(Reading time: 19 - 38 minutes)

லவ் யூ டூ" என்று காண்பித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். அப்போது டிராக்கில் ஓடும் ரேஸ் காரை போல வேக வேகமாக நடந்து வந்தான் மேனேஜர் விக்கி, என்ன சாரா டைம் ஆகுது பங்ஷனுக்கு சொல்றேன் நீ இங்க போஸ் கொடுத்துட்டு இருக்க என்று டென்ஷன் கலந்த சிரிப்போடு விக்கி கூறிக்கொண்டே அவள் கையை தனது கையோடு கோர்த்து ரெட் கார்பெட்டில் போஸ் கொடுத்து கொண்டே இருவரும் உள்ளே சென்றனர். அரங்கத்தில் இருக்கும் கேலரியில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நிரம்பி இருந்தனர் வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல கோல்டன் தீமில் அமைக்கப்பட்டிருந்த உள்ளரங்கம் ஜொலித்தது. பிரபலங்கள் அமர அமைக்கப்பட்டிருந்த நாற்காலி வெள்ளை துணியால் கவர் செய்யப்பட்டிருந்தது. ரவுண்டு டேபிள்கள் நடுவில் வெள்ளை ரோஜாக்களால் நிரம்பிய பூச்சாடிகள் வாசனை மெழுகுவர்த்திகள் தண்ணீர் நிறைந்த கண்ணாடி குவளைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாராவும் அவளது மேனேஜர் விக்கியும் தங்களது பெயர் பொருந்திய இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

 சற்று நேரத்தில் அரங்கம் முழுவதும் இருட்டானது திடீரென்று கோல்டன் கலரில் எல்.இ.டி லைட்டுகள் மேடையை நோக்கி பாய்ந்தன. மேடையில் இருந்த ப்ரொஜெக்டர் ஸ்கிரீனில் “வெல்கம் டு சவுத் இந்தியன் அவார்ட்ஸ் 2017” என்று பின்னணி இசையோடு திரையில் தெரிந்தது. குட் ஈவினிங் சென்னை ! என்று ஆன்கர் ஷாலினி தனது ஸ்வீட்டான குரலால் அனைவரையும் வெல்கம் செய்தாள் அவளுடன் ஆன்கர் விஜய்யும் நின்று கொண்டிருந்தான். இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறி நிகழ்ச்சியின் முதல் பகுதியாக கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் கலந்த பரதநாட்டிய நடனம் ஆட நடன கலைஞர்களை அழைத்தனர். நடனத்தை தொடர்ந்து விருது வழங்குதல், பாடல்கள், காமெடி,ஸ்கிட் என்று திரை நட்சத்திரங்கள் பலர் தங்களது திறமைகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அனைவரும் கணித்தது போலவே ராகேஷ் வர்மாவின் “எனக்குள் ஒருவன்” திரைப்படம் அதிக விருதுகளை தட்டி சென்றது. அதை தொடர்ந்து சிறந்த எடிட்டர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், துணை நடிகர், குழந்தை நட்சத்திரம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இறுதியில் சிறந்த நடிகைக்கான கேட்டகிரியை திரையில் காட்டினர் அதை கொஞ்சம் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் சோனாளியும் அவளது அம்மாவும் இன்னொரு பக்கம் சாராவின் மேனேஜர் விக்கி இருக்கைகளையும் ஒன்று சேர்த்து முகத்தில் வைத்து கொண்டு வைத்த கண் வாங்காமல் திரையையே உத்துப் பார்த்து கொண்டிருந்தான். சாராவோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல சிவிங் கம்மை வாயில் மென்று கொண்டிருந்தாள். விருது வழங்க அழைக்கப்பட்ட கெஸ்ட்கள் இருவரும் கையில் இருந்த என்வெலப்பை பிரித்து உள்ளே இருந்த வின்னர் கார்டை எடுத்தனர். அதை பார்த்து விட்டு கெஸ்டில் ஒருவரான தயாரிப்பாளர் சிவதேவ் சிறு புன்னகையுடன் கேலரியில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை பார்த்து கேட்டார் “எனி கெஸ்?” உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க தான் என்று லைட்டாக ஹின்ட் கொடுத்தார். கேலரியில் இருக்கும் ரசிகர்களை நோக்கி சிவதேவ் அது வேற யாரும் இல்லை நம்ம “குயின் ஆப் டோலிவுட்” சாரா தான் என்றார் உடனே அதை கேட்ட விக்கி சந்தோஷத்தில் ஓ.. ஓ… என்று கத்தினான். விக்கி சாரவின் மேனேஜர் மட்டுமல்ல ஜௌர்னலிசம் படித்துவிட்டு பெரிய தொலைக்காட்சி ஒன்றில் எடிட்டராக பணிபுரிந்தவன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சாராவிடம் அறிமுகமாகி அது படிப்படியாக நட்பாக மாறி இன்று மேனேஜர் அளவில் வந்து முடிந்திருக்கிறது அவனுக்கு வயதோ நாற்பது இருக்கும் காதல்,கல்யாணம், குழந்தையலாம் வேஸ்ட் ஆப் டைம் என்பது அவன் பாலிசி அவனுக்கு சென்ஸ் ஆப் யூமர் அதிகம் அதனால் மற்றவர்களை கேலி செய்வது, நக்கல் அடிப்பது என தன்னை சுற்றிவுள்ள வட்டத்தில் இருப்பவர்களை என்றும் ஹாப்பியாக வைத்து கொள்வான். ஸ்வீட் ஹக் செய்து கொண்ட விக்கியை தன் கைகளால் தட்டி கொடுத்து விட்டு மேடையை நோக்கி நடந்தால் சாரா.சாராவின் கையில் கோல்டன் உருவம் கொண்ட பெண் சிலை விருதாக வழங்கப்பட்டது ஆக்சுவலி எனக்கு என்ன பேசறதுனு தெரில இந்த விருது கிடைச்சதுல “ஐ எம் வெரி ஹாப்பி” இந்த கிரெடிட்லாம் என் டைரக்டர் சீனுக்கு தான் போய் சேரும் ஏன்னா இந்த ஸ்கிரிப்ட்ட உன்னால மட்டும் தான் பண்ண முடியும்னு என் மேல ரொம்ப ட்ரஸ்ட் வெச்சிருந்தாரு தென் மை மேனேஜர் விக்கி ஆல்வேஸ் சப்போர்ட்டிவ் அப்புறம் என்ன ரொம்ப விரும்பும் மை டியர் பாய் பிரின்ட்ஸ் ஐ மீன் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறி சிறு புன்னகையுடன் விருதை உயர்த்தி காட்டினாள். இதை தொடர்ந்து ஆக்சன் ஸ்டார் நீரவ்க்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது ரசிகர்களின் கைத்தட்டல்களோடு சவுத் இந்தியன் நிகழ்ச்சி கோலாகலத்தோடும் கலகலப்பாகவும் நிறைவுபெற்றது.

 சாரா டார்லிங் இந்த வருஷம் எப்படியோ விருதை தட்டியாச்சு அடுத்த வருஷம் விடக்கூடாது இதைவிட டபுளா வாங்கிடணும் என்ன சொல்ற நீ என ஹாரன் அடித்து கொண்டே சாராவிடம் விக்கி கேட்டான் சாரா எதுவும் பேசாமல் காரின் கண்ணாடி வாயிலாக வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். ஹலோ அப்பா, எப்ப வீட்டுக்கு வருவீங்க? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது கோபத்துடன் தன் தந்தையிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தாள் சாரா.அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் சாரா செல்லம் அது வரைக்கும் நீ வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை எண்ணிட்டு இருப்பியான் சரியா என்று அவர் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.