(Reading time: 9 - 17 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

அவளை மெல்ல விளக்கி மீண்டும் கடலுக்குள் சென்று மறைந்து விட்டிருந்தது.

கடல் தாவரம் இன்னும் அவள் கையில் மிச்சம் இருந்தது.

இரவு பாதுகாப்பு அளித்த பாறை இடுக்கில் சென்று அதனை பத்திரப்படுத்தி வைத்தாள்.

உச்சிப் பொழுதின் உஷ்ணம் அதிகமாக தனது டைவிங் சூட்டை மறைவாக கூடாரம் போல அமைத்தாள்.

எப்படியாவது இங்கே இருக்கிறோம் என்று தகவல் தெரிவிக்க வேண்டுமே. என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தாள்.

அந்தி சாயும் வேளை கரையில் நடை பழகிக் கொண்டிருந்தவள் உற்சாக கூச்சலிட்டாள்.

செந்நிறத்தோன் அவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.

இப்போதும் அதன் கரங்களில் கடல் பாசியும், தாவரமும் இருந்தன.

அவள் அதை வாங்கிக் கொண்டு பாறையின் பக்கம் செல்ல அந்த ஆமை போன்ற பிராணியும் அவளை பின் தொடர்ந்தது.

பாறை இடுக்கில் வைத்து விட்டு ஓர் பாறையில் அவள் அமர்ந்து கொள்ள அவள் முகம் பார்த்தவாறு அதுவும் அருகில் படுத்திருந்தது.

அதன் மேல் சாய்ந்து கொண்டாள் தேன்மொழி.

“யாருடா நீ. எங்கிருந்து வந்தாய். ஆக்டபஸ காப்பாற்ற ஹெல்ப் செய்தாய் சரி. என்னை காப்பாற்றியதும் இல்லாம இவ்வளவு அக்கறையா என்னை கவனித்துக் கொள்கிறாயே. நீ யார்ன்னு சொல்லு” அவள் அதனிடம் உரையாடிக் கொண்டே இருந்தாள்.

தேய்பிறை நிலவு எனினும் பௌர்ணமியின் அடுத்த தினம் என்பதால் முழு நிலவைப் போலவே காட்சி அளித்தது.

அதன் சிவந்த நிறம் நிலவொளியிலும் பொன்னிறம் கலந்து ஒளி வீசியது.

அந்த நொடி அவள் மனதில் திடீரென ஓர் எண்ணம் உதயமாக அந்தப் பிராணிக்கு பெயர் சூட்டியிருந்தாள். 

“செந்தமிழ், செந்தமிழ்...உனக்கு எவ்வளவு பொருத்தமான பேர். பிடிச்சிருக்கா” அவள் கேட்க அதற்கும் புரிந்து போனதோ என்னவோ கரத்தை நீட்டி அவளை பிணைத்துக் கொண்டது.

அதனைக் கட்டிக் கொண்டவள் மெல்லிய குரலில் பாடினாள்.

“இவள் செந்தமிழ் தேன்மொழியாள்”

தொடரும்

Episode # 13

Episode # 15

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.