(Reading time: 12 - 23 minutes)

இப்போ ஆச்சு உனக்கு கேட்கனும்னு தோனுதே டா மருமகனே.. அதெல்லாம் நல்லா இருக்கேன்.. என் தங்கை தான் மருந்துலாம் எடுத்துக்கலைனா விடுவாளா..” என அவனுக்கு ஓர் குட்டும் வைத்து பதிலளித்தார்..

இதுக்கு மேல் இங்கிருந்தால் நம்மள வெச்சு செஞ்சிருவாங்க என முன்ஜாக்கிறதை முத்தண்ணாவாக அங்கிருந்து நழுவி அவனதறைக்கு சென்றான்..

கட்டிலில் விழுந்த அவனது மனக்கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன் அவன் கண்ட அப்பெண்ணின் முகம் டக்கென நினைவுக்கு வந்தன.. அதுவும் அவளது கண்கள் இவனை பார்க்கும் பொழுது ஒரு முறைப்பை சிந்தியப்பொழுது அவனுக்கு சுவாரஸ்யம் இன்னும் அதிகமானது..

அதுவும் அவள் கீழே விழுந்து கிடந்த நிலைமையிலும் அவளது குறும்பான பேச்சு அவனை இன்னும் ஈர்த்தது.. இப்போ அதை யோசித்தாலும் அவனது முகத்தில் ஒரு மென்னகையை வரவழைத்தது..

சே என்னடா ஜஸ்ட் ஒரு தடவ பார்த்த பொண்ண பத்தி இப்போ சமந்தமே இல்லாம யோசிச்சிட்டு இருகோம்என தலையை உலுக்கி அவளது நினைவுகளில் இருந்து வெளியில் வந்து அவன் வேலைகளை பார்க்க சென்றான்.. ஆனால் அவளது நினைவு அவனுள் ஆழப் பதிந்தது என்னமோ உண்மை தான்..

அம்மா டிஃபன் ரெடியா.. குட்டா எங்க ஆளையே காணோம்..” என படிகளில் தாவி இறங்கிக்கொண்டே கேட்டான்..

எல்லாம் ரெடி டா.. மாமா கூட உனக்கு தான் வேய்ட்டிங்க்.. குட்டா ஒரு நியூ லான்ச் இருக்குனு அவன் பொட்டிக்கே(botique) கதினு இருக்கான்.. ரெண்டுப் பேரும் ஒரே மாதிரி..”என இவனை முறைத்தார்..

அமைதியா இருந்திற்கலாமோ என்று யோசித்தபடி.. “அம்மா இனி எல்லா வீக்கெண்ட் முடியலனாலும் மாசத்துக்கு ரெண்டு தடவ வறேன்.. நடுவுல நீங்க அங்க வாங்க..” என அவரது மனக்குறையை அப்பொழுதிற்கு தீர்க்க முயற்ச்சித்தான்..

அமைதியாக உணவை முடித்துவிட்டு, குட்டாவின் பொட்டிக்கு கிளம்பினான்..அவனது அருமை சகோதரனைக் காண..

அந்த பிரமாண்டமான வளாகத்துள் ரிஷியின் கார் உள் நுழைய.. செக்யுரிட்டி அவனை அடையாளம் கண்டெடுத்து.. வேகமாக வந்து கார் கதவை திறக்க வர.. அவரை தடுத்து அவனே காரை நிறுத்திவிட்டு அவரை பார்த்து புன்னகைத்துவிட்டு உள் சென்றான்.. இதுதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.