(Reading time: 9 - 17 minutes)

அவர்களின் ஆரவாரம் அடங்கிய பின்

“எஸ் பிரெண்ட்ஸ். இங்கே யானை சண்டை தான் நடக்கும். போர் இல்லாத காலங்களில் சும்மாவே இருந்தால், யானைகள் உபயோகப் படாமல் போய்விடும். அதனால் மாலை வேளைகளில் யானைகளை சண்டையிட வைத்து , அவைகளின் சுறுசுறுப்பை பாதுகாத்துக் கொள்ளச் செய்திருந்தார் ராணா. பொது மக்களுக்கும், களைத்து வீட்டிற்குச் செல்கையில் ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்றும் கூறியதாக கேள்வி”

“இப்போதும் அதே போல் நடக்குதா சார்?

“இல்லை. ஆனால் முக்கியமான விழாக்காலங்களில் யானை அணிவகுப்பு இங்கே உள்ள லோக்கல் அதிகாரிகள் நடத்தி வருவதாகக் கேள்விப் பட்டேன்”

எல்லோர் மனத்திலும் அந்தக் காட்சிகள் கற்பனையாக விரிந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தக் காட்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டனர்.

கிருத்திகாவிற்கோ, அந்தக் காட்சிகள் ராணி கிரண் தேவியும், இளவரசன் ப்ரித்விராஜும் வரி வடிவங்களாகத் தெரிய, அவர்களின் உரையாடல்களோ காதில் ஒலித்தது.

இளவரசி, ப்ரித்விராஜ் இருவரும் அருகே அவர்களின் அரண்மனைக்குள் செல்லும் முன்னர், வெளி வாயிலுக்கு அருகில் இருந்த மைதானத்தின் புறம் சென்றான் ப்ரித்வி.

கல் திண்டில் மேவார் தனாதிபதிகள் அமர்ந்து இருக்க, ஒரு சில அரச குடும்பப் பெண்களும் அங்கே இருந்தனர். ப்ரித்விராஜ்ஜின் பார்வை, கிரண் தேவியிடம் இருக்க, அவளோ அவன் என்ன செய்யப் போகிறான் என்பதாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சற்று நேரத்தில் அவள் விழிகள் விரிந்தன. ஒரு யானையின் மேல் அமர்ந்து இருந்த ப்ரித்விராஜ், அதன் காதுகளில் இலகுவாகத் தடவிய படி ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.

பொதுவாக ராஜபுத்திரர்கள் தங்களுக்குச் சொந்தமான பெண், வாள், குதிரை மூன்றையும் அடுத்தவரிடத்தில் விட்டுக் கொடுப்பதில்லை. வாள், குதிரை இரண்டையும் பராமரிப்பதிலும் கை தேர்ந்தவர்கள். ஆனால் அதிகம் யானையின் மேல் அமர்வது இல்லை.

ஆனால் இந்த பிகானர் இளவரசனோ சிறிது நேரத்திற்குள்ளாகவே,  யானைகளையும்  அவன் சொன்னப் படி கேட்கும் அளவிற்கு வசியப் படுத்தி இருந்தான்.

யானையின் மேல் ஏறி , அவன் சொல்லும் திசையில் , சொல்லும் வகையில் முன்னும் பின்னுமாக அவைகள் நடை போட்டுக் கொண்டு இருந்தன. ஒரே மாதிரியான

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.