(Reading time: 9 - 17 minutes)

அசைவுகளில் அவைகள் அசைய , கண்டவர்களின் கண்களுக்கு நல்ல விருந்தே.

சற்று நேரத்தில் அவன் கீழே இறங்கி வரவும், அவனைக் கண்டுக் கொண்ட காவலாளி ஒருவன்,

“பிகானர் இளவரசர்” என்று முழங்க, “ஜெய் பவானி” என்றக் குரல் கேட்டது.

இந்தக் காட்சி அமைப்பும், சத்தங்களும் கிருத்திகாவின் காதுகளில் தெளிவாகக் கேட்டது. இத்தனைக்கும் சுற்றி வர இவளின் பிரெண்ட்ஸ் கல கல என்று பேசிக் கொண்டு இருந்தனர்.

எல்லோரும் பேசிக் கொண்டு நடந்து கொண்டிருக்க, கிருத்திகா மட்டும் நின்று விட்டதைக் கண்ட ராகவி அவளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கொஞ்ச தூரம் வரை அந்த உணர்வு கூட இல்லாமல் இருந்தவள், பிறகே சுற்றுப் புறத்தில் கவனம் செலுத்தினாள்.

இதை எல்லாம் பார்த்து முடித்து விட்டு, பிறகு புல் சிட்டி வியு , இரவு வெளிச்சத்தில் பேலஸ்சின் அழகு எல்லாவற்றையும் அததற்கு இருந்த இடத்திற்குச் சென்று கண்டு களித்தனர்.

நன்றாகச் சுற்றிவிட்டு வந்தவர்கள், ஏற்பாடு செய்து இருந்த உணவு வகைகளை ஓர் வெட்டு வெட்டி விட்டுப் படுப்பதற்குச் சென்றனர்.

எல்லோருமே அலுப்பில் சட்டென்று உறங்கி விட, கிருத்திகாவிற்கும் அலுப்புதான் என்றாலும், ப்ரித்வியிடம் பேசுவதற்காகக் காத்து இருந்தாள். அவள் அவனைத் தேடி வரவும்

“என்னம்மா கிருத்திகா, எதுவும் பிரச்சினையா?” என்றுக் கேட்டான்.

“இல்லை சார், உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றவுடன், அவளை அங்கிருந்த காரிடரின் ஓரத்தில் வியு பாயிண்ட்டிற்காக போடப்பட்டு இருந்த நாற்காலியின் அமரச் சொன்னான்.

கிருத்திகா அமரவும்,

“சொல்லு” என்றான்.

“பிரின்ஸ், பெரியப்பா ஏன் திடீர்ன்னு பாடிக் கார்ட் எல்லாம் ஏற்பாடு செய்து இருக்கார்?” என்று கேட்டாள் கிருத்திகா.

சற்று யோசித்த ப்ரித்வி “உங்களுக்கு அந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியால் பிரச்சினை வருமோன்னு பயப்படுறார். என்றான்.

“இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போ திடீர்ன்னு ஏன் பண்றார்? என்னை நானே ஸெல்ப்ஆ பார்த்துப்பேன்ன்னு தெரியுமே. அப்படி இருந்தும் அவங்களுக்குப் பயந்து இப்போ உங்களை வேறே அனுப்பி வச்சு இருக்கார். ஏன்?”

“ஏன் என்றால், அந்த அரசியல் வாதியோட மகன் , அவன் ஆட்களோடு உன்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறான். “ என்றுக் கூறவும் கிருத்திகா அதிர்ந்து முழித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.