Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

பேரும், தாமரை கரெக்டா இருக்காங்க, இந்த அம்மாவுக்கு என்னாச்சி, இந்த வீட்ல நீ தங்கலாம் ஆனா, அம்மாங்கற உரிமையோட பேசக்கூடாது, பழககூடாது, அப்படி இப்படின்னு ஆயிரம் கன்டிஷன் போட்டாங்க இப்ப என்னடான்னா சாப்பிட வான்னு சொல்லிட்டு போறாங்க இப்ப நான் என்னதான் செய்றதுஎன நினைத்துக் கொண்டே நேரத்தை ஓட்டினான்.

இரவானது புவனா சமைத்து முடித்த நேரம் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்கள் மாணிக்கமும் வெங்கடாச்சலமும். முற்றத்தில் கவலையாக அமர்ந்திருந்த வீராவைக் கண்டதும் இருவருக்கும் சிரிப்பே வந்தது. நேராக அவனிடம் சென்று

ஒரு நாள் நீ இந்த கோலத்தில இப்படி உட்காருவன்னு நினைச்சேன் ஆனா, இன்னிக்கே இப்படி உட்காருவன்னு நான் எதிர்பார்க்கலைடா மகனேஎன வெங்கடாச்சலம் கிண்டல் செய்ய மாணிக்கமோ

ஏதோ பரவாயில்லை முற்றத்திலயாவது இப்படி உட்கார்ந்திருக்கியே இன்னும் கொஞ்சம் நாள் போனா திண்ணையில உட்கார வேண்டிய நிலைமை வந்துடப் போகுது பார்த்துக்கடாஎன சொல்ல வீராவோ இருவரையும் பார்த்து முறைத்தான். அவர்களும் கலகலவென சிரித்துவிட்டு உடனே அமைதியாகி அவனிடம்

என்னடா ஆச்சிஎன வெங்கடாச்சலம் கேட்க

அம்மா திட்டிட்டாங்களாஎன மாணிக்கம் கேட்க வீராவோ

திட்டியிருந்தா பரவாயில்லையே என்னை வைச்சி செய்றாங்களே

யாரு

அம்மாதான்

ஏன் என்னவாம் அவளுக்கு, நீ எதுக்குடா உரிமை கேட்டுப் போன, அமைதியா உன் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியதுதானே

நான் எங்க போனேன் அம்மாதான் தேடி வந்தாங்க

எதுக்கு

நைட் கறி விருந்து இருக்காம் வந்து சாப்பிட சொன்னாங்க அம்மா

பரவாயில்லையே நல்ல முன்னேற்றம்என மாணிக்கம் சொல்ல வீராவோ

அதுக்கு தாமரை ஒத்துக்கலையே

ஏன்என வெங்கடாச்சலம் கேட்க

அதுவாஎன வீரா நடந்ததைச் சொல்ல அதைக்கேட்டு இருவரும் மாறி மாறி சிரித்தார்கள்

போதும் சிரிக்காதீங்க, இப்ப நான் என்ன செய்றது அதைச் சொல்லுங்க

சாப்பிட போனா தாமரை திட்டும், சாப்பிட போகலைன்னா சாவித்ரியோட கோபத்துக்கு ஆளாயிடுவ ரொம்ப கஷ்டம்தான்என வெங்கடாச்சலம் சொல்லி பெருமூச்சுவிட

அப்பா ஏதாவது வழி சொல்லுங்கப்பா, ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சமைக்கறாங்க நான் யார் சமையலை சாப்பிடறது

உனக்கு யார் முக்கியமோ அவங்க சாப்பாட்டை சாப்பிடு

எனக்கு ரெண்டு பேரும்தான் முக்கியம்

அப்ப ரெண்டு சமையலையும் சாப்பிடுஎன வெங்கடாச்சலம் சொல்ல அதற்கு வீராவோ

அது எப்படிப்பா முடியும்

வேற வழியில்லையேஎன மாணிக்கம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

வீராவோ எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். இருவீட்டிலும் செய்த சமையலின் வாசம் அவனுக்கே வந்துவிட்டது. அந்த வாசத்தை முகர்ந்துக் கொண்டே நேரத்தை ஓட்டினான். இரவானது அவனை தேடி புவனா வந்தாள்

மச்சினரே வாங்க அத்தை உங்களை சாப்பிட கூப்பிடறாங்கஎன அழைக்க அவனோ

அண்ணி நீங்களுமா அங்க தாமரை வேற சமைக்கறாங்களே

தாமரை சமைச்சி முடிக்க நேரமாகும், இங்க கொஞ்சம் சாப்பிட்டு போங்க இல்லைன்னா அத்தை கோச்சிக்குவாங்க

இது வேறயாஎன புலம்பியபடியே எழுந்து சாப்பிடச் சென்றான்.

சாவித்ரியே அனைவருக்கும் பரிமாறினாள். வீராவும் தாமரை வருவாளோ என பயந்தபடியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே அவசரமாக சாப்பிடலானான். அவனது செயலைக்கண்ட சாவித்ரியோ

என்னடா பண்ற ஒழுங்கா சாப்பிடுஎன கத்த

இல்லைம்மா தாமரை வந்து நான் இங்க சாப்பிடறதை பார்த்தாங்கன்னா பிரச்சனை அதான்

அவளை ஏன்டா கூட்டிட்டு வரலை

நான் கூப்பிட்டாலும் அவங்க வரமாட்டாங்களே நான் வந்ததே அவங்களுக்கு தெரியாதும்மா தெரிஞ்சா கோச்சிக்குவாங்கம்மா

ஓ இப்ப இருந்தே அவளுக்கு பயப்பட ஆரம்பிச்சிட்டியா, வீரபாண்டியன்னு பேர் வைச்சதுக்கு ஏத்த மாதிரி வீரமா இருப்பேன்னு பார்த்தா இப்படி கோழையா இருக்கியே, நான் இப்படியா உன்னை வளர்த்தேன்என கேட்க அதற்கு அவனோ

அப்படியில்லைம்மா நீயும் எனக்கு முக்கியம் தாமரையும் எனக்கு முக்கியம், உங்க ரெண்டு பேர் மனசையும் நோகடிக்க கூடாதுன்னு பார்க்கறேன் மத்தபடி நான் கோழையில்லைம்மாஎன்றான் கோபமாக

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாmadhumathi9 2019-07-13 17:18
:clap: nice epi sasi.but veera amma ean appadi seiyaraanga :Q: enna kaaranam? Veera nilaimai kadinam thaan polirukku. :thnkx: 4 this epi. :GL: 4 next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாராணி 2019-07-13 08:01
அருமையான பதிவு சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாதீபக் 2019-07-11 18:45
super episode sis :clap: . sema fun and good family entertainer episode :hatsoff: . do no how 12 pages went it is interesting to read :yes: . :thnkx: for this episode. waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top