(Reading time: 19 - 38 minutes)

சரிப்பா என்று சொல்லி ரிசீவரை டக்கென்று வைத்தாள். நான் வந்துட்டேன்! என்று சொல்லிக்கொண்டே பால்கனியில் நின்று நட்சத்திரத்தை எண்ணி கொண்டிருக்கும் தன் மகளை கட்டி தூக்கினார் சாரவின் அப்பா. நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் அப்பா என்னால நட்சத்திரங்களை எண்ண முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சோர்வுடன் கூறினாள். இதுக்கெல்லாம் கவலைப்படாத சாரா செல்லம் அப்பா உனக்கு வேற ஒரு யோசனை சொல்றேன் நீயே பெரிய நட்சத்திரம் ஆயிட்டனா அங்கு இருக்கிற நட்சத்திரங்கள் எல்லாம் உன்னை பார்த்து பொறாமைப் பட்டு கீழே வந்துரும் அப்புறம் நீ சுலபமா எண்ணலாம் என்று அவளை உற்சாக படுத்தினார்.அதை கேட்ட சாரா சிரித்துக்கொண்டே அப்பா நானும் பெரிய நட்சத்திரம் ஆவேன் அப்பா என்று கூறி தன் அப்பாவை இருக்கமாக கட்டிப் பிடித்தாள். சாரா… சாரா… என்ன ஒன்னும் பேசாம அமைதியா இருக்க என்று விக்கி கேட்க காரின் ஜன்னல் கண்ணாடியை திறந்தாள் சாரா சற்று எட்டிப் பார்த்து வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை உத்து பார்த்துக்கொண்டடே சிறு புன்னகையுடன் அதை ரசித்தாள்.

 நீரவ் குமார் சக்ஸஸ் பார்ட்டியில்…..

 டோஸ்ட்….. இந்த வருஷம் அவார்ட் வின் பண்ண நம்ம ஆக்சன் ஸ்டாருக்கு “சியர்ஸ்” என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த கிளாசை அடித்து தூக்கினர் நீரவ்வின் நெருங்கிய நண்பர்கள். நீரவ் வைத்த இந்த பார்ட்டியில் சாரா, சோனாளி மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆட்டம் பாட்டமென பார்ட்டி களைகட்டியது சாரா இத பாரு என்னோட ஸ்டண்ட் ட்ரெய்னர் மணி கிட்ட நம்ம அடுத்த படத்தை பத்தி சொல்லிட்டேன் அவர் உனக்கு டிரெய்னிங் கொடுக்க தயாரா இருக்காரு சோ….டேக் ரெஸ்ட் உன்னோட வெக்கேஷன் முடிஞ்சதும் சொல்லு நம்ம நல்ல புதுவிதமான ஸ்டண்டெலாம் கத்துகிட்டு அடுத்த படத்துல கலக்கலாம் என்றான் நீரவ். ஓகே டன் ஆக்சன் ஸ்டார் இப்ப எனக்கு ரொம்ப டைம் ஆச்சு ஐ அம் வெரி டயட் நான் இப்ப கிளம்புறேன் சி யு லேட்டர் என்று சொல்லி விட்டு சாரா தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கார் பார்க்கிங்குக்கு கிளம்பினாள்.

 இந்த விக்கியும் டிரைவரும் இல்லாம கஷ்டமா இருக்கு இப்ப யாரு கார் டிரைவிங் பண்ணுவா நான் தான் பண்ணனும் “ஓ மை காட்” என்று புலம்பிக்கொண்டே வந்த அவளை சட்டென்று கருப்பு உடை கருப்பு முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் அவளை இழுத்தனர். யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? ஒழுங்கு மரியாதையா என் கைய விடுங்க டா இல்ல உங்கள கொன்றுவேன் என்று கத்தினாள். கார் பார்க்கிங்கில் யாரும் இல்லை அனைவரும் பார்ட்டியின் உச்சத்தில் மெய் மறந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர்.அப்போது முகமூடி அணிந்திருந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசி ஒன்றை எடுத்து சாராவின் கையில் உட்புகுத்தினான். அவனைத் தடுக்க சாரா தன் பற்களால் அவன் கையை கடித்தாள் பின்பு தன் காலால் உதைத்தால் இன்னொருவனை தனது ஹேண்ட் பேக்கால் அவனுடைய முகத்தில் தூக்கி அடித்து விட்டு சட்டென்று தனது காரின் கதவை திறந்து பேக்கில் இருந்த சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டி சென்றாள்.

 பதட்டத்துடன் காரை ஓட்டிக்கொண்டே மேனேஜர் விக்கிக்கு கால் செய்தால் சாரா ஹலோ விக்கி என்னை ரெண்டு பேர் கொல்ல பாத்தாங்க நான் அவங்கள அடிச்சிட்டு தப்பிச்சுட்டேன் என்று விக்கியிடம் கதறினாள். மறுமுனையில் அதை கேட்ட விக்கி என்ன சொல்ற சாரா ? என்ன ஆச்சு? பயப்படாதே நீ டென்ஷன் ஆகாம இப்ப எங்க இருக்கனு மட்டும் சொல்லு? நான் உடனே அங்க வறேன் தைரியமா இரு சாரா என்றான். நான் ஓட்டல் ஹாலிடேன்க்கு பக்கத்துல இருக்கிற ஹைவேலதான் போயிட்டு இருக்கேன் என்ற அவளுக்கு சற்று தலை சுற்றுவது போல இருந்தது எதிரில் வரும் வாகனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தன. விக்கி நீ இங்க சீக்கிரம் வா எனக்கு எதுவும் தெரியல பயமா இருக்கு சேவ் மீ விக்கி என்று கதறி அழுதாள் நான் அங்க சீக்கிரம் வந்துடறேன் பயப்படாத சாரா ஐ அம் ஆல்வேஸ் வித் யூ என்று காலை கட் செய்தான் விக்கி.

 பர்த்டே பார்ட்டி சூப்பரா போச்சு செமையா என்ஜாய் பண்னேன் நல்லா சாப்பிட்டேன் என்று கைபேசியில் உரையாடிக் கொண்டே வந்தால் ஒரு இளம்பெண். ஆட்கள் வாகனங்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது அந்த குறிப்பிட்ட இடம் தன்னை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த முகமூடி அணிந்த மர்ம நபர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அதிக வேகத்தில் காரை u கொண்டு வந்து கொண்டிருந்தாள் சாரா ஒரு கட்டத்தில் அந்த மர்ம நபர்கள் வழி மாறி வேறு திசையில் சென்று விட்டனர். ஓகே.. ஓகே.. சீக்கிரம் வந்துடுறேன் டாக்ஸிக்கு தான் வெயிட் பண்றேன் இன்னும் வரல என்று பேசிக்கொண்டே வந்தாள் அந்த இளம்பெண். மயக்க நிலையில் கண்ட்ரோலை இழந்து சாரா காரை ஓட்டிக்கொண்டிருந்தாள் அப்போது ஏதோ ஒரு உருவம் அவள் கண்முன் வருவது போல தெரிந்தவுடன் சட்டென்று சடன் பிரேக் போட்டாள். அம்மா……… என்ற பெரிய அலறல் சத்தத்துடன் அந்த இளம்பெண் காரில் தூக்கி அடிக்கப்பட்டு எகிறி கீழே விழுந்தாள். அவள் கைபேசியின் மறுபக்கம் யாரோ ஹலோ ஹலோ என்று சொல்லும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சாராவால் நம்ப முடியவில்லை தன் காரில் அடிபட்டு ஒரு பெண் உயிருக்காக துடித்துக் கொண்டிருக்கிறாளென்று பதறியடித்துக் கொண்டே கீழே வந்து அந்த பெண்ணை தன் கைகளால் தொட்டு தூக்கி தட்டி எழுப்பினாள் அவளோ அசையவில்லை அவளுடைய உயிர் பிரிந்து விட்டது என்பதை உணர்ந்த சாரா உறைந்து போன பனி போல் அதிர்ச்சியில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.