(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அது அநாதைன்னு சொன்னான். ஆனால் கொஞ்ச  நேரத்துலேயே  சர்மா சார் வந்து இதெல்லாம் தேவையில்லை. செத்துபோன உடம்ப வச்சு ஆராய்ச்சி செய்ய மாட்டேன்னு கத்திட்டு போயிட்டார். என்னையும் வேலையை முடிச்சிட்டு கிளம்ப சொன்னார்.”

“----?”

வந்தவன் அந்த பாடிய அங்கேயே போட்டுட்டு திரும்ப எடுத்துட்டு போக முடியாதுன்னுட்டு போயிட்டான்.”

அதெப்படி…”

இந்த ஜேக் தடியன்தான் அதை கொண்டு வர சொல்லி இருக்கிறான். சர்மா திட்டவும் என்னை கூப்பிட்டு அதை அப்புறப்படுத்த சொன்னான். எனக்கு உள்ளுக்குள்ள ஒரே கோபம் தம்பி. இதெல்லாம் நான் செய்ற வேலையான்னு திட்டிகிட்டே அந்த உடம்பை தொட்டேன். எனக்கு திடுக்குனு ஆயிடுச்சு

ஏன்?”

லேசா மூச்சு இருந்துச்சு தம்பி. உயிரோட இருந்துச்சு. எனக்கு தெரிந்த முதல் உதவியெல்லாம் செஞ்சு அதை மூச்செடுக்க வைத்தேன். இதை பார்த்துட்டே இருந்த ஜேக்வில் இங்கிலீஸில் கத்தினான். அதை உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்க சொல்றான்னு புரிஞ்சுகிட்டேன். உள்ளே கொண்டு போய் படுக்க வச்சேன்

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?”

சர்மா சார்கிட்டே நான் பேசிக்கறேன். இந்த பெண்ணை அவங்க ஊருக்கு அனுப்பி வைக்கறது அவனோட பொறுப்புன்னு சொன்னான். அதோட எனக்கு வேலை நேரம் முடிஞ்சிட்ட்தால நான் வீட்டிற்கு போயிட்டேன்.”

அப்படி போகலாமாதப்பில்லையா. அந்த குழந்தைக்கு ஆபத்து வரலாம்னு தோணலையா”

அப்போ எனக்கு ஒன்னும் புரியல. எனக்கு என்ன வேலை சொன்னாங்களோ அதை மட்டும் செய்வேன். வீட்டுக்கு போன்னு சொல்லவும் போயிட்டேன்

ஏதோ தப்பாபடுது

எனக்கு அப்போ தோணலை தம்பிஅதுக்கு பிறகு சர்மா சாரோட லேப் சுத்தம் செய்ய என்னை கூப்பிடவேயில்லை.  நானும் அந்த பக்கம் போகலை. இரண்டொரு மாசம் போனப்புறம் என்னோட கல்யாணத்துக்கு அழைக்கறதுக்காக அங்க போனேன். நான் போனப்ப கதவு பூட்டியிருந்தது. யாரும் இல்லைன்னு நினைச்சிட்டு நான் திரும்பும்போது பெரிய சத்தம் கேட்டது. வீட்டுக்குள்ளிருந்து அந்த சத்தம் வந்துச்சு. நான் ஓடிப்போய் ஜன்னல் வழியா எட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.