சொல்லி வைத்தார்.

இவள் பேசிக் கொண்டே வெளியே வந்ததை அவள் உணரவே இல்லை. பேசி வைத்தப் பின் சுற்றிப் பார்க்க, நேராக வாசலுக்குச் செல்வதற்குப் பதில் , வாசல் அருகில் இருந்த காரிடார் பக்கம் திரும்பிவிட்டாள்.

திரும்பி வாசல் நோக்கி வரும்போது, தன்னைத் தவிர வேறு யாரோ அந்த இடத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டாள். சட்டென்று அவள் புலன்கள் அலெர்ட்டாக, அவள் பின்னாடி ஒருவன் வந்து மயக்க மருந்து கர்சீப் எடுத்து அவள் மூக்கில் வைத்தான்.

சட்டென்று மூச்சை அடக்கி விட்டாலும், அந்த நெடி சற்று உள்ளே சென்று தான் விட்டது. அதனால் லேசாக அவள் தள்ளாட, பின்புறம் இருந்தவன் அவள் கைகளைப் பின்புறமாக வளைத்துக் கட்டினான். அவள் தன கால்களை அசைத்தாலும், பின் புறமாக அந்த ஆள் நின்றதால், அவன் இருக்கும் இடத்தைக் கணிக்க முடியவில்லை. அப்படியும் குத்து மதிப்பாக மிதித்ததில் ஒருவனுக்கு உள்ளங்காலில் நல்ல அடி போலும். ஆ என்று அலறிய சத்தம் கேட்டது.

இது எல்லாம் இரண்டு மூன்று நிமிடத்திற்குள் நடந்தது. அவள் மயங்கி விடுவாள் தூக்கிச் செல்லலாம் என்று எண்ணியிருந்தவர்கள், அவள் மயங்கி விழவில்லை எனவும், மீண்டும் அந்தக் கர்சீப் முகர வைத்தார்கள்.

ஆனால் இம்முறை அவள் மூச்சை இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தவன் , அழுத்த வரும்போது கிருத்திகா கத்த ஆரம்பிக்கவும், சட்டென்று வாயில் பிளாஸ்டர் ஒட்டி விட்டான்

அதற்கு மேல் அவர்களால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளை இழுத்துச் சென்றுக் கொண்டு இருக்கும்போது தான் வேறொரு காலடிச் சத்தம் கேட்கவும், அவளை அப்படியே விட்டு விட்டு ஓடிவிட்டனர்.

அவள் சொல்லி முடிக்கவும் ப்ரித்வி

‘அவர்கள் யார் என்றுத் தெரிந்ததா? முகம் பார்த்தாயா?” என்றுக் கேட்டான்.

“இல்லை. முகம் பார்க்கவில்லை. முழுக்க முகத்தை மறைத்து இருந்தார்கள்.”

“ஏதாவது பேசினார்களா? என்ன மொழியில் பேசினார்கள்?

“இல்லை ஒன்றும் பேசவில்லை.”

“எத்தனை பேர் இருந்தார்கள்?”

“இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கலாம். “

“எப்படிச் சொல்கிறாய்?

“எனக்கு மயக்க மருந்து கொடுக்க முற்பட்டவன் வேறு. கைகள் கட்டியவன் வேறு. நான் மிதித்தது வேறு ஒரு காலை. மூவருமே பின் பக்கமாக நின்று இருந்தார்கள். தூணின் மறைவுப் பகுதியில் நின்று இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்”

“ஹ்ம்ம்..” என்று யோசித்தவன், அவளை சாய்வாக உட்கார வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப் போய் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான். அவன் பேசியது இவளுக்குப் புரியவில்லை என்றாலும், தன்னைப் பற்றிதான் பேசுகிறான் என்றுப் புரிந்து கொண்டாள்.

“சார், நாம இப்போ ஆபீசியலா ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறது நல்லது. நாம மட்டுமே தேடினால் அவங்களைப் பிடிக்கிறது கஷ்டம். “ என்றான்

எதிர்முனையில் என்ன சொல்கிறார்கள் என்றுப் புரியாவிட்டாலும், ப்ரித்வி பதில் கொடுத்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தாள்.

“நீங்க இதுக்கு அப்ஜெக்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கலை சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.