(Reading time: 16 - 32 minutes)

கொஞ்சம் அதிருப்தி  ஆச்சு.ஆனா அதையும் கூட எங்கப்பா பரவால்லைனு ஏத்துக்க தயாரானார்.எந்த தைரியத்துல நான் வாயைத் திறந்து பேசினேன்னு இப்பவும் எனக்குப் புரில.அத்தனை பேர் முன்னாடி என் வாதத்துல நான் ஸ்டாராங்கா இருந்தேன்.

அதிசயமா அவங்க கிளம்பின அப்பறம் கூட அப்பா என்னை எதுவுமே சொல்லல.எனக்கும் நடந்தது நல்லதுக்காகத் தான்னு ஒரு நினைப்பு தான் இருந்தது.இது நிச்சயமா நீங்க சொல்ற மதிரி அதிசயம் இல்லாம வேற என்ன..நாம தான் சேரணும்ங்கிறது கடவுளோட விருப்பமா இருக்கும்போது யாரும் அதை தடுக்க முடியாது தான கண்டிப்பா..”

அம்மாடியோ என் ஷான் இவ்ளோ பேசுவாளா..ரொம்ப ஹேப்பியா இருக்கு இத்தனை விஷயத்தை என்கிட்ட ஷேர் பண்ணிக்குறதை நினைச்சா..கரெக்ட் நீ சொல்ற மாதிரி இது கடவுளோட விருப்பம் அதை யாரும் பிரிக்க முடியாது..லவ் யூ ஆல்வேஸ் ஷான்..”என்றவன் மேலுமாய் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

அங்கு ஜீவியோ வந்த சிறிது நேரத்திலேயே அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டவள் வெகு நேரமாய் கதவை திறக்காமலேயே இருந்தாள்.பொறுமையிழந்தவனாய் ஜெயந்த் சென்று அறைக்கதவைத் தட்டியவாறு நிற்க சட்டென கதவைத் திறந்தாள் ஜீவிகா.

என்ன டீ பண்ற?எவ்ளோ நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.கதவை திறக்குற மாதிரியே தெரில.”

ஒரு பதினைஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டீங்களா மாம்ஸ்..”,என்றவள் கண்ணாடியின் முன் சென்று காதணிகளை கழட்டி வைக்க ஆரம்பித்தாள்.

ம்ம் ஏன் சொல்லமாட்ட ஆமா இவ்ளோ நேரம் உள்ளே என்ன பண்ணிண ட்ரெஸ் சேஞ்சும் பண்ணல.பேஸ் வாஷ் கூட பண்ண மாதிரி தெரில.”

ம்ம் பண்ணலாம் பண்ணலாம் சூப்பர் மார்க்கெட்..”

என்ன ஜீவிக்குட்டி சரியில்லையே!!”

ம்ம் ஆமா ஆமா வர வர ஒண்ணும் சரியில்ல.”

ஏன் ஏதோ ஏடாகூடமாவே பேசிட்டு இருக்க நீ..”

பின்ன இங்க பாருங்க ட்ரெஸிங் டேபிள் மாதிரியா இருக்கு இது என்ன டப்பாவை கொண்டு வந்து இங்க வச்சுருக்கீங்க..ஒரே குப்பை..”

அவளைத் தாண்டி வந்து எட்டிப்பார்த்தவனின் முன் ஓரளவு பெரிய அட்டைப் பெட்டி ஒன்று இருந்ததைக் கண்டான்.

நானா நான் ஒண்ணும் வைக்கலயே..சொல்ல போனா இந்த டேபிளை குத்தகைக்கு எடுத்து வைச்சுருக்குறது நீ தான்.”

ஓ என்னையே குறை சொல்றீங்களா?இது ஒண்ணும் என்னோடது இல்ல.உங்களோடது தான்.வேண்டாம்னா போய் தூக்கி போடுங்க முதல்ல..”

என்னவோ சரியில்ல ஜீவிக்குட்டீ..ம்ம் என்னது இது”,என்றவன் பெட்டியைத் திருப்பி திருப்பிப் பார்த்தவாறு அதைத் திறந்தான்.கசங்கிய நிலையில் காகிதங்கள் அடைந்திருக்க அவற்றை விலக்கிப் பார்த்தவனுக்கு அதனுள் இருந்த ஒரு சிறு பெட்டி கண்ணில் பட்டது.

அட ஜீவிக்குட்டி எனக்காக எதோ கிப்ட் வாங்கிருக்கா..ஆனா இப்போ என்ன என் பர்த்டே கூட இல்லையே?”,என்று அவன் கேட்டதற்கும் எந்த பதிலும் கூறாமல் அவள் அமைதியாய் அவனையே பார்த்திருந்தாள்.

ஜெயந்த் ஆர்வம் அதிகரித்தவனாய் அடுத்தப் பெட்டியைப் பிரிக்க அதனுள் இன்னொன்று இருந்தது.அதனுள் பெரிய பேப்பரை சுற்றியவாறு ஒரு பந்து அதனுள் இன்னொன்று அடுத்தது என ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவனாய் ஜீவிகாவைப் பார்த்தவன்,

உன்னோட முடில டீ..மனுஷனை என்ன பாடு படுத்துற..என்ன தான் ஜீவி இருக்கு உள்ளே?”

பொறுமை மிகவும் முக்கியாம் அமைச்சரே!”,என்றவள் அடுத்ததைப் பிரிக்குமாறு செய்கை செய்தாள்.அடுத்த பேப்பரை பிரித்தவனுக்குத் தான் பார்த்ததை நம்பவே முடியவில்லை.

ஜீவிம்மாமா!!!”

என்ன மாம்ஸ் பொறுமை அவசியம் தான அதுவும் பத்து மாசம்?!!”

தன் கையிலிருந்த ப்ரெக்னென்சி டெஸ்ட் கிட்டில் தெரிந்த இரண்டு கோடுகளைப் பார்த்தவனுக்கு கண்கள் கண்ணீரால் மறைந்திருந்தது.எதுவும் பேசாமல் ஜீவிகாவை அப்படியே தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

முழு சந்தோஷத்தோடு அவனை கட்டிக் கொண்டவள் ஒரு நொடிக்குப் பின், 'மாம்ஸ் ஒரு நிமிஷம் விடுங்க இதுக்கு மேல போனா வீடியோ சென்சார் ஆய்டும்”,என்று ரகசியம் போல் காதில் கூற பதறிப் போய் விலகியவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அப்போது தான் அவன் முன் டேபிளில் இருந்த ஜீவிகாவின் கைப்பேசி கண்ணில்ட்டது.அவனைப் பார்த்து அசடு வழிந்தவளாய் அதை கையில் எடுத்தவள் அதை அணைத்து வைத்தாள்.

ஏன் டீ இப்படி இருக்க நீ?”

மாம்ஸ் இதெல்லாம் திரும்ப கிடைக்கவே கிடைக்காத மொமண்ட்ஸ்.நாளைக்கு நம்ம குட்டீஸ்கிட்டஇதெல்லாம் போட்டு காட்டினா எவ்ளோ நல்லாயிருக்கும் இல்ல அதான்.”

ஜீவிம்மா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடீயுமானு தெரில.என் வாழ்க்கையை ரொம்ப அழகா மாத்திட்டு இருக்க..லவ் யூ ஜீவி..”,என்றவன் இன்னுமே மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.