(Reading time: 16 - 32 minutes)

அவளை அமரும்படி கூற அவனருகில் சென்று அமர்ந்தாள்.

பேச்சும் சிரிப்பும் அந்த வீட்டையே நிறைத்திருக்க நேரம் போவதறியாமல் பொழுது கழிந்தது.அதன் பின் ரினிஷாவைத் தவிர மற்ற நால்வரும் கிளம்பத் தயாராக மூவருமாய் விடைக் கொடுத்து  வழியனுப்பினர்.

கொஞ்சம் டயர்டா இருக்கு ரேஷ் கண்ணா நீங்க பேசிட்டு இருங்க நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்.”

ஷுவர் மாம் நீங்க போய் படுத்துக்கோங்க..வா பேபி உன்கிட்ட ஒண்ணு காட்டனும்..”,என்றவனோடு மாடிக்குச் சென்றவளை ஒரு இடத்தில் நிறுத்தியவன் அவள் கண்களை பின்னிருந்து மூடியவாறு மேலும் ஒரு நான்கைந்து படிகளில் ஏற வைத்தான்.

சட்டென முகத்தில் பட்ட காற்றில் சிலிர்த்தவளாய்,”என்ன பண்றீங்க ரேஷ்..என்ன விளையாட்டு இது..”,எனும்போதே கண்களிலிருந்து கையை விவிடுவித்தவன் அவள் முன்பு வந்து நின்றான்.

விழிவிரிய அந்த இடத்தையே தன்னவனோடு சேர்த்து பார்த்து அதிசயித்திருந்தாள்.அழகான அந்த மொட்டை மாடியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் வண்ண வண்ண மலர்ச் செடிகள் நிரம்பியிருந்தன.அத்தனை நிறத்திலுமான ரோஜாக்களும் இன்னும் சில மலர்களும் கண்ணைக் கவர அனைத்திற்கும் மகுடமாய் ஜாதிமல்லியின் நறுமணம் நாசியை நிறைத்து மனதை இலகுவாக்கியிருந்தது.

இப்படி ஒரு ரம்மியத்தை மேலும் அதிகரிக்கும் விதமாய் நடுநாயகமாய் வீற்றிருந்த அந்த அழகான ஊஞ்சல் ஒரு நொடி உலகமே மறந்துவிட்டிருந்தாள் ரினிஷா.

வாவ் ரேஷ் சிம்ப்ளி ஆசம்.ஆனாலும் செமயான ரசிகன் நீங்கனு இதுலயே தெரியுது..”,என்றவள் அவனைக் கடந்துச் சென்று செடிகளை வருடியயவாறே ரசித்திருக்க,

ரினி டியர்!”

அவனது அழைப்பில் திரும்பியவளுக்கு அடுத்த ஆச்சரியமாய் கையில் சிறு மோதிரத்தோடு ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் ரேஷ்வா அவளையே பார்த்திருந்தான்.

ரேஷ்!!!”

வில் யூ மேரி மீ ஸ்வீட்கார்ட்?”

சட்டென கண்களில் நீர் கோர்த்திருந்தது ரினிஷாவினிடத்தில்.கண்கள் மறைத்த நீரோடு இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க சம்மதமாய் தலையசைத்தாள்.

மறுகை நீட்டி அவள் கரம் பற்றியவன் தன்னிடமிருந்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்து எழுந்து நின்றான்.தன்னவளின் முகத்தை கைகளில் ஏந்தியவனாய் லவ் யூ பேபி என்றவன் நெற்றியில் அழுந்த இதழ் பதித்து விலகி நின்றான்.

கனவு மாதிரி இருக்கு ரேஷ்..லவ் யூ சோ மச்..”

நீ என்னோட பொக்கிஷம் ரினி பேபி..லுக்கிங் க்ரேட் டுடே..”,என்றவன் தன்னவளை மென்மையாய் அணைத்து விடுவித்தான்.முகம் மொத்தமும் செம்மையுற்றவளாய் அவனிமீதிருந்து பார்வையை விலக்கியவள்,

டைம் ஆச்சு ரேஷ் நான் கிளம்புறேன்.”அவள் நிலையுணர்ந்தவனும் மறுத்து எதுவும் கூறாமல்,

ம்ம் கிளம்பு பேபி..நெக்ஸ்ட் வீக்ல டைரக்டர் சார் சக்ஸஸ் பார்ட்டி வைக்கலாம்னு சொல்லிட்டு இருந்தார்.அப்போ மீட் பண்ணலாம் ஸ்வீட்டி.வில் மிஸ் யூ..”

..கண்டிப்பா மீட் பண்ணலாம் ரேஷ்..மிஸ் யூ டூ..பை டேக் கேர்..”

அவளை வாசல் வரை சென்று வழியனுப்பியவன் அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்டு உள்ளே அமர்ந்தவுடன் கதவை சாத்திவிட்டு விரல்களை தன் அதரங்களில் வைத்து பறக்கும் முத்தத்தை கார் கண்ணாடியில் பதித்து புன்னகையோடு நிமிர்ந்தவன் தன் கைகளை பேண்டிற்குள் விட்டவாறு நின்றிருக்க அவனை பத்திரமாய் தன் விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டு கிளம்பினாள் ரினிஷா.

அங்கிருந்து கிளம்பியிருந்த ஆத்விக் ஷான்யாவோடு கடற்கரையை அடைந்திருந்தான்.அவனைக் கேள்வியாய் பார்த்தவளைக் கண்டு தன் விரல்களை மடக்கி வலிக்காதவாறு தன் முன்னந்தலையில் குத்தினான்.

என்ன டீ ரியாக்ஷன் இது!இன்னும் இருபது நாள்ல கல்யாணம் வருங்காலப் புருஷனோட பீச்சுக்கு வந்ததுக்கு ரொமேண்டிக் லுக் கொடுக்கலனா கூட பரவால்ல.ஏதோ உன்னை கடத்திட்டு வந்த மாதிரி ஒரு லுக் விடுறியே..”

அவனது பேச்சில் சட்டென சிரித்திருந்தாள் ஷான்யா.ஒன்றும் பதில் கூறாமல் தனது புறமிருந்த அவனது இடக்கையை இழுத்து கைகளுக்குள் வைத்தவாறு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

ம்ம் பரவால்லயே பயம் போயிடுச்சா ஒரு வழியா?!”

பயமா எனக்கு எதுக்குப் பயம்?!”

ஹான் அப்பறம்?”

சாய்நேதவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள்,”நிஜமாவே பயமெல்லாம் கிடையாது.சொல்லப் போனா இதுமாதிரி சாஞ்சுக்கணும்னு எப்பவுமே தோணும்.என்ன தான் வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் வரை வந்துட்டாலும் அப்பாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோனு ஒரு சின்ன கில்டி ஃபீல் இருந்துட்டே இருந்ததுங்க..”

ஷான்!!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.