(Reading time: 7 - 14 minutes)

நிலநடுக்கத்தால் கடல் சுழன்று கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அப்படி ஒரு சுழலில் தேன்மொழி அகப்பட்டுக் கொள்ள அவள் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு பாறையில் வேகமாக மோதி சிதறியது.

ஜப்பான் நாட்டின் அமா டைவர்களிடம் பயிற்சி பெற்றவள் தான் அவள். என்றாலும் சுழற்றி அடித்த கடலுக்குள் அவள் சிக்கி சுழன்றாள்.

நினைவு தப்ப கொஞ்சம் உணர்வு மட்டுமே எஞ்சியிருக்க யாரோ அவளைப் பற்றிக் கொண்டு இழுப்பது போல உணர்ந்தாள்.

அந்த நினைவு பூரணமாக திரும்பியிருக்க அவள் மெல்ல கண் விழித்தாள்.

முழுமதி தனது பால் ஒளியை பாரெங்கும் பாய்ச்சிக் கொண்டிருந்தது.

அவள் மெல்ல எழ முயற்சிக்க அவளைப் பற்றிக் கொண்டிருந்த பிடி மிக கெட்டியாக இருந்தது.

சிறு வயதில் குடும்பத்தினர் அனைவரும் தேன்மொழியை உப்பு மூட்டை சுமந்து கொண்டு விளையாடுவார்கள்.

அப்போது இரு கரங்களை பின்னால் வளைத்து தேன்மொழியை பாதுகாப்பாக பிடித்துக் கொள்வார்களே தாத்தாவும் அப்பாவும் அண்ணன்களும்.

அது போலவே அவளை முதுகில் சுமந்து கொண்டு இரு கரம் கொண்டு அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது அப்பிராணி.

கடலுக்குள் ஆக்டபஸை விடுவிக்க உதவி செய்த அதே பிராணி என்று தேன்மொழி அறிந்து கொண்டாள்.

நினைவு தப்பிய நிலையில் கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தவளை முதுகில் சுமந்து கரை சேர்த்து அவள் உயிரைக் காப்பற்றிய அந்த சிவந்த ஜீவன் மீது தேன்மொழிக்கு அளவில்லா அன்பும் நன்றியும் சுரந்தது.

தனது கரம் கொண்டு அதன் கழுத்துப் பகுதியை மெல்ல தடவினாள்.

அவளது ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டது போலும். மெல்ல அதன் பிடி தளர்ந்தது.

தேன்மொழி அதன் முதுகில் இருந்து இறங்கி கரையில் கால் பதிக்க சற்றே தள்ளாடியவள் அதன் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

அவள் பலத்தைத் திரட்டி கரையை நோக்கி நடந்தாள்.

தான் எங்கு இருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணலும் பாறையுமே தென்பட மரமோ செடி கொடியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.