Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

ம் இதையும் நான்தான் சொல்லனுமா ஏன் அவனை அடிச்சி உதைச்சி கட்டாயப்படுத்திதானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, அவன் உடம்பு நல்லாகனும்னு உனக்கு எண்ணமே இல்லையா, அடுப்படியில பாதாம் முந்திரியிருக்கு அதை தூளாக்கி பால்ல கலந்து கொடு, இன்னும் உன்னால எத்தனை பேர்கிட்ட அவன் அடிவாங்கனும்னு இருக்கோ என்னவோஎன அலுத்துக் கொள்ள தாமரையின் மனம் புண்பட்டது.

அவள் முகம் வாடிவிட்டதைக்கண்ட வெங்கடாச்சலமோ

தாமரை நீ வீராகிட்ட போம்மாஎன சொல்ல அவளோ நேராக அடுப்படிக்கேச் சென்றாள்.

அவள் சென்றதும் வெங்கடாச்சலம் சாவித்ரியிடம்

ஏன் இப்படி பேசற சாவித்ரி, வந்த நாளே அந்த பொண்ணை கலங்க வைக்கலாமா இது தப்பில்லையா

என் பையனை அடிச்சி உதைச்சிருக்காங்க அது மட்டும் தப்பில்லையா

அதுக்கு இவளை பழிவாங்கப் போறியா இது தப்பு சாவித்ரி

நான் ஒண்ணும் பழிவாங்கலை, இப்ப கூட பாண்டியனை பார்த்தேன், இங்கிருந்து போனப்ப இருந்த முகமா அது, நீங்களும் பார்த்தீங்கள்ல உங்களுக்கு கல் நெஞ்சு, அதான் ஒண்ணும் புரியலை நான் பெத்தவங்க என் மனசு வலிக்குது, ஏனோதானோன்னு பால் காய்ச்சி கொடுத்தா எப்படியாம், புருஷன் மேல அக்கறை இருந்திருந்தா அதுல பாதாம் முந்திரி சேர்த்திருப்பாளே, பாண்டியன் இந்த வீட்ல இருந்தப்ப தினமும் காலையில அவனுக்கும் ஐஸூக்கும் பாதாம் முந்திரி தட்டிப் போட்ட பால் தருவேன் அது உங்களுக்கும் தெரியும்ல

ஆனா அது தாமரைக்கு தெரியாதுல்ல

தெரியலைன்னா தெரிஞ்சிக்கட்டுமே, எனக்கென்னவோ இவளுக்கு அவனை பிடிக்கலை போல இருக்குங்க, ஏனோ தானோன்னு நடந்துக்கறா எனக்கு பிடிக்கலைங்கஎன பட்டென சொல்ல வெங்கடாச்சலமோ அதிர்ந்தார்

எதை வைச்சி அப்படி சொல்ற அவங்க வந்தே கொஞ்ச நேரம்தானே ஆகுது

அவங்க பேசறதை கேட்டீங்களா, நம்ம பையன் என்னடான்னா இவளுக்கு அவ்ளோ மரியாதை கொடுத்து பேசறானே, அவளோ அவன் பேச்சுக் கேட்டு உடனே செய்யாம யோசிக்கறாளே, பெரிய இடத்து பொண்ணாவே இருந்தாலும் புருஷன் பேச்சை கேட்காம இருக்கலாமா

அது அவங்க வீட்டு பிரச்சனை, நீ ஏன் தலையிடற

எது அவங்க வீடு இது என் வீடுஎன கத்த அதற்குள் வீராவே அங்கு வந்து நின்றான். அவனைக் கண்டதும் சாவித்ரியின் கோபம் மேலும் அதிகமானது

இதோ வரான் பாருங்க, அவன் முகத்தை பாருங்க எப்படியிருக்குன்னு, வயிறு எரியுதுங்க செல்லமா வளர்த்த பையனை எப்படி போட்டு அடிச்சிருக்காங்கன்னு பாருங்கஎன சொல்ல வீராவோ

அம்மா அப்படியெல்லாம் இல்லைம்மா காயமெல்லாம் சரியா போயிடுச்சி

நீ பேசாதடா என்கிட்ட, நான் உன் அப்பாகிட்ட பேசறேன்

கோச்சிக்காதம்மா

என்கிட்ட பேசாதன்னு சொன்னேனே காதுல விழலஎன கத்த வீரா மௌனமாகி தன் தந்தையிடம் சென்று நின்றான்.

என்றாவது ஒரு நாள் தன்னிடம் வருவான் என காத்திருந்தவர் போல வீரா வரவும் அவனை சட்டென தன் கைப்பிடிக்குள் பிடித்துக் கொண்டார் வெங்கடாச்சலம்

முதல்ல தாமரைகிட்ட சாவித்ரியை பத்தி சொன்னியா இல்லையாஎன கேட்க

இன்னும் இல்லைப்பா

ஏன்டா எத்தனை நாளாச்சி இன்னுமா இந்த வீட்டைப் பத்தி பேசலை

நேரம் கிடைக்கலைப்பாஎன சொல்ல

ஆமா என்னடா இது கோலம் முகமாடா இது

அட விடுப்பா இப்ப எவ்ளவோ பரவாயில்லை கல்யாணத்தன்னிக்கு நீங்க பார்த்திருக்கனுமே அடையாளமே தெரியாத மாதிரியிருந்தேன்

அதான் ஆல்பத்தில பார்த்தேனே உன்னை யாருடா அதைக் கொண்டு வரசொன்னது

தாமரையை பார்த்தாலாவது அம்மா மனசு மாறும்னு நினைச்சேன்

கிழிச்ச, அதை பார்த்த பின்னாடிதான் சாவித்ரிக்கு கோபம் தலைக்கு மேல ஏறிச்சி

இப்ப என்ன செய்றது

முடிஞ்சவரைக்கும் தாமரையை நீ பத்திரமா பார்த்துக்கறது நல்லது

ஏன் என்னாச்சி?

சொன்னா புரியாது உனக்கு, நடக்கறதைப் பாரு புரியும்என சொல்ல வீராவோ குழம்பி போனான். அந்நேரம் தாமரையும் வந்தாள்

கையில் பால் டம்ளருடன் சோகமாக வந்தவளைக் கண்டு அதிர்ந்தான் வீரா

என்னங்க தாமரை இப்படி சோமாக வந்திருக்கீங்க, என்னாச்சிங்கஎன அக்கறையாக கேட்க அதற்கு தாமரையோ சாவித்ரியை பார்க்க வீரா உடனே புரிந்துக் கொண்டு

ஏங்க வாங்க நாம நம்ம வீட்டுக்கு போலாம்என அழைக்க சாவித்ரியோ

அப்ப இது யார் வீடுஎன கேட்க வீரா அதிர்ந்தான் உடனே தாமரையிடம்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாmadhumathi9 2019-07-13 17:18
:clap: nice epi sasi.but veera amma ean appadi seiyaraanga :Q: enna kaaranam? Veera nilaimai kadinam thaan polirukku. :thnkx: 4 this epi. :GL: 4 next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாராணி 2019-07-13 08:01
அருமையான பதிவு சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாதீபக் 2019-07-11 18:45
super episode sis :clap: . sema fun and good family entertainer episode :hatsoff: . do no how 12 pages went it is interesting to read :yes: . :thnkx: for this episode. waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top