Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா

ழநியில் - அபிநாதன் தன் அறையில்

ஆதிரை அவனுக்கு கடந்த காலத்தை காட்சிகளாகக் காட்டினாள். வெறும் 1 மணி நேரத்தில் அவனது பூர்வீகம் முதல் ஆதிரையின் கடந்த காலம் வரை பார்த்துவிட்டான் அபி.

துறவியோ ஆதிரைக்கு தனது சக்திகளையும் அவளது கடந்த கால வாழ்க்கையில் அதுவும் தான் கண்ட நினைவுகளையும் சேர்த்து அளித்திருந்தார். அவ்வளவு நினைவுகளையும் சுமந்திருந்த அவள் மனம் இப்போது அமைதியாகியது, கடந்த கால நினைவுகளைக் கண்டதும் அபிநாதனுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. தனது முறைப்பெண்ணாவது உயிரோடு இருக்கிறாள் என நினைத்தான். அதே சமயம் கடந்த காலத்தில் நடந்தவற்றைக் கண்டதும் அவன் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியும் மட்டுமே அடைந்தான். ஆதிரையை அன்பாக அணைத்திருந்தவன் மெல்ல விலக்கி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது, அதைக் கண்டவன்

உன் மன பாரத்தை என்கிட்ட இறக்கி வைச்சிட்ட ஆனா, இப்ப என் மனசுதான் பாறாங்கல்லா கனக்குது ஆதிரைஎன்றான் சோகமாக

அதைக் கண்ட ஆதிரையோ மெல்ல அவனது கன்னத்தில் தன் கையை வைக்க அவனோ

வேணாம் நீ எந்த மேஜிக்கையும் செஞ்சி, என்னை சரி செய்ய வேணாம்என சொல்ல அவளோ ஏன் என்பது போல் பார்க்கவும்

என்னோட சோகத்தை உன்னால போக்க முடியும் ஆனா, எதனால எனக்கு அந்த சோகம் வந்துச்சோ அதை உன்னால போக்க முடியாது. உன் அம்மா என்னோட துர்கா அத்தை இறந்துட்ட விசயத்தை எப்படி என்னால வீட்ல சொல்ல முடியும், சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும், சொல்லாம இருந்தாலும் தப்பாயிடும்என அவன் சொல்லி சோக வயலின் வாசிக்க அவளோ அவனது கன்னத்தை தன் கையால் ஏந்திக் கொண்டு முகத்தையே ஆழமாகப் பார்க்க அவனோ

வேணாம் நீ எந்த சித்து வேலையும் செய்ய வேணாம், என் சோகம் என்னோட இந்த கவலை உண்மையானது ஆதிரை, இதை நான் அனுபவிக்கனும் இந்த விசயத்தில நீ எந்த மேஜிக்கையும் செய்யாத, என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத விடுஎன சொல்லியவன் துர்காவின் இறப்பை நினைத்து கண்கள் கலங்கினான். அவனது கண்கள் கலங்கியதைப் பார்த்த அவளது கண்களும் தானாகவே கலங்கியது.

அதுவரை எதற்காகவும் அழாத அவளது கண்கள் இன்று அபி அழுவதைக் கண்டு தனக்கே தெரியாமல் தானாக அவளது கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அவளின் கண்களில் இருந்து வந்த 2 சொட்டு கண்ணீர் துளிகள் அவனது கைகளில் பட்டதும் அவன் உடல் சிலிர்த்தது

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகாJeba 2019-10-08 20:50
wow sasi mam.. Sema interesting story... Padika padika vanthute iruntha nalla irukum but mudinchiduthe... Abi aadhrai cute ... Waiting for next epi .

:clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகாmadhumathi9 2019-10-08 17:58
wow nice epi sasi :clap: (y) romba onteresting aaga poguthu kathai.aduththa epiyai eppothu padippom endru irukku. :thnkx: :thnkx: 4 this big epi. :GL: i pray for you.God bless you. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகாதீபக் 2019-10-07 06:49
Sis today's episode is really fantastic one :clap: . Kadhal divya sakthi concept super for Abhi :grin: .one whole Abhi gather more info Aadharai with help of it how he is going to save her eagerly waiting to know it in the coming episodes. :thnkx: for the beautiful episode. :GL: for the one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top