(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 18 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

கனவோடு தானடி நீ தோன்றினாய்..

கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

என் வாசலில் நேற்று உன் வாசனை...

நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

எதுவும் புரியா புது கவிதை...

அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..

கையை மீறும் ஒரு குடையால்..

காற்றோடுதான் நானும் பறந்தேன்..

மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

முதல் மழை எனை நனைத்ததே..

பெண்: லாலாலாலா..

முதல் முறை ஜன்னல் திறந்ததே..

பெண்: லாலாலாலா..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..

மனமும் பறந்ததே...

இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

த்விக் ஷான்யா ஜீவிகா ஜெயந்த் என அனைவரையும் தன் வீட்டிற்கு வார இறுதியில் அழைத்திருந்தான் ரேஷ்வா.அவனது அன்னை காலையிலேயே வந்துவிட நீண்ட நாட்களுக்குப் பின் அவரை சந்தித்ததும் ஒருவித உற்சாகத்தை கொடுத்திருந்தது.

மதியம் பனிரெண்டு மணியளவில் அனைவருமாய் ரேஷ்வாவின் வீட்டை அடைந்திருக்க ரினிஷா ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாய் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.மற்ற நால்வரையும் தன் அன்னையிடம் அறிமுகப்படுத்தியவன் தங்களின் நட்பைப் பற்றி கூற ஆரம்பித்திருத்தான்.இரு நிமிடங்கள் அனைத்தையும் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த ஜீவிகாவால் அதற்கு மேல் முடியாமல் ஆத்விக்கிடம்,

டேய் ஆத்வி என்ன டா இந்த சம்மர்லயே இப்படி குளிருது.காய்ச்சலே வந்துரும் போல டா காப்பாத்து ப்ளீஸ்..”

அவள் கூறியதைக் கேட்டு ரேஷ்வா உட்பட அனைவருமே சிரித்திருந்தனர்.

ஜஸ்ட் இப்போ தான் நினைச்சேன் ஜி இப்படி அமைதியா இருக்க மாட்டாளேனு..உன்னைப் பத்தி பெருமையா சொன்னா உனக்கே பொறுக்காதா?”

மேச்சதோ எரும அதுல ஒரு பெருமையா..நியாயமா பார்த்தா உங்க ரெண்டு பேரையும் ப்ரெண்ட்னு கூட வச்சுருக்குறதுக்கு இந்த வீட்டு வாசல்ல சிலை வைங்க..அதைவிட்டுட்டு அம்மாக்கு கதை சொல்லிட்டு இருக்கீங்க..

ஆன்ட்டி சிம்பிளா சொல்லனும்னா இதுங்க ரெண்டையும் நல்ல முறைல வச்சு வளர்த்துட்டு வர்ற பெருமை என்னையே சாரும்.இதுக்காக நீங்க என்னை புகழ எல்லாம் வேணாம்.பேசிகலி ஐ அம் ஷை யூ நோ..”

ஆத்விக் அருகிலிருந்து சிறு தலையணையை எடுத்து அவளை அடிக்க ஆரம்பிக்க சரியாய் ரினிஷா உள்ளே நுழைந்தாள்.அவளைக் கண்ட ரேஷ்வாவோ ஒரு நொடி சுற்றம் மறந்து போயிருந்தான்.அழகான பிங்க் நிற க்ரீப் புடவையில் மிதமான ஒப்பனையோடு புடவையின் ஒற்றைத் தலைப்பை கையில் பிடித்தவாறு நின்றிருந்தாள்.

அதை கவனித்தவளாய் ஜீவிகா சத்தமாய்,”வாம்மா ரினிஷா பார்த்து எதுக்கும் புடவையை தூக்கிப் பிடிச்சு நடந்து வா..சிலர் விடுற ஜொள்ளுல இங்க போட்டே விடலாம் போல..புடவை பத்திரம்..”,என்று முடித்ததுதான் தாமதம் ரேஷ்வா சட்டென எழுந்து தொண்டையை செருமியவாறே அவளருகில் சென்று அவளை அழைத்து வந்தான்.

ரினிஷாவிற்கோ முகம் பூவாய் மலர்ந்து விட்டிருந்தது.ரேஷ்வாவின் பார்வை ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதைப் போன்று அவளைப் பார்த்திருந்தான்.

மாம் ரினிஷா!”

இருவருக்குமான அறிமுகத்தை செய்து வைக்க ரினிஷா வருங்கால மாமியாரின் காலில் விழுந்து ஆசிப் பெற்றாள்.

நல்லாயிரும்மா..இரண்டு பேரும் வாழ்க்கை மொத்தமும் இதே மாதிரி அன்போட இருக்கணும்.”

தேங்க்ஸ் ஆன்ட்டி..”

என்ன ஹீரோயின் மேடம் இவ்வளவு அடக்கமா கொஞ்சம் ஓவர் அக்டிங்கா இருக்கோ!”

ஐயோ ஜி ஏன் இப்படி பண்ற..நானே செம டென்ஷன்ல வந்துருக்கேன்.நீங்க எல்லாம் இருக்குறதுனால தான் கொஞ்சம் பெட்டர்.பில்டிங் ஸ்ட்ராங் பட் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கு ஜி..”என அவளின் காதருகில் ரகசியம் போல் கூறினாள்.

ஐய்யையே உன்னை என்னவோனு நினைச்சேனே..சரி விடு ஆனாலும் உன் ஆளு விட்டா இப்போவே உன்னை தண்ணியில்லா காட்டுக்குத் தூக்கிட்டு போய்ருவாரு போல..அங்க பாரு..”!

அப்போதும் ரேஷ்வா அவளிடமிருந்து விழியகற்றாமலலே தான் அமர்ந்திருந்தான்.சந்திரிகா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.