(Reading time: 8 - 16 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

“என்ன பா சொல்றீங்க, நாங்க சம்பாதித்த பணத்திலயா. எனக்கு ஒன்றும் புரியல” என்றான் ரகு.

“ஆமாம் மாப்பிள, அப்பா சொல்றது சரிதான், நீங்க இரண்டு பேரும் இதுவரைக்கும் எங்களிடம் கொடுத்த சம்பளப் பணத்தில் தான் இந்த வீட்டை வாங்கினோம். உங்களுக்கு ஒரு surpriseஆ இருக்கட்டுமே என்று தான் சொல்லல” என்றார் சங்கர்.

நிலாவிற்கும் ரகுவிற்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“என்ன ரெண்டு பேரும் அப்படியே நிக்குறீங்க. வீடு எல்லாம் எப்படி இருக்குனு போய் பாருங்க” என்றார் பானுமதி.

புதிதாகக் கட்ட பட்டிருந்த வீடு. ஒரு படுக்கை அறை, சின்ன சமயல் அறை, பெரிய hall என modern மக்களை கவரும் விதமாகக் கட்ட பட்டிருந்தது அந்த வீடு. ஆனால் வீடு முழுவதும் எந்த colorum இல்லாமல் வெள்ளையாக இருந்தது.

எந்த வண்ணமும் பூசாமல் இருப்பதை நிலாவும் ரகுவும் கவனிக்க தவறவில்லை.

“வீடு ரெம்ப அழகா இரு பா. ஆனால்” என்று சொல்ல வந்ததை இழுத்தாள் நிலா.

“வீட்டுக்கு எந்த colorum, decorationum செய்யாமல் இருக்கேனு யோசிக்கிறியா நிலா” என்று அவள் வார்த்தையை நிறைவு செய்தார் சங்கர்.

தன் வார்த்தைகளைச் சரியாக நிறைவு செய்ய தன் தந்தை தவறியதே இல்லை, ஆனால் ஏனோ இந்த கல்யாண விஷயத்தில் மட்டும் அவர் பிடிவாதமாக இருந்து விட்டார்.

அவர் தந்தை கூறியதை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள் நிலா.

அதற்குச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் நாகராஜன் “அட என்னமா, ஒரு architech நீ, ஒரு photographer என் பையன், உங்க ரெண்டு பேரை விடவா நாங்க இந்த வீட்டை அழகு படுத்திவிட முடியும். அதனால் தான் அந்த பொறுப்பை உங்களிடம் விட்டுட்டோம். உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தோனுதோ அப்படி இந்த வீட்டை அழகு படுத்திக்கோங்க” என்றார்.

“அது மட்டும் இல்ல, உங்க வாழ்க்கையும் இந்த இல்லம் போல் இப்போது வெள்ளையாக உள்ளது, அதை எவ்வளவு வண்ணமயமா மாத்திரீங்க என்பது உங்க கையில்தான் இருக்கு” என்றார் சங்கர்.

அதைக் கேட்டு ரகுவும் நிலாவும் ஒருவரை ஒருவர் ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் புது மண தம்பதியருக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் நடந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.