அசையாதிருந்தால்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் விக்கி மலைபோல அசையாமல் இருக்கும் சாராவையும் ரத்தவெள்ளத்தில் அடிபட்டு இறந்து கிடக்கும் அந்த இளம்பெண்ணையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் விக்கி. அவனுக்கு புரிந்துவிட்டது என்ன நடந்திருக்குமென்று உடனே சாராவிடம் ஓடிச்சென்று சாரா உனக்கு எதுவும் அடிபட்டுச்சா இல்லல்ல நான் வந்துட்டேன் பயப்படாதே என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது சாரா விக்கியின் மேல் மயங்கி விழுந்தாள். சற்றும் யோசிக்காமல் விக்கி சாராவை தன் கையில் தூக்கிக் கொண்டு காரின் பின் இருக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
சாராவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் விக்கியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.அவனது மாஸ்டர் மைண்ட் இல் ஒரு ப்ளான் தோன்றியது உடனே சாராவின் டிரைவர் ரவிக்கு கால் செய்தான் விக்கி. ட்ரிங்… ட்ரிங்.. ட்ரிங்… ஹலோ, சொல்லுங்க சார்?என்ன விஷயம் சார்? என்று ரவி கேட்க, இத பாரு ரவி நான் சொல்றதை கேளு சாரா மேடம் இப்ப ஒரு பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டாங்கா உன்னால மட்டும் தான் அவங்களுக்கு இப்ப உதவ முடியும் நான் சொன்னத கேட்டேனா உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவையான எல்லா வசதிகளையும் பண்ணி தரேன் அதுமட்டுமில்லாம உன்னோட எல்லா கடன் பிரச்சனைகளையும் நானே சரி செஞ்சுருவேன் என்றான் விக்கி. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க! நான் இப்ப நல்லா வாழுறேன் மூணு வேளை நானும் என் குடும்பமும் நல்லா சாப்புடறோம்னா அதுக்கு காரணமே நீங்கதான் நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பேனா சார் என்றான் ரவி. சாரா மேடம் தெரியாம ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டாங்க அதுல ஒரு பொண்ணு இறந்து போயிட்டா நீதான் அந்த ஆக்சிடென்ட் பண்ணனு போலீஸ்கிட்ட ஒத்துக்கணும் நீ உடனே நான் சொல்ற இடத்துக்கு வந்து சேரு என்றான் விக்கி. அதைக்கேட்ட ரவி என்ன சொல்றீங்க சார் ? ஆக்சிடென்டா? கொலையா? என்று அதிர்ச்சியுடன் நடுங்கிய குரலில் விக்கியிடம் கேட்டான்.
ரவி எனக்கு வேற வழி தெரியல நீ தான் இப்ப எனக்கு உதவனும் இல்லனா சாராவோட வாழ்க்கையே அழிஞ்சு போயிடும் உன்ன கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் பண்ணு உன் குடும்பத்தை நான் பத்திரமா பார்த்துக்கிறேன் கொஞ்ச நாள் தான் நான் பெரிய வக்கீலெலாம் வெச்சு போலீசையும் கரெக்ட் பண்ணி உன்ன சீக்கிரமா கொஞ்ச வருஷத்திலேயே வெளிய வர வெச்சுடறேன் நீ வெளியே வந்ததும் உனக்காக பல கோடிகளோடு நான் காத்துட்டு இருப்பேன் என்று ரவிக்கு பணத்தாசையை தூண்டினான் விக்கி. ஆயுள் முழுவதும் உழைச்சாலும் இத மாதிரி பல கோடிகள் கிடைக்காது என்பதை அறிந்த ரவி தன் வசதியான எதிர்காலத்தை நினைத்து சரிங்க சார், நானே ஆக்சிடென்ட் பண்ணாத ஒத்துக்குறேன் என்று விக்கியிடம் கூறினான். அப்பாடா இப்பதான் ரவி எனக்கு உயிரே வந்துச்சு நான் சொன்னதை கண்டிப்பா செய்வேன் நீ எதுக்கும் கவலைப் படாதே இன்னொரு விஷயம் இதைப் பத்தி நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது முக்கியமா உன் மனைவி கிட்ட கூட சொல்ல கூடாது புரியுதா என்று சாராவின் பாதுகாப்பிற்காக ரவியை எச்சரித்தான் விக்கி.
மூன்று மாதத்திற்கு பின்பு டெல்லியில்……….
லோட் தி கன்…………………………………..
தி லைன் இஸ் ரெடி………………………
பையர்……………………………………………
ஸ்டாப் சீஸ் பையர்…………………………
அன்லோட் தி கன் ஆன் தி டேபிள்…...
என்று மாணவர்களுக்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார் நேஷனல் செக்யூரிட்டி கார்ட் ட்ரைனர் மன்வீர். விடியற்காலையில் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர் சில என்.எஸ்.ஜி மாணவர்கள். மலையேறுதல், குதிரை சவாரி செய்தல், துப்பாக்கிசுடுதல், உடற்பயிற்சி, நீச்சல் போன்ற அனைத்து பயிற்சிகளும் என்.எஸ்.ஜி அகாடமியில் நடந்து கொண்டிருக்கிறது.
எதிரியை பலமுறை பையர் செய்வது பெரிதல்ல சிங்கிள் ஷாட்டில் குறி பார்த்து அவனை காலி செய்யனும் அதுதான் ஒரு உண்மையான செக்யூரிட்டி கார்டின் திறமை ஓகே… ஆல் டிஸ்பர்ஸ் என்றவுடன் கேப்டன் மன்வீர்க்கு சல்யூட் அடித்தனர் என்.எஸ்.ஜி ஸ்பெஷல் ரேஞ்ச் மாணவர்கள். இந்த மன்வீர் வேற யாரும் இல்லை அசாமில் நடந்த பேருந்து விபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த தனி நபர் தான். மூன்று மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐ.சி.யூவில் வில் தீவிர சிகிச்சை பெற்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து பூரணமாக குணமாகி இன்று அகாடமியில் தனது பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மன்வீர் மேஜர் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு என்று அட்டெண்டன்ட் மன்வீரை அழைத்தான்.
வெல்டன் மை பாய்! உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இண்டிபெண்டன்ஸ் டே பங்ஷன்ல என் சிறந்த மாணவன் மன்வீர் அசோக சக்ரா விருதை வாங்க போறத நினைச்சா என்று மன்வீரிடம் கூறினார் மேஜர் மிஸ்ரா. அசாமில் நடந்த