(Reading time: 7 - 14 minutes)

தான் திடுக்கிட்டாள்.

நைலான் கயிறில் சிக்கிக் கொண்ட அந்த ஆக்டபஸ் அதிலிருந்து விடுபட தவித்துக் கொண்டிருந்தது.

கேமராவை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டவள் தனது டைவ் சூட்டின் பாக்கெட்டில் இருந்த சிறு கத்தியை எடுத்துக் கொண்டு ஆக்டபஸை நெருங்கினாள்.

அவளைக் கண்ட ஆக்டபஸ் மிரண்டு தப்பிக்க முயல, கயிறு பிணைத்துக் கொண்டிருந்ததால்  முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

ஆக்டபஸ் நைலான் கயிறோடு போராட தேன்மொழி அதனை விடுவிக்க பாடுபட அப்போது தான் அங்கே வந்தது அந்த ஜீவன்.

மனிதன் இன்னும் அறிந்திராத எண்ணற்ற பிராணிகள் கடலுக்குள் இருக்கிறது என்று தேன்மொழி அறிவாள்.

குழந்தை பருவத்தில் இருந்து கடல் கடல் வாழ் பிராணிகள் பற்றய புத்தகங்களை நிறைய படித்தவளுக்கு ஓரளவு கடலுக்குள் வாழும் பிராணிகளை பற்றிய அடிப்படை அறிவு உண்டு.

ஆனால் இப்படி ஒரு ஜீவராசியை அவள் இது வரை கண்டதும் இல்லை கேள்வியுற்றதும் இல்லை.

செக்கச் சிவந்த நிறத்தில் தங்க ஓடு கொண்ட ஆமை என்றே நினைத்தாள் அவள்.

ஆனால் அவர்களை நோக்கி அது நெருங்கி வர தேன்மொழி விழி விரித்து திகைத்து நின்றாள்.

கடலாமை தோற்றத்தில் ஆனால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

கடலாமைகளுக்கு நான்கு கால்கள் தான் அவள் கண்டிருக்கிறாள். ஆனால் அவள் புறம் வந்த பிராணிக்கு ஆறு கால்கள் இருந்தன.

மூக்கும் முழியும் கிட்டத்தட்ட குரங்கைப் போன்ற முக அமைப்பு கொண்டிருந்தது.

அப்பிராணி அவர்கள் அருகில் வந்து முன்னங்கால்களை கை போல நீட்டி ஆக்டபஸைப் பற்றிக் கொள்ள தேன்மொழி விரைவாக செயல்பட்டாள்.

சில நிமிடங்களில் ஆக்டபஸ் ஓரளவு விடுபட்டு விட அதன் ஒரு கரம் நன்றாக சிக்கிக் கொள்ள அக்கரத்தை ஆக்டபஸ் துண்டித்துக் கொண்டது.

இது ஆக்டபஸ்களின் இயல்பு ஆகும். ஆபத்து சமயங்களில் தங்களது கரத்தை துண்டித்துக் கொள்ளும் இயல்பு அதற்கு உண்டு. அந்த கரமானது மீண்டும் வளர்ந்து விடும்.

விடுதலை பெற்ற ஆக்டபஸ் அதிவேகமாக அங்கிருந்து நீந்தி சென்றுவிட செக்கச் சிவந்த ஆமையும் குரங்கும் கலந்த அந்தப் பிராணி தேன்மொழியை உற்றுப் பார்த்தது.

அப்போது தான் கடலுக்க்குள் மிக பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.