Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

ஹாய் டா அஷ்!”

எப்போதும் போல உரக்க ஒலித்த அக்ஷ்ராவின் குரல் ஆகாஷ் இருந்த மனநிலைக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஃபீலிங் கொடுத்தது.

“ஹாய் அக்ஷு! உனக்கு போன் செஞ்சு பேசலாம்னு போனை கையில எடுத்தேன். நீயே பேசிட்ட! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்!”

“ஹா ஹா ஹா... அதெல்லாம் அப்படித் தான்டா... ஆமா, நீ எதுக்கு எனக்கு போன் செய்ய நினைச்ச??”

“ரொம்ப போர் அடிச்சது.. யார் கிட்ட பேசலாம்னு யோசிச்சேன்... உன்னை விட்டா எனக்கு ப்ளேட் போட வேற யாரு இருக்கா???”

ஆகாஷ் அதை விளையாட்டாக எல்லாம் சொல்லவில்லை... உண்மையாகவே தான் சொன்னான்...

அவனுக்கு நண்பர்கள் இல்லாமல் இல்லை... உடன் படித்தவர்கள், தொழில்ரீதியாக தெரிந்தவர்கள் என பலரும் இருந்தார்கள்... ஆனாலும் இயல்பாக பேச, சாதாரணமாக அரட்டை அடிக்க எல்லாம் அவனுடைய முதல் சாய்ஸ் அக்ஷ்ரா தான்...

“திமுரு பிடிச்சவன்டா நீ! என் ஸ்வீட் ஹார்ட் எங்கே? போனை கொடு, கம்ப்ளெயின்ட் செய்யனும்...”

“உன் ஸ்வீட்ஹார்ட்டும், அங்கிளும் முப்பது வருஷம் பின்னால போய் டூயட் பாடிட்டு இருக்காங்க...”

“சோ ஸ்வீட்!”

“அவங்க ஸ்வீட்டா இருந்துட்டு போகட்டும்... நீ சொல்லு, எதுக்கு போன் செஞ்ச?”

“உன்னை மாதிரி தானடா நானும்! கழுதை கெட்டா குட்டிசுவரு! என் மம்மி இதை கத்துக்கோ, அதை செய், இப்படி மாறனும், அப்படி, இப்படின்னு ஒரே டார்ச்சர்! இம்சை தாங்க முடியாம எஸ்கேப் ஆக போன் செய்தேன்”

“நீ வீட்டுல இருக்குறதே ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ! இதுல ஆன்ட்டி பத்தி இவ்வளவு பெரிய குற்ற பத்திரிக்கை வாசிக்குற??? உனக்கே ரொம்ப ஓவரா தெரியலை???”

“இல்லைடா அஷ்! இப்போ எல்லாம் நான் அப்படி எங்கேயும் போகலை! கேமராவை கையில எடுத்தே ஒரு வாரம் ஆகப் போகுது”

“ஏண்டி?? ஆன்ட்டி ஏதாவது சொன்னாங்களா? அதுக்கு தான உனக்கு பாடிகார்ட் அரேஞ் செய்துக் கொடுத்தேன். அப்புறமும் என்ன?”

“அம்மா ஒன்னும் சொல்லலைடா...நானா போகலை... சும்மா தான்...”

“என்ன அக்ஷு குரல் எப்படியோ இருக்கு?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா அஷ்...!!”

“ஹுஹும் எதுவோ சரியில்லையே... ஆமா உன் பிரென்ட்ஸ் எப்படி உன்னை வீட்டுல இருக்க விட்டாங்க??? பிடிச்சு இழுத்துட்டு போயிருப்பாங்களே....”

அக்ஷ்ரா உடனே பதில் சொல்லவில்லை...!

அவளுடைய மனதில் கணேஷ் பற்றிய குழப்பம் குறையாமல் அப்படியே தான் இருந்தது... அகிலா அவன் அவளை காதலிப்பதாக சொன்னதில் இருந்தே வந்த குழப்பம்...

கணேஷிடம் நேராக பேசி அனைத்தையும் தெளிவுப் படுத்தி விடுவது என்று அவள் முதலில் யோசித்ததை செயல்படுத்துவது எளிதாக இல்லை...

அவள் அவனை சந்திக்க என செய்த முயற்சி எல்லாம் வீணாகி இருந்தது... எப்போது கணேஷிடம் பேசினாலும் பாக்ஸிங் ப்ராக்டிஸ் இருக்கிறது, வேலை இருக்கிறது என்று ஒரே பல்லவியை பாடினான்...

இது போதாதென்று அகிலா வேறு அக்ஷ்ராவை சந்திக்கும் போதெல்லாம் கணேஷுக்கு அவள் மீது இருப்பதாக சொல்லும் காதல் பற்றியே பேசிப், பேசி அவளை வெறுப்பேற்றினாள்...

வெறுத்து போன அக்ஷ்ரா, இந்த குழப்பங்கள் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்து அகிலாவுடன் பேசுவதை குறைத்துக் கொண்டிருந்தாள்...

கணேஷ் பாக்ஸிங் போட்டிக்கு செல்வதாக மெசேஜ் அனுப்பி இருந்தான்... பெயருக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னதற்கு மேல் அவளும் பேசவில்லை...!

“ஹேய் அக்ஷு, என்ன உலக அதிசயமா அமைதியா இருக்க? உன் ஃபிரென்ட்ஸ் கூட கா விட்டுட்டியா??”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை!”

“ஹைய, உன் குரலை கேட்டாலே தெரியுதே!!! எல்.கே.ஜி பாப்பா அக்ஷ்ரா!!!”

“அஷ், வேண்டாம் தூங்கிட்டு இருக்க சிங்கத்தை எழுப்பாதே!!! போனா போகுது சின்ன பையன், அப்பாவின்னு கம்முன்னு இருக்கேன்....”

“ஹையோ, இதோ பாருப்பா!!!”

“நீ நினைக்குற மாதிரிலாம் இல்லை அஷ்! ராம்போ பாக்ஸிங் காம்படிஷன் போயிருக்கான். அகிலா காம்படேடிவ் எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கா... அதனால இரண்டு பேரும் பிஸி...”

“ஓஹோ.. அதான் உனக்கு போர் அடிக்குது...”

“இருக்கலாம்... சரி, நீ சொல்லு, உன் கம்பெனி எப்படிப் போகுது....??”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-07-15 20:28
Nice update bind
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:41
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-07-13 17:50
:grin: nice epi (y) eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:41
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-07-12 15:09
Mr and Ms A are on the same page. Confused!! :no: :no: oru guess-um illai Bindu ma'am ;-) office la personal-a pesa poraru boss!!
nice update ma'am :clap: :clap: Prem's part in past is bad but unga policy of "forget the bitter/unwanted past" yen ivanga follow pana vida matenguringa ;-)

Prem's statement to his mom was quite shocking :lol: parkalam avaroda prem/pyar-i eppadi win pana poranganu….. :yes: thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:40
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top