(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார்

வினய் அவன் எதிரே இருந்த மாணிக்கத்தை அதிர்ச்சியாக பார்த்தான். அவருடைய முகத்தில் தெரிந்த வெறுப்பு உணர்ச்சி ஆழமாக இருந்தது. அவன் எதுவும் தவறாக சொல்லி விட்டானா? இருவருக்குமிடையே நடந்த உரையாடலை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தான்.

தம்பி, எனக்கு அதிரதன் சார்தான் பிடிக்கும். ரொம்பவும் அமைதியானவர். என்னையும் மதித்து பேசும் ஒருவர். நீங்க அவர்ட்ட வேலை பார்த்தாலும் இப்போதான் பேச ஆரம்பிக்கறீங்க

பேசக் கூடாதுன்னு இல்லை. எனக்கு வேலை இருப்பதால் பேச நேரமிருக்காது. இப்போ சார் இல்லாததால் கொஞ்சம் ஃப்ரீ

ஆனால் நீங்களும் ஏற்றதாழ்வு பார்க்காமல்தான் பேசறீங்க. இங்க நான் வேலைக்கு சேர்ந்து இருபத்தியஞ்சு வருசமாச்சு. பெரிய பெரிய விஞ்ஞானிகள் இங்கே வேலை பார்த்திருக்காங்க. அவங்க யாரும் எங்கிட்ட பேச மாட்டாங்க. மனுசனாகூட மதிக்க மாட்டாங்க. சுத்தம் செய்ற எந்திரமாதான் பார்ப்பாங்க

அப்படி இல்லை. அந்த காலத்துல அறிவியல் விஞ்ஞானியாவது ரொம்ப பெரிய விசயம். ஆராய்ச்சிகள் அப்போது  நிறைய நடைபெறவில்லை. அதற்கான ஃபண்டும் இருக்காது. ரொம்பவும் அனுபவசாலிங்க, வெளி நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படிச்சவங்கதான் இந்த துறையில் இருந்தாங்க.”

ஆமாம் பாதிபேருக்கு தமிழ் தெரியாது

கரெக்ட், அதிலும் ஹெச் சர்மா தலைவரா இருந்த சமயத்தில்தான் இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்காக அரசு பட்ஜெட் ஒதுக்க ஆரம்பித்தது. சில வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் இங்கே வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.”

தெரியும் தம்பி

ஹெச் சர்மாவிற்கு கீழே  ஜேக்வில் என்பவர் வேலை செய்தார். அவர் பாஸ்டனிலிருந்து வந்தவர். ரொம்பவும் திறமையானவங்கஇதை அவன் சொல்லும்போதே மாணிக்கத்தின் கண்கள் சிவக்க ஆரம்பித்தன. வினயை அதுதான் திடுக்கிட செய்தது.

ரொம்ப திறமயானவங்கதான். சின்ன குழந்தையை…” என்று சொல்ல ஆரம்பித்தவர் படக்கென்று வாயை மூடிக் கொண்டார்.

என்ன விசயம்…” வினய் கேட்க,

ஒன்றுமில்லை. அதெல்லாம் பழைய கதை. எனக்கு வேலை இருக்கு. நான் வரேன்என்று கிளம்பி விட்டார்.

அத்துடன் அந்த விசயத்தை விட்டுவிட வினய்க்கு தோன்றவில்லை. அர் எதையோ மறைக்கிறார். ஒருவேளை அவன் தேடிக் கொண்டிருக்கும் விசயமாக அது இருக்கலாம். இதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.