(Reading time: 9 - 17 minutes)

“அது என்ன எனக்குக் கூட.நாங்களும் உங்க ஸ்டேஜ் எல்லாம் தாண்டி வந்தவங்க தான். “

“ஓகே. ஓகே. சமாதனம். இப்போ நான் சொல்லனுமா? நீங்க சொல்றீங்களா?”

“நானே சொல்றேன். இல்லாட்டா உன்கிட்ட இன்னும் ப்ரோபாசர் காண்டாகிடுவார்.” என்றவன், “ ஆர் யு ஆல்ரைட் நொவ்? நடக்க முடியுமா? இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறியா?” என்று கேட்டான்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை பாஸ். ஐ அம் ஓகே” என்றாள்.

ப்ரித்வி தன் உதவியாளர்களிடம் போனில் அவர்கள் இருக்குமிடம் கேட்டு, நேராக அங்கேயேச் சென்றான். இவர்கள் இருவரும் வந்ததும், ப்ரொபசர் கிருத்திகாவைக் கேள்விகள் கேட்க, ப்ரித்வியே “கிருத்திகா போன் பேசிவிட்டு வரும் வழியில், டூர் வந்த கப்பிளில் ஒரு பெண் மயங்கி விழுந்ததாகவும், அந்தப் பெண்ணின் கணவன் தனியே விட முடியாமல் தயங்கியதைக் கண்டு டாக்டர் வரும் வரை துணை இருந்ததாகவும் , அதில் இவர்கள் எல்லோரும் சென்று விட்டதை மிஸ் செய்து விட்டதாகவும்” பதில் சொன்னான்.

கிருத்திகாவிற்குப் பதில் ப்ரித்வியே பதில் சொன்னதும், அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் கிருத்திகாவை ஒரு முறை முறைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

அந்த சிட்டி பேலஸ் மட்டுமே அன்று முழுதும் சுற்றிப் பார்த்தனர் கிருத்திகா மற்றும் அவள் கல்லூரி மாணவர்கள். அத்தனைப் பேருக்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் அடங்கவே இல்லை.

தேவையான இடங்களில் அந்த இடத்தைப் பற்றி விவரித்தனர் பிரிதிவிராஜ் மற்றும் அவன் குழுவினர். அவர்களின் படிப்பிற்கு இவைகளில் என்னவெல்லாம் உபயோகமாக இருக்கும் என்பதை ப்ரொபசர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

சந்திரன் எழும் நேரத்திற்கு சற்று நேரம் இருக்கும் போது, எல்லோரையும் மிகப் பெரிய மைதானம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான் ப்ரித்வி. மைதானம் நடுவில் பரந்து விரிந்து இருக்க ஒரு புறம் சிறய மேடை போன்று இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கல்லில் படிக்கட்டுகள் நீளமாக இருந்தன. அங்கே அங்கே கொஞ்சம் இடைவெளியும் இருந்தது.

மாணவர்கள்

“சார், இவ்ளோ பெரிய ப்ளேயிங் கிரௌண்ட்டா? இங்கே என்ன சார் செய்வார்கள் மேவார்ஸ்?” என்று கேட்டனர்.

“இந்த இடத்தில் தான் யானை சண்டை நடக்கும்” என்று கூறினான் ப்ரித்வி.

“வாவ்” என்று கோரசாக குரல் எழுப்பினார்கள் மாணவர்கள்/

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.