(Reading time: 12 - 23 minutes)

அடிக் கழுத.. பெயர் சொல்லியா கூப்பிடற.. மணி என்ன பார்த்தியா.. பத்து ஆச்சு.. இன்னைக்கு சந்தோஷ்(சந்தோஷ் யாருனு யோசிக்கறவங்களுக்கு.. சங்கீ அத்தை பையன்ங்க) ஊருல இருந்து வரான் தெரியும் ல.. ரெண்டு தடவ உன்ன பார்க்க வந்திட்டான்.. சீக்கிரம் குளிச்சுட்டு அவன போய் பார்த்திட்டு வா.. மதியம் சங்கீ வீட்ல தான் லன்ச்.. நாங்களும் அப்படியே ஜாயின் பண்ணிக்கறோம்..” என்று மகளுக்கு பேச வாய்ப்பே தராமல் பேசிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றார் விஜயலக்ஷ்மி.. போகும் போது புலம்பல் வேறு.. “ராத்திரி பூரா லாப்டாப்பில் படம் பார்க்க வேண்டியது. அப்புறம் இப்படி தூங்காம.. அவ அக்காக்கு அப்படியே எதிர்நேரா பிறந்திற்கு”..

 இதுக்குமேல் தாமதமாக்கினால் இன்னும் இரண்டு அடி கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என வேகமாக காலை கடன்களை முடிக்க சென்றாள்..‘

தயாராகி கீழே வந்தவள் அங்கு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையிடம் புகார் வாசிக்க ஆரம்பித்தாள்..

ப்பா பாருங்க ப்பா அம்மா காலைலேயே என்ன எப்படி அடிச்சுட்டாங்க.. முதுகெல்லாம் ஒரே வலி..”

தன் செல்லப் பெண் வலி என்றதும் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல்,

விஜி விஜிஜிஜிஜிஇங்க வா..” என மனைவியை ஏலம் போட்டு கூப்பிட ஆரம்பித்துவிட்டார்..

என்னங்க எதுக்கு இப்போ இந்த கத்து கத்தறீங்க..” என்ற படியே வந்தார்..

பிள்ளைய ஏன் இப்படி அடிச்சிற்க.. பாவம் பாப்பாக்கு வலிக்குதாம்..” என மகளின் முதுகை அப்போவே லைட்டா அடி விழுந்ததுக்கு இப்போ தேய்த்துவிட்டார்..

உங்கள என்ன சொல்லலாம்.. காலைல பத்து மணிக்கு எந்திரிச்சா அடிக்காம கொஞ்சுவாங்கலா.. எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான்.. இன்னைக்கு அவளுக்கு மார்னிங் டிஃபன் இல்லைஎன சரவணனிடம் ஆரம்பித்து ஷைலுவிடம் முடித்தார்..  

ஏன் பாப்பா லேட்டா எந்திச்சன்னு என்ட சொல்லல.. உன்னால எனக்கும் திட்டு பாரு..”என பாவமாக தந்தை கேட்க..

ஹாஹா.. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வயகமும்ங்க்ர பாலிசி தான் பா.. எனக்கு நோ இஷூஸ் மம்மி கேர்ல் நான் எங்க அத்தை வீட்ல போய் நல்ல சாப்பாடா சாப்டுபேன்.. பாவம் ப்பா நீங்க தான்.. இந்த கொடுமையை நீங்களே அனுபவிங்க..” என இருவருக்கும் பழிப்பு காட்டிவிட்டுட்டு சிட்டாக பறந்தாள் தனது உடன்பிறவா சகோதரனை காண பக்கத்து வீட்டுக்கு.

சான்டி ப்ரோ.. சான்டிடிடி ப்ரோ..” என கத்திக்கொண்டே வந்தாள்.. எதிரே அவளை ஆவலாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.