கரை சேர்த்து மீண்டும் அவளைத் தேடி வந்து அவளுக்கு உணவு அளிக்கும் இந்த பிராணி அவளுக்கு கடவுளாகத் தெரிந்தது. .
பெயர் தெரியாத இந்த பிராணியைக் கண்டு அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது.
ஆமை என்று சொல்ல முடியாது தான். ஆமைகள் டைனாசர் யுகம் தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரனம். ஆனாலும் அதிக அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருக்கும் வெகு சில உயிரினங்களில் ஒன்று.
அல்டாப்ரா ஆமைகளின் அரசாங்கம் என்பதால் அவளுக்கு ஆமைகள் பற்றிய ஞானம் அதிகம் உண்டு.
ஆனால் ஆமை போன்ற இந்தப் பிராணி அவளுக்கும் ஆச்சரியம்.
ஆக்டபஸ் டால்பின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் மிகுந்த அறிவுத் திறனும், உணர்வுகளும் கொண்டவை ஆமைகளிடமும் நிறைய விசேஷ குணங்கள் உண்டு.
குறிப்பாக எந்த கரையில் பிறந்ததோ அதே கரையைத் தேடித் பிடித்து வந்து வளர்ந்ததும் முட்டையிடும் பெண் ஆமைகள்.
ஏதோ ஒரு கடலில் வாழ்ந்தாலும் தான் பிறந்த கரையை பல வருடங்கள் கழித்தும் அடையாளம் வைத்து பயணிக்கும் இந்த ஆமைகளின் தன்மையை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
ஒரு பெண்ணின் தலைப்பிரசவம் தாய் வீட்டில் என்ற தமிழர் பண்பாட்டிற்கு இந்த ஆமைகளின் தன்மையும் காரணமாக இருக்கலாம்.
பழந்தமிழர்களின் கடல் பிரயாணங்களில் கடல் ஆமைகள் வழிகாட்டியாக உற்றத் தோழனாக இருந்து வந்திருக்கின்றன.
தேன்மொழி இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்திருந்தாள். ஆமை போன்ற இந்த பிராணி ஆமையை விட மிகுந்த அறிவுத் திறனும் உணர்வுகளும் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
அந்த நன்றிப் பேருக்கும் அன்பும் அவள் விழிகளை சுரக்கச் செய்தன. அவள் அதன் முதுகில் இருந்து இறங்கி அதன் முகத்தை நோக்கினாள்.
அவள் விழி நீரைக் கண்ட அந்தப் பிராணி நீண்ட கரம் நீட்டி அவளை அனைத்துக் கண்டது.
அதன் மறுகரத்தில் இருந்த கடல் தாவரத்தை வாங்கி மெல்ல மெல்ல உண்டு முடித்தாள்.
ஆமை மீண்டும் கடலுக்குள் செல்ல முற்பட தேன்மொழி அதன் கழுதை இறுக கட்டிக் கொண்டாள்.
“போகாதே. இங்கே என்னை தனியாக விட்டு விட்டுப் போகாதே” அவள் கெஞ்சிக் கொண்டிருக்க அவள் மொழிகளை அது புரிந்து கொண்டதா இல்லையா என்று அவளுக்கு தெரியவில்லை.