(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

பார்க்கவும், அவளுக்கு எல்லாமே பிடித்தது போல் இருந்தது. எதை எடுப்பது விடுவது என்று ஒன்றுமே புரியவில்லை.

அவள் அப்படியே அதையெல்லாம் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்கவும், "இப்படியே எவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்கப் போற நித்தி, சீக்கிரம் செலக்ட் பண்ணு," என்று கார்த்திக் கூற,

'எனக்கு எதை எடுக்கறது, எதை விட்றதுன்னு தெரியல மாமா, எல்லாம் நல்லா இருக்கு, ஆனா எனக்கு எது பொருத்தமா இருக்கும்னு தெரியலையே? இதுவரைக்கும் அம்மா தான் எனக்கு ட்ரஸ் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க, அது எப்படி இருந்தாலும் போட்டுப்பேன். நானா செலக்ட் செய்யணும்னு நினைச்சா குழம்புது," என்றாள்.

"நம்ம கல்யாணத்துக்கு பிறகு நீ போட்ட ட்ரஸ்ல்லாம் அத்தை எடுத்ததா?" என்று வியப்புடன் கேட்டான். ஏனென்றால் அவள் இங்கு வந்ததிலிருந்து அணிந்த ஆடைக்கும் இப்போது அவள் அணியும் ஆடைக்கும் அதிக வித்தியாசம் தெரிந்ததே, இதில் அவர்கள் தேனிலவு சென்ற போது அணிந்த ஆடைகள் புதுவிதமாக இருந்ததே? அதையெல்லாம் தேர்வு செய்தது யார்? என்று தெரிந்துக் கொள்ள அவன் கேட்க,

"அது பெரிய மாமா தான் ஆள் வச்சு தைக்க சொன்னாங்க, அடையாளம் எடுத்து அவங்களே துணியெடுத்து தைப்பாங்க மாமா, பேசாம இப்போ காலேஜ் போகவும் அவங்கக்கிட்டேயே தைக்கலாமா?" என்று அவள் கேட்க,

"காலேஜ் திறக்க ஒரு மாசம் தான் இருக்கு, குறைஞ்சது பத்து ட்ரஸ்ஸாவது எடுக்கணும், இப்போ அவங்களை வர வச்சு அவங்க தைக்க டைம் எடுக்கும், ஏதாச்சும் பங்ஷனுக்குன்னா பரவாயில்லை, இப்படி டெய்லி போட ரெடிமேடே எடுத்துக்கலாம், இரு நானே உனக்கு செலக்ட் செய்றேன்." என்றவன், ஒவ்வொரு ஆடையாக பார்த்து அவளுக்கு தேர்ந்தெடுத்தான்.

"மாமா சூப்பரா இருக்கு மாமா, அழகா செலக்ட் செய்றீங்க," என்று அவன் தேர்ந்தெடுத்த ஆடைகளை பார்த்து அவள் பிரம்மப்போடு சொல்ல,

"சரி எல்லாம் சரியா இருக்கான்னு ட்ரையல் ரூம்ல போட்டு பார்த்துட்டு வா," என்று அவன் கூறினான்.

"இங்கேயா? அய்யோ வேண்டாம் மாமா, எல்லாம் சரியா தான் இருக்கும், அப்படியே லூஸா இருந்தா தான் என்ன நான் அப்படியே போட்டுப்பேன்." என்று அவள் சொல்ல,

"அப்படியே போட்டுப்பியா? இப்போ தான் உன்னோட ட்ரஸ்ஸிங் ஸ்டைல் நல்லா இருக்கு, ரெடிமேட்ல எடுத்துக் கொடுத்து நானே அதை மாத்திடுவேன் போலயே? இங்கப்பாரு லூஸா இருந்தா ஆல்ட்ரேஷன் செய்து சரிப்படுத்திக்கலாம், ஆனா சின்னதா இருந்தா என்ன செய்றது?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.