(Reading time: 7 - 14 minutes)

காணவில்லை.

இப்போது அவளை காப்பாற்றிய ஜீவனை நோக்கினாள்.

அதுவும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

பார்ப்பர்வர்கள் யாரும் ஆமை என்றே தான் எண்ணுவர். ஆனால் சற்றே நெருங்கி உற்றுப் பார்த்தால் பெரிய கண்களும் கூரிய நாசியும் வட்ட வடிவமான முகமும் தென்படும்.

இப்போது அந்தப் பிராணி தனது கரங்களை ஓட்டுக்குள் சுருட்டிக் கொண்டுவிட்டது.

தேன்மொழி பார்த்துக் கொண்டிருக்கவே அப்பிராணி மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து கடலுக்குள் சென்று விட்டிருந்தது.

நடந்ததை அவள் அறிவு உணர சற்று நேரம் பிடிக்க அப்பிராணி கடலுக்குள் மறைந்து விட்டதை உணர்ந்தாள்.

ஆமை தானோ அது. ஆமையில் ஓர் வகையாக இருக்க வேண்டும். ஆனாலும் எங்கிருந்தோ வந்து ஆக்டபஸையும் காப்பற்றி தன்னையும் காப்பாற்றிய அந்த ஜீவன் தேன்மொழியின் மனதில் நீக்கமற நிலைத்து விட்டிருந்தது.

தான் எங்கு இருக்கிறோம் என்று ஆராய முயன்றாள். உயரமான பாறை ஒன்றின் மீது அவள் சிரமப்பட்டு ஏறி நின்று சுற்றிப் பார்க்க அதிர்ந்தாள்.

மிகச் சிறிய தீவு அது.

தீவு என்று கூட சொல்ல முடியாது. கடலுக்கு நடுவில் எழும்பியிருந்த சிறிய நிலப்பரப்பு என்று சொல்லலாம்.

ஒரு பெரிய விளையாட்டு மைதானம் போன்றே காட்சி தந்தது. நாலாபுறமும் அலைகள் முத்தமிட மற்ற சமயமானால் அந்தக் காட்சி தேன்மொழிக்கு அற்புதமாக இருந்திருக்கும்.

ஆனால் இப்போது அவள் பரந்து விரிந்த கடலின் நடுவில் ஒரு சிறிய தீவில் தன்னந்தனியாக சிக்கிக் கொண்டிருக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தேன்மொழி நினைவு படுத்திக் கொண்டாள்.

பதட்டபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்.

தேன்மொழி நீண்ட மூச்சுகளை எடுத்து தன்னை அமைதி படுத்திக் கொள்ள தாத்தாவும் அதையே தான் செய்து கொண்டிருந்தார்.

அவள் கடலை உண்மையாக நேசித்தாள். கடல் அவளை கைவிட்டு விடாது என்று தாத்தா பரிபூரணமாக நம்பினார். ‘அந்த நம்பிக்கை துணை கொண்டு தேன்மொழியை மீட்கும் வழிகளை ஆராய்ந்தார்.

தொடரும்

Episode # 11

Episode # 13

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.