Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

நீங்க ரொம்ப ஓவரா போறீங்க ஹவுஸ்ஓனரம்மா, யார் என்ன சொன்னா எனக்கென்ன எங்கப்பா எனக்கு நல்லாதான் சீர் செஞ்சிருக்காருஎன கோபமாக சொல்ல வீராவோ நொந்தே போய் அமைதியாக நின்றான்.

சாவித்ரியோ

அந்தக்காலத்தில நான் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தப்ப எங்கப்பா செஞ்ச சீரை வைக்க கூட இடம் இல்லாம பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்தாங்களாம், நீயும் கொண்டு வந்திருக்கியே மொத்தமா சேர்த்து ஒரே ரூம்ல அடைஞ்சிப் போச்சிஎன சொல்ல தாமரைக்கு கோபமே அதிகமானது

சீர்ங்கறது பெரியவங்க தர்ற பரிசுங்க, என் அப்பா என் மேல பிரியப்பட்டு கொடுத்தது இதெல்லாம் உங்கப்பாவை போல ஊர்க்காரங்க மெச்சிக்கனும்னு செய்யலை. இந்த பொருட்கள்ல எங்கப்பாவோட அன்பு இருக்கு இதெல்லாம் உங்களுக்கு புரியாதுங்க, என் மாமியார் வீட்ல இந்த சீர்வரிசையெல்லாம் வேணாம்னு சொன்னாங்க, எங்கப்பாதான் கேட்கலை, எதுக்கும் இருக்கட்டும்னு கொடுத்துவிட்டாரு, அவர்கிட்ட கேட்டிருந்தா இந்த வீடு முழுக்க நிரப்பற அளவுக்கு சீர் செய்வாரு, வேணா பார்க்கறீங்களா ஒரு ஃபோன் போட்டா போதும் நிக்க இடமில்லாம பொருள் குவிஞ்சி கிடக்கும்என மிடுக்காகச் சொல்ல வீராவே அசந்துவிட்டான்.

சாவித்ரியோ வீராவை பார்த்து என்னடா இது என கண்ஜாடையில் கேட்க அவனோ அச்சத்தில் எச்சில் விழுங்கினான்.

அது சரி ஆமா, பூஜைக்கு தேவையான சாமான் கொடுத்துவிட்டாங்களா உங்கப்பாஎன ஏற்றி இறக்கி கேட்க தாமரையோ அந்த பக்கம் இந்த பக்கம் என தேடிப்பிடித்து பூஜைப் பொருட்களை காட்டினாள்.

வீட்டுக்கு வந்து எவ்ளோ நேரம் ஆகுது சட்டுன்னு பூஜையறையை செட் பண்ணி விளக்கேத்தாம கதை பேசலாமா, புது வீட்டுக்கு வந்துட்டோமே வீட்டை சுத்தம் பண்ணி பால் காய்ச்சலாம்னு தோணலையா உனக்கு, இப்பவே சாயங்காலம் ஆகப் போகுதே, ராத்திரிக்கு என்னத்த சாப்பிடுவீங்க ரெண்டு பேரும் ஆமா, இப்ப உன்னால என்ன சமைக்க முடியும், என்னவோ வெட்டி வீராப்பா அளந்தியே உன் அம்மா கட்டிக் கொடுத்த சாப்பாட்டை மதியம் சாப்பிட்டாச்சி ராத்திரிக்கு உன் புருஷனை பட்டினி போடப் போறியா இல்லை ராத்திரி சாப்பாட்டுக்கும் உன் அப்பா பின்னாடியே கேரியர் அனுப்ப போறாராஎன நக்கலாகக் கேட்க தாமரைக்கு திக்கென்றது. அவள் குழம்பியபடியே வீராவை பார்க்க அவனோ தன் தாயிடம்

இன்னிக்கு தானேம்மா நாங்க வந்தோம் நாளையில இருந்து தாமரை சமையல் செய்வாங்க

சரிடா அப்ப ராத்திரிக்கு என்ன சாப்பிடுவ

ஓட்டல்ல சாப்பாடு வாங்கி வந்துஎன அவன் முடிப்பதற்குள் சாவித்ரி அவனைப் பார்த்து முறைக்க அதோடு அமைதியானான்.

கணவன் பேச்சைக் கூட பாதியில் நிப்பாட்டிய சாவித்ரியைக் கண்ட தாமரையோ

நான் சமைச்சிடுவேன்என்றாள் கோபமாக

எப்படி ஒரு 3 மணி நேரத்தில இருட்டிடும் இவன் பசி தாங்க மாட்டான், சீக்கிரமா சாப்பிட்டு தூங்கற பழக்கம் இருக்கு இவனுக்கு, நல்லா வளர்ந்த பையன் வேற, உன்னால என்னத்த செய்ய முடியும், அதை விட இன்னிக்கு ஒரு நாள் என் வீட்ல வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க, சமையல்ல குறை சொல்லக்கூடாதுன்னு கறிவிருந்தா சமைக்க சொல்லியிருக்கேன் நேரத்துக்கு வந்துடுங்கஎன சொல்ல அதைக் கேட்ட வீராவோ

ஏம்மா நைட் சாப்பிட கூப்பிடறதுக்கா இந்த அலப்பறை பண்ற, ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன், கறி விருந்தா சரி சரி அங்கயே சாப்பிடலாம்என நினைத்துக் கொண்டிருந்த நேரம் தாமரையோ

அதெல்லாம் வேணாம் ஹவுஸ்ஓனர்அம்மா, அப்பா சாமான் அனுப்பறப்பவே காய்கறி மளிகை பொருள் எல்லாத்தையும் போட்டுத்தான் அனுப்பியிருக்காரு நானே சமைச்சிடுவேன் நாங்க வரலை உங்க வீட்டுக்குஎன்றாள் அதைக்கேட்டு சாவித்ரியின் முகம் கோபத்தில் பொங்கியது

போனா போகட்டும் பசியா இருப்பீங்களேன்னு சாப்பிட கூப்பிட்டா இப்படி முகத்தில அடிச்ச மாதிரியா பேசுவஎன கத்த தாமரையோ

நீங்க மட்டம் தட்ட ஆள் இல்லைன்னதும் நாங்கதான் கிடைச்சிட்ட மாதிரி விருந்துக்கு கூப்பிட்டு அங்க மட்டம் தட்ட பார்க்கறீங்களா முடியாது நாங்க வரமாட்டோம்என்றாள் உறுதியாக அதைக்கேட்ட சாவித்ரியோ தன் மகனைப் பார்த்து

ஒழுங்கா சாப்பிட வந்து சேரு இல்லைஎன அதிகபட்சமாக மிரட்டிவிட்டு வெளியே செல்ல அதைக்கண்ட தாமரையோ

இவங்களுக்கு ரொம்பதான் அக்கறை, ஏன் நான் இருக்கேன்ல, என்னால சமைச்சி போட முடியாதாக்கும் நானே செய்றேன் நீங்க அங்க போகாதீங்கஎன சொல்லி விட்டு அவள் அடுப்படியை நோக்கி அப்போதே சமைக்கச் செல்ல வீராவோ அமைதியாக வெளியேறி முற்றத்தில் வந்து தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தான்

சாப்பிட போகலைன்னா அம்மாவோட கோபம் அதிகமாகும், சாப்பிட போனா தாமரைக்கு கோபம் வரும், இப்ப என்ன செய்றது என்னை வைச்சி ஏன் வித்தை காட்டறாங்க ரெண்டு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
  • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
  • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
  • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாmadhumathi9 2019-07-13 17:18
:clap: nice epi sasi.but veera amma ean appadi seiyaraanga :Q: enna kaaranam? Veera nilaimai kadinam thaan polirukku. :thnkx: 4 this epi. :GL: 4 next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாராணி 2019-07-13 08:01
அருமையான பதிவு சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாதீபக் 2019-07-11 18:45
super episode sis :clap: . sema fun and good family entertainer episode :hatsoff: . do no how 12 pages went it is interesting to read :yes: . :thnkx: for this episode. waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top