(Reading time: 13 - 25 minutes)

இட நெருக்கடி காரணமாக இவர்களில் சிலர் வெளியே செல்ல ஆரம்பித்தனர். ராகவியும், கிருத்திகாவும் அருகருகே நின்று பேசிக் கொண்டும் , மொபைலில் போட்டோ எடுத்துக் கொள்வதையும் பார்த்துவிட்டே அங்கிருந்து நகர்ந்து இருந்தான் ப்ரித்வி.

சற்றுப் பொருத்து உள்ளே இருந்த இவர்கள் மாணவர்கள் அனைவரையும் வெளியே வரச் சொல்லி திலிப்பிடம் சொல்லி அனுப்பினான்.

அவன் சொல்லவும் எல்லோரும் வெளியே வர, ராகவியும் வந்தாள். அவளோடு கிருத்திகா வராததைப் பார்த்து சுற்று முற்றும் தேடினான் ப்ரித்வி. அவளைக் காணாமல் ராகவியிடம் கேட்டான்.

“ராகவி, கிருத்திகா எங்கே?’

“கிருத்தியா? அவள் அப்போதே வெளியில் வந்து விட்டாளே?”

“நீங்களும், அவர்களும் செல்பி எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேனே?

“ஆமாம் சார், ஆனால் அடுத்த சில நிமிடங்களில் போன் வந்ததுன்னு வெளியில் வந்துட்டா” என, சட்டென்று ஒரு பதட்டம் ஒட்டிக் கொண்டது ப்ரிதிவ்யிடத்தில்.

யாரிடத்திலும் வெளிக்காட்டாமல், அவன் உதவியாளர்களிடத்தில் அடுத்த அடுத்த இடங்களை சுற்றிப் பார்க்க அழைத்துப் போகச் சொன்னான்.

கேள்வியாகப் பார்தவர்களிடத்தில் “கிருத்திகா பக்கத்தில் ரெஸ்ட் ரூம் போயிருக்காங்களாம். வந்ததும் நான் அழைத்து வருகிறேன்” என்றான்.

“சேர்ந்தே போகலாமே சார்” என்று ப்ரோபசர் கேட்க,

“இல்லை சார் , ஏற்கனவே டைம் ஆகிட்டு இருக்கு. ஒருத்தர்க்காக எல்லோரும் வெயிட் பண்ணினால், நிறைய இடம் பார்க்க முடியாமப் போயிடும். நீங்க போங்க. நான் அவங்களை அழைச்சுட்டு வரேன்” என்றான்.

கொஞ்சம் தயக்கத்துடன் என்றாலும், அவன் சொல்வதில் உள்ள உண்மை உணர்ந்தவர்களாக எல்லோரும் சென்றனர்.

அவர்கள் சென்ற பின், இவர்கள் வந்த வழியில் இல்லாது , இன்னொரு வழியில் உள்ளே சென்றுப் பார்த்தான்.

கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியே வரும் வழியில், ஒரு பக்கமாக காரிடார் போன்ற அமைப்பு இருக்க அங்கே சென்றுத் தேடித் பார்த்தான்.

அது நீளமாக உள்ளே சென்று கொண்டே இருந்தது. அங்கே சற்றுத் தூரத்தில் மெலிதாக முனகல் சத்தம் கேட்டது. அந்த இடம் நோக்கிப் ப்ரித்வி செல்ல, அவனின் காலடிச் சத்தம் கேட்டு யாரோ ஓடும் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த இடத்தை நெருங்கி சுற்றுமுற்றும் பார்க்க, இரு பெரிய தூண்களுக்கு நடுவில் ஒரு சிறு பாதை போன்ற அமைப்பு இருந்தது. அங்கே ஜன்னல் இருக்க, அதை ஒட்டி சிறு மேடை இருந்தது. அதில் கிருத்திகா கைகள் கட்டப் பட்ட நிலையில் இருந்தாள். வாயும் பிளாஸ்டர் ஓட்டப் பட்டு இருந்தது,

வேகமாக அவள் அருகில் வந்து அதை எடுத்தவன்,

“என்ன ஆச்சும்மா?” என்றுக் கேட்டபடி கைகளையும் கட்டவிழ்த்து விட்டான்.

“சாரி பாஸ். என்னவோ இந்த டூர் ஆரம்பத்தில் இருந்தே என்னால் பிரச்சினை தான். எனக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டுக் கொடுங்க. நான் ஊருக்குத் திரும்பறேன்” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

“ஹேய், முதலில் என்ன ஆச்சு சொல்லு?”

“ராகவியும், நானும் அந்த மஹால் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு வீட்டில் இருந்து போன் வந்தது” என்றுக் கூறியவள் அப்போது நடந்தை விவரித்தாள்.

போனில் அவள் அம்மா அழைக்கவும். “சொல்லுங்கள் தாயே, சொல்லுங்கள்” என்றாள்.

“என்னத்தைடி சொல்லச் சொல்ற? முதல் ரெண்டு நாள் போன் பண்ணின சரி. அதுக்கு அப்புறம் எப்போவாது போன் பண்ணி, ஹாய் மா. நான் அங்க இருக்கேன், இங்க இருக்கேன்னு சொல்லிட்டு வச்சுடற. நைட்டும் என்னவோ சீக்கிரமே தூங்கப் போறேன்னு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிட்டு விட்டுடற. அங்கே என்ன பிரச்சினை இழுத்து விட்டு இருக்க?“  என்று அவள் அம்மா துர்கா , காளி அவதாரம் எடுத்தார்.

அவர் சொல்வது உண்மையே. இந்தக் கனவு குழப்பங்களால் கிருத்திகாவிற்கு அவள் அம்மாவிடம் அதிகம் பேச முடியவில்லை. பேசினால் தன்னை அறியாமல் எதுவும் சொல்லிவிடுவோம் என்று தோன்றியது. அதிலும் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னால், டூரை தொடர்வதுக் கஷ்டமே. எனவேதான் ஹாய், பாய் யோடு நிறுத்தி விட்டாள். அதையும் அவர் ஊகித்துக் கேட்கவும் பதில் சொல்ல சற்றுத் திணறினாள்.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு  

“ராஜமாதா நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பிரச்சினை வரப் போகுது?” என்றவள், மனதிற்குள் “பிரச்சினையே நீங்கதானே கொண்டு வருவீங்க” என்று கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

“இந்த வெட்டி சீன் எல்லாம் வேண்டாம். நீ மனசுக்குள்ளே என்ன நினைக்கிறன்னு நல்லாவேத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.