Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ஹாய் ஃபிரென்ட்ஸ்,

என்னோட நிறைய கதைகள்ல ‘அண்ணி’ கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்! இதுக்கு பின்னால பெரிய சீக்ரட் எல்லாம் இல்லை!

எனக்கு பிரதர்ஸ் இல்லை, என் கணவருக்கு சிஸ்டர்ஸ் இல்லை ;-) அதனால் அந்த உறவின் தன்மையை ப்ராக்டிகலாக நான் உணர்ந்தது இல்லை. ஆனால் அப்படி ஒரு உறவு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் எனும் என மனதில் இருக்கும் யோசனையின் வெளிப்பாடு தான் அது :-)

அதனால் தான் பொதுவாக இந்த உறவு ஸ்வீட், ஸ்வீட் உறவாக என் கதைகளில் இருக்கும்!

எனக்குத் தெரிந்து முதல் முறையாக இந்த கதையில் தான் ‘காரம் காரம்’ உறவாக வராங்க ;-) இது எனக்கு ரொம்பவே புதுசு :D

ரொம்பவே கஷ்டமா இருக்குன்னு வச்சுக்கோங்களேன்!!! :p

அதனால தான் இவங்க சீக்கிரம் ஸ்வீட், ஸ்வீட் உறவாக மாறிடுவாங்கன்னு உங்களுக்கும் சேர்ந்து எனக்கும் நானே போன எபிசோட்ல hint கொடுத்துக்கிட்டேன்!!!! ;-)

★★★★★★★★★★★

ஞ்சுவிற்கு ரொம்பவும் போர் அடித்தது!

மொபைல் போனை எடுத்துப் பார்த்தாள்!

அவள் ஒரு மணி நேரத்திற்கு முன் அனுப்பி இருந்த மெசெஜிற்கு, மனோஜ் இன்னமும் பதில் அனுப்பி இருக்கவில்லை. பிஸியாக இருக்கிறான் போலும்...

யோசித்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்... வினோதினி பொதுவாக இந்த நேரம் ஆபிசில் இருந்து வீடு திரும்பி இருப்பாள்...

அவளுடன் கொஞ்சம் நேரம் கதைப் பேசலாம் என்ற முடிவுடன் வந்தவள், வினோதினியின் அறையின் பக்கம் பார்த்த காட்சியில் அசையாமல் நின்றாள்...!

நிர்மலா ஆவிப் பறக்கும் காஃபியையோ, டீயையோ வினோதினிக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்...

மஞ்சு பார்த்துக் கொண்டிருக்க, திரும்பி நடந்த நிர்மலா, மஞ்சுவை கடந்து தான் செல்ல வேண்டி இருந்தது...

இருவரும் ஒருவரை ஒருவர் ‘ஒரு’ப் பார்வை பார்த்துக் கொண்டார்கள்...

நிர்மலா நகர்ந்து சென்று விட... மஞ்சு அங்கேயே நின்றிருந்தாள்...!

சின்ட்ரெல்லா கதை தொடங்கி, கல்லூரியில் அவளுடன் படித்த தோழி ஒருத்தி வரை சொல்லி இருந்த மாற்றாந்தாய் கதைகள் அவளுக்கு நினைவு வந்தது!

இதை பின் வேறு எப்படி சொல்வது???

தானாகவே அவளின் மனம் அம்மா வீட்டில் அனுபவித்திருந்த சுதந்திரங்களைப் பற்றி யோசித்தது...

திருமணத்திற்கு முன்பு வரை செல்லமும், கண்டிப்புமுமாய் அம்மா கொடுத்த காஃபி, காலை உணவு, லஞ்ச், இரவு உணவு என அனைத்திற்குமான மதிப்பு இப்போது புரிந்தது...

அந்த கொஞ்சலுக்கும், அரவணைப்புக்கும் இப்போது மனம் ஏங்கியது...

மனம் அலைப் பாய, மெல்ல சமாளித்துக் கொண்டு நடந்தாள்...

வினோதினி கதவை மீண்டும் சாத்தி வைத்திருந்தாள்... எனவே மெல்லக் கதவை தட்டினாள்...

“இதென்ன புது பழக்கம்? உங்களுக்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கேன்... வாங்க...” என்ற வினோதினியின் குரல் உள்ளே இருந்து ஒலித்தது...

“ஹ்க்கும்... நான் மஞ்சு....”

கதவு சட்டென திறந்தது....

“சாரி மஞ்சு... நான்...”

“என்ன நினைச்சீங்கன்னு தெரியுது!!!! sorry to disappoint you... எனக்கு ரொம்ப போர் அடிச்சுது...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]Adharv 2019-07-22 17:04
Missing Mr M....😜 avalo busy yo??
Cool and interesting update Bindu ma'am 👏 👏👏 👏 first andha pona nails cut.pana sollungale hero.sir ku therinja thudichi poiduvaru 😍😍 :D

Nirmal aunt's partiality and jyo oda inferior complex eppo than pogumo..

Waiting to see the sweet sweet patch upmoment of jyothi and manju. Thank you and keep.rocking. photo parthu irupangalo??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-25 07:50
Thank you Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]Saju 2019-07-22 15:11
Super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-25 07:49
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-07-22 12:29
:clap: nice epi mam. :Q: jothy appadi nadanthu kolvathaal veruppu thaane varum.idhu jothiku theriyavillaiya or veru kaaranam irukkuma? :thnkx: 4 this epi :thnkx: :thnkx:
Eagarly waiting 4 next epi. :GL: :thnkx: 9 pages. :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 19 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-25 07:49
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top