(Reading time: 8 - 16 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

எல்லாம் இவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனால் இவர்களோ அது பிடிக்காமல் வெளியே இருந்த chairல் அமர்ந்தார்கள்.

மீண்டும் இருவர்க்குள்ளும் அமைதி. யார் பேசுவது, என்ன பேசுவது என்று இருவர்க்குள்ளும் மௌன போட்டி.

நிலா நீண்ட யோசனைக்குப் பிறகு, ஆவது ஆகட்டும், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்ற தன் நிலையைச் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தாள்.

“உங்ககிட்ட” என்று பேச நிலா வாய் எடுக்க, “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் நிலா” என்று அவள் வார்த்தையை அவன் முடித்தான்.

“என்னட இவன் வந்ததிலிருந்து, நான் மனசில் நினைக்கிறது எல்லாத்தையும் நான் சொல்லாமல் இவன் சொல்லிட்டு இருக்கான்” என்று மனதில் நினைத்துக கொண்டு, “சொல்லுங்க” என்று மட்டும் கூறினாள் நிலா.

“அதை எப்படி சொல்றதுனு தான் தெரியல. அதுவும் இன்னைக்கு” என்று இழுத்தான் ரகு.

“பரவாயில்ல சொல்லுங்க” என்றாள் நிலா.

 “அது வந்து” என்று சற்று இழுத்து “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை” என்று சட்டென்று போட்டு உடைத்தான் ரகு.

தொடரும்

Episode # 14

Next episode will be published as soon as the writer shares his next episode.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.