ரகுவும் நிலாவும் கல்யாணம் முடிந்து, புதிதாய் கட்டப் பட்ட வீட்டிற்கு முன்னால் வந்து நின்றனர்.
“இது யார் இடம் டா இங்க எதுக்கு வந்திருக்கோம்” என்று அடுத்த கேள்வி ரகுவிடம் இருந்து.
“கீழ இறங்கு, அப்பா சொல்லுவாரு” என்று வினோத் கீழே இறங்கினான்.
“ரொம்பதான் டா பண்றீங்க” என்று புலம்பிக் கொண்டே ரகு கீழே இறங்க, அது நிலாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்துக் கொண்டே இறங்கியவளை, அவள் எதற்காக சிரிக்கிறாள் என்று தெரிந்து, அவளை முறைத்தான் ரகு. நிலா அதைப் பார்த்து கண்டு கொல்லாது போல் வேறு திசையில் தலையைத் திருப்பிக் கொண்டு சிரிப்பதை நிறுத்தினாள்.
இருவரும் நடந்து பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
“அம்மா எங்க மா வந்திருக்கோம். அவங்க வீடு இங்கயா இருக்கு” என்று தன் தாயிடம் கேட்டாள் நிலா.
கொஞ்ச நேரம் அமைதியா இரு, அப்பா சொல்லுவாரு” என்று அவளை அடக்கினார் சிவகாமி.
அதைக் கேட்டு ரகு கூறியது ஞாபகம் வர, அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள் நிலா. நல்ல வேளையாக ரகு அதைக் கவனிக்க வில்லை.
இருவருக்கு ஆரத்தி எல்லாம் எடுக்கப் பட்டு, முதல் தளத்தில் இருக்கும் ஒரு apartment வீட்டுக்கு முன்னால் கூட்டிச் சென்று நிருத்தப்பட்டனர்.
அந்த வீடு சாத்தப் பட்டு இருந்தது. அதன் வாசலில் அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு, புது கடைக்கு முன்னால் இருப்பது போல் ribbon கட்ட பட்டிருந்தது.
ஓரளவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று ரகுவிற்கும் நிலாவிற்கும் புரிந்தது.
நாகராஜன் நிலாவின் கையில் கத்தரிக்கோல் கொடுத்து, அந்த ribbonனை வெட்டச் சொல்லி கதவைத் திறக்கச் சொன்னார். நிலாவும் அதையே செய்தால். கதவை திறந்து ரகுவும் நிலாவும் ஒன்றாக தங்கள் வலது கால்ஐ எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.
“உங்க கல்யாணத்திற்கு எங்களோட ஒரு சின்ன பரிசு” என்று நாகராஜன் கூறி அந்த இல்லதின் சாவியை நிலாவிடம் கொடுத்தார்.
“எதுக்கு மாமா இதெல்லாம்” என்றாள் நிலா.
“நீங்க தொடங்கப் போகிற இந்த புது வாழ்க்கை, புது வீட்டில், அதுவும் நீங்க சம்பாதித்த பணத்தில் வாங்கின வீட்டில் தொடங்கினால் நல்ல இருக்கும் நு நாங்க முடிவு செய்தோம். அதுதான் மா இந்த வீடு” என்று நிலாவிற்குப் பதில் அளித்தார் நாகராஜன்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
thanks for the nice comments Madhu..
Thanks for the comments Srivi