(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

அதனால போட்டு பார்க்கிறது தான் நல்லது." என்று அவன் கூறினான்.

"அப்படின்னா, நான் வீட்ல போய் போட்டு பார்க்கிறேன் மாமா, இங்கல்லாம் வேண்டாம்,"

"இந்த கடையில் திரும்ப வந்து கொடுத்தால்லாம் மாத்த மாட்டாங்க, அதுக்குதான் ட்ரையல் ரூம் வச்சிருக்காங்க, இங்கத்தான் போட்டுப் பார்க்கணும், அதனால போய் போட்டுப் பாரு"

"அப்படின்னா நீங்களும் என்கூட வாங்க மாமா, எனக்கு தனியா போக பயமா இருக்கு,"

"ஹே இது நம்ம பெட்ரூம் இல்ல, அங்கேயே இன்னும் கூட என் முன்ன ட்ரஸ் மாத்த யோசிப்ப, இங்க கூப்பிட்ற," என்று விளையாட்டாக அவள் காதில் கிசுகிசுக்க,

"அய்யோ மாமா, ட்ரையல் ரூம் வாசலில் வந்து நில்லுங்கன்னு தான் சொன்னேன்." என்று அவள் வெட்கப்பட்டாள்.

"பொண்டாட்டி இது லேடிஸ் செக்‌ஷன், நிறைய லேடிஸ் ட்ரையல் ரூம்க்கு வருவாங்க, அப்போ நான் வந்து வாசலில் வந்து நின்னா நல்லா இருக்காது, அதனால தைரியமா போ. நான் இங்கேயே நிற்கிறேன்."

"இங்க ரொம்ப கூட்டம் இல்லையே மாமா, ஒருத்தர் ரெண்டு பேர் தானே இருக்காங்க, ட்ரையல் ரூமும் காலியா தான் இருக்கும், நான் போட்டு காட்ற ட்ரஸ்ல்லாம் கரெக்டா இருக்கான்னு நீங்க பார்க்க வேண்டாமா?" என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.

அவள் சொன்னப்படி முதலில் அங்கே ஆட்கள் இல்லை எனவும், கார்த்திக் ட்ரையல் ரூம் வாசலில் நிற்க, "மாமா இங்க கேமரால்லாம் வச்சிருப்பாங்களா?" என்று சிறிது நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்த செய்தியை வைத்து அவனிடம் பயத்தோடு கேட்க,

"அப்படியெல்லாம் இருக்காது, அப்படியே உனக்கு பயமா இருந்தா லைட்டெல்லாம் நிறுத்திட்டு மொபைல் கேமராவை வைத்து சுத்தி பாரு, அவங்க கேமரா வச்சிருந்தா தெரிஞ்சிக்க முடியும்," என்று அவன் கூறவும், அவளும் அவன் சொன்னப்படியே செய்துப்பார்த்து பின் பயம் நீங்கியவளாக, ஓவ்வொரு ஆடையாக போட்டு, கதவை திறந்து அவனிடம் காண்பிக்க, அவனும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் வேறொரு பெண் வாங்கிய ஆடைகளை எடுத்துக் கொண்டு ட்ரையல் ரூம்க்கு வரவும், அங்கே நின்றிருந்தவனை ஒருமாதிரி பார்க்க,

"நித்தி, நான் பில் போடும் இடத்தில் நிற்கிறேன். நீ வா," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் சென்றுவிட,

சிறிது நேரம் கழித்து அவனிருக்கும் இடத்திற்கு வந்தவள், "ஏன் மாமா தனியா விட்டுட்டு போயிட்டீங்க?" என்றுக் கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.