திண்டுக்கல் டவுன்
வீரபாண்டியனின் வீட்டில்
சாவித்ரி ஆரத்தி எடுப்பதைக் கண்ட தாமரையோ முதலில் சினேகமாக சிரித்தாள். அதற்கு அவர் உம்மென இருக்கவே அதோடு அமைதியானாள். அருகில் வீரா இருப்பதால் சாவித்ரியாலும் தாமரையை எதுவும் பேச முடியாமல் போனது. ஆரத்தி எடுத்து முடித்த உடன் வீராவைப் பார்த்தார் சாவித்ரி. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாமரை உடனே புரிந்துக் கொண்டாள் தன் கணவரிடம்
”என்னங்க ஆரத்தி எடுத்தாங்கள்ல அதான் தட்டுல பணம் போடுவீங்களான்னு பார்க்கறாங்க” என சொல்ல வீரா அதிர்ந்தான். தன்னிடம் 10 பைசா கூட இல்லை என்பதை உணர்ந்தவன் தாயைப் பார்த்து கேவலமாக இளித்து
”பணம் இல்லை” என்றான் மெதுவாக
அதைக்கேட்டு அதிர்ந்த தாமரையோ சாவித்ரியைப் பார்க்க அவரோ ஏளனமாக சிரித்துவிட்டு ஆரத்தி தட்டை புவனாவிடம் தந்தார். அவரின் சிரிப்பைக்கண்டு கோபமடைந்த தாமரையோ தன் கணவரிடம் மெதுவாக பேசினாள்.
”பணம் இல்லைன்னு ஏன் சொன்னீங்க பாருங்க அந்தம்மா உங்களை கேவலமா நினைக்கறாங்க”
”பொய் சொல்ல தெரியாதுங்க” என சொல்ல அவளோ அந்நேரம் அவனது நேர்மையை மெச்சிக் கொண்டாலும் மானம் போய் விட்டதாகவே உணர்ந்தாள்.
சாவித்ரியோ தாமரையும் வீராவும் முணுமுணுவென தங்களுக்குள் பேசுவதைக்கண்டு
”என்னப்பா என்ன அங்க கதை ஓடுது” என கேட்க உடனே வீராவும் தன் தாயிடம் தாமரையைக்காட்டி
”இவங்க தாமரை” என அறிமுகப்படுத்த தாமரையும் சிரித்த முகத்துடன் அவரைப் பார்த்து கைகூப்பி
”வணக்கம்” என்றாள்
அவரோ உதட்டை சுழித்து தலையை மெல்ல அசைக்க அது அவளுக்கு பிடிக்காமலே போனது. தாயின் சைகைகளை புரிந்துக் கொள்ள முடியாத வீராவோ தன் தந்தையைப் பார்க்க அவரோ தாமரையை காட்டி காலையும் காட்டி ஏதோ சைகை செய்ய உடனே புரிந்து விட்டது. சட்டென தாமரையிடம்
”ஏங்க அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாம் வாங்க” என அழைக்க அவளோ
”நாம ஏங்க அவங்க கால்ல விழனும் அவங்க ஹவுஸ்ஓனர்தானே” என சொல்ல அவனுக்கு பக்கென்றது.
என்ன சொல்வது ஏது சொல்வதென தெரியாமல் திருதிரு விழித்தான். அந்நேரம் வெங்கடாச்சலமே தன் மகனின் நிலைமையைக் கண்டு நொந்தபடியே சாவித்ரியின் பக்கம் வந்து நின்றவர் தாமரையிடம்
”பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கறது தப்பில்லைம்மா யாரா இருந்தா என்ன இப்ப வாம்மா” என அன்பாக அழைக்க அவர் பேசிய விதம் தாமரைக்கு மிகவும் பிடித்திருந்தது அவள் மகிழ்ச்சியாக தன் கணவரை பார்த்து
”வாங்க ஆசிர்வாதம் வாங்கலாம்“ என அழைக்க அவன் நிம்மதியாக பெருமூச்சுவிட்டு சிரித்தபடியே அவளுடன் இணைந்து சாவித்ரியின் காலில் விழுந்தான். கூடவே வெங்கடாச்சலமும் இருந்த படியால் அவர் காலிலும் விழுந்து எழுந்தார்கள் இருவரும்
”16ம் பெற்று பெருவாழ்வும் வாழனும்” என வெங்கடாச்சலம் ஆசிர்வதிக்க
”பெத்தவங்களை மதிச்சி வாழனும்” என சாவித்ரி ஆசிர்வதிக்க வீராவிற்கு திக்கென்றது
”ஆரம்பமே இப்படியா” என தனக்குள் நினைத்தபடியே தாமரையைப் பார்த்தான்
”உள்ள போலாம் வாங்க” என அழைக்க தாமரையும் சரியென்றாள். ஆனால் சாவித்ரியோ
”அதுக்குள்ள என்ன அவசரம்” என சொல்ல வீரா அதிர்ந்தான்.
”இப்ப என்ன பிரச்சனை” என கேட்க அவரோ மாணிக்கத்தை கண்களால் அழைக்க அவன் உடனே ஆஜரானான். கூடவே புவனாவும் வந்து நின்றுவிட இருவரையும் இணைத்து நிற்க வைத்து வீராவைப் பார்த்தார். அவரின் செயலை புரிந்துக் கொண்ட வீராவோ தாமரையை பார்த்து
”வாங்க”
”ஏங்க இவங்ககிட்டயுமா”
”வாங்க இந்த மாதிரி வீடு கிடைக்கறது கஷ்டம், வெளிய போயிடுன்னு சொல்லிடப் போறாங்க, வேற வீடு கிடைக்கறவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்களேன்” என வீரா கெஞ்ச தன் கணவரின் நிலைமையை உணர்ந்தவள் வேறு வழியின்றி மாணிக்கம் மற்றும் புவனாவின் காலில் விழுந்து வணங்கினாள்.
புவனா தாமரையிடம் சினேகமாக சிரித்து
”நீ நினைச்சதெல்லாம் நடக்கும் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்” என வாழ்த்த அது தாமரைக்கு மிகவும் பிடித்திருந்தது.
வீராவோ காலில் விழாமல் நின்றிருக்க அதைக்கண்ட மாணிக்கமோ
”விழுடா” என சொல்ல வீராவோ அவனை ஏற இறங்கப் பார்த்தான். அதைக்கண்ட தாமரையோ
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!