(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 26 - தேவி

Kaanaai kanne

ப்ரித்வி அவளுக்குப் பாடிகார்ட் எனவும் கிருத்திகாவிற்கு சில சந்தேகங்கள் தோன்றின. அதைக் கேட்க முயலுகையில், ப்ரித்வி

“கிருத்திகா, இப்போ இங்கிருந்து கிளம்பலாம். உன் ப்ரொபசர், பிரெண்ட்ஸ் எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றான்.

“ஓகே பாஸ். ஆனால் இப்போ நான் அங்கே என்ன சொல்லணும்?”

அவனே சொல்லணும் என்று நினைத்ததை , சட்டென்று அவளே கேட்டதும் ப்ரித்வியின் பார்வை பாராட்டியது.

“எஸ் கிருத்தி, நானே சொல்லனும்னு நினைச்சேன். அங்கே அஸ் யூசுவல் வழி மாறி போயிட்டதாவே சொல்லு”

“பாஸ், ஒட்டு மொத்தமா என்னோட இன்டெர்னல் மார்க்ஸ்க்கு இங்கியே சங்கு ஊதிடுவீங்க போலவே. ப்ரொபசர் அப்புறம்  டைனோசரா மாறிடுவார்.”

“ஹ்ம்ம்.. உன்னைக் கடத்த ட்ரை பண்ணுனாங்கன்னு சொன்னா எல்லோரும் டென்ஷன் ஆகிடுவாங்க. பிறகு ட்ரிப்பே கான்செல் பண்ணினாலும் ஆச்சர்யப் படறதுக்கு இல்லை.”

“அதான் யோசிக்கறேன் சார். “

“சரி, அங்கே மற்ற டூரிஸ்ட் குரூப்லே ஒருத்தர் மயங்கி விழுந்துட்டாங்க. நீ ஹெல்ப் பண்ண போனதா சொல்லு”

“பொய்யா?” என்று முகம் சுழிக்கவும்,

“ஹையோ .. அம்மையார் அரிச்சந்திரனுக்கு கசின் சிஸ்டர். “ என்று நக்கல் அடித்தான் ப்ரித்வி.

“ஹி.ஹி. நாமளா ஒரு ஸ்டோரி டிவலப் பண்றது ஓகே. உங்க ஸ்க்ரீன் ப்ளேக்கு நான் நடிச்சால், ரியாலிட்டி இருக்காதே பாஸ்” என்று கூறவும்,

“ரியாலிட்டியா வேணும்? பிக் பாஸ் ஹவுஸ்லே ஆள் பத்தலையாம். ஆண்டவர் கூப்பிடுறார் . உன்னைக் கொண்டு தள்ளிவிட்டு வரேன்”

“சார், அங்கே நடிக்கிறவங்களுக்கு ஆஸ்கார்க்கும் மேலே ஏதாவது அவார்ட் இருக்கான்னு ரிசர்ச் பண்ணிட்டு இருக்காங்க”

“உஸ்ஸ். உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? இப்போ என்ன உன்னாலே பொய் சொல்ல முடியாதா? அப்போ நான் சொல்லிட்டுப் போறேன்”

“ஹலோ, நான் எப்போ அப்படிச் சொன்னேன். ?”

“நீதானே இவ்ளோ நேரம் பொய்யா? நானா? அப்படின்னு சந்தூர் சோப்பு விளம்பரம் போட்டுட்டு இருந்த?”

“அட . பிரின்ஸ் . உங்களுக்குக் கூட இந்த மொக்கை ஜோக்ஸ் எல்லாம் வருதே?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.