(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

உடலுக்கு நிறம் தரும் மெலனின் போன்ற நிறமிகள் செயலிழந்தன.  வெயிலின் தாக்கத்தில் இருக்கும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தோல் புற்று நோயின் வலுவாக்கியது. மொத்தத்தில் ஒளி ஊடுருவக் கூடிய தகமையை பெற்று விட்டது.

பரிசோதனைக்கு எடுத்து கொண்ட உயிரினம் குணமடையவில்லை. அதனுடைய உயிரியல் இயல்புகள் மாறி விட்டன. ஆராய்ச்சி தோல்வி அடைந்து விட்டது!.

ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட மாதிரி புற சூழலை தாக்கு பிடித்து உயிர் வாழ முடியாது. மேலும் அதனால் புது வகையான வைரஸ் உருவாகலாம். ….

அதற்கு அடுத்த பக்கம் இல்லை. என்ன நடந்திருக்கும் என்று வினயால் ஊகிக்க முடிந்தது. மாணிக்கம் விவரித்த காட்சி நினைவிற்கு வந்தது. வாயில் ரத்தம் ஒழுக

அதை அழித்திருப்பார்கள். மருத்துவ அறிவியல்  நோய்களின் பிடியிலிருந்து மனித உயிர்களை பாதுகாக்கத்தான் முயற்சிக்கிறது. விலங்குகளிடம் செய்யப்படும் பரிசோதனைகள் வெற்றி அடைந்த பின்பே மனிதர்களிடம் செய்யப்படும். அதுவும்நோயாளிகளின் அனுமதி பெற்றுதான் நடக்கும். அனைத்து சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்கவில்லை எனும்போது இதை செய்யலாம்.

ஆனால் வலுக்கட்டாயமாக நோயை வரவழைத்து அதற்கு சிகிச்சை தந்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் சர்மாவிற்கு ஏன் வந்தது?

அவருடைய பரிசோதனுக்கூடம் இன்றுவரை பூட்டிக் கிடப்பதாக மாணிக்கம் சொன்னாரே… அங்கே சென்று பார்க்கலாமா?

இல்லை.. இல்லை இந்த விவரத்தை அதிரதனிடம் டிஸ்கஸ் செய்து விட்டு முடிவெடுக்கலாம்.

வினய் குறிப்பெடுத்து ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான்.

ப்ரூனோ மெதுவாக எழுந்து அறைக் கதவை சாத்தினார். அங்கிருந்த கனப்பு அடுப்பின் அருகே சென்று மண்டியிட்டு அமர்தார். அது பெயருக்குதான் கனப்பு அடுப்புஅதில் எரியூட்டுவதில்லை. ஏனெனில் அதில்தான் 'அவள்' வசிக்கிறாள். சிம்னியின் வழியே இரவில் வெளியே சென்று விட்டு சூரிய வெளிச்சம் வரும் முன் கனப்பு அடுப்பின் இருளுக்குள் பொதிநது விடுவாள்.

அவளுக்கு அழகான அறையை ப்ரூனோ அமைத்திருநதாலும் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுக்கு வேறு வழியில்லாமல் அங்கிருப்பது புரிந்தது.

தரையில் அமர்ந்த ப்ரூனோ பேச ஆரம்பித்தார்.

தொடரும்

Episode # 13

Episode # 15

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.