(Reading time: 8 - 16 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

வெளியே இருந்த bolcanyயில் போடப் பட்டிருந்த chairல் அமர்ந்திருந்தான். அவன் முகம் அந்த பக்கம் பார்த்த வாரு இருந்ததால் அவன் என்ன செய்கிறான் என்று நிலாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அவனை எப்படி அழைப்பது என்று நிலாவிற்குத் தெரியவில்லை. தாலி வரை கட்டி முடிந்தாகி விட்டது, ஆனால் அவனிடம் இவள் முழுதாக ஒரு வார்த்தை கூட மனம் விட்டு பேசவில்லை. அவனை கல்யாணத்திற்குப் பிறகு எப்படி அழைப்பது என்று கூட அவள் இன்னும் யோசிக்க வில்லை. அதை இப்போது யோசிக்கும் நிலைமையிலும் அவள் இல்லை.

கையில் இருக்கும் பால் சொம்பை அருகில் இருந்த tableலில் வைத்தாள். எப்படி பேச்சைத் தொடங்குவது என்று யோசனையோடு அவனை நோக்கி நடந்தாள்.

அவன் அருகில் சென்று ஒரு தயக்கத்தோடு, என்ன செய்வது என்று யோசித்து, பின் அவன் கவனத்தைக் கலைப்பதற்காக ஒரு முறை இறும்பினால்.

அவள் உள்ளே வந்தது கூட தெரியாதவனாய் முழு யோசனையில் இருந்தவன், அந்த இரும்பல் சத்தம் கேட்டு நிலைக்கு வந்தான்.

அவள் நிற்பதை பார்த்து, சட் என்று எழுந்து நின்றான். அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றான்.

பின் சற்று சுதாரித்துக் கொண்டவனாய் “sorry நீங்க வந்ததை கவனிக்கல” என்று கூறி அவளைப் பார்த்தான்.

அவள் ஏதும் அதற்குச் சொல்லாமல் “ஏன் இங்கு உட்கார்ந்து இருக்கிறான்” என்பதைப் போல் அவனைப் பார்த்தாள்.

அவள் மனதை படித்தவனாய், “roomல இருக்க ஒரு மாதிரியா இருந்தது அதான் அதன் இங்க ஒட்கார்ந்து இருந்தேன்”. என்று பதில் அளித்தான்.

நிலாவிற்கு அந்த அறையைப் பார்த்த போது அப்படிதான் இருந்தது, அதையேதான் அவன் சொல்கிறான்.

மீண்டும் இருவருக்கும் இடையில் மௌனம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அந்த அறையையும் பார்த்துக் கொண்டனர்.

அவளும் தன்னை போல்தான் அந்த அறையைப் பற்றி உணருகிறாள் என்று புரிந்து கொண்ட ரகு “இங்க காத்து நல்லாதான் வருது. வேணுனா நீங்களும் இங்கேயே உட்கர்ந்துக்கலாம்” என்று அருகில் இருந்த இன்னொரு chairஐ காட்டினான்.

இன்று இருவருக்கும் முதல் இரவு, அளங்கரிக்க பட்ட கட்டில், காய்ச்சின பால், பழம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.