(Reading time: 8 - 15 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அதிதி ஆர்வமாக கையில் வாங்கினாள். இந்த முறை அவளை தடுக்க தாத்தாவும் இல்லைஅதிரதனும் இல்லைசண்டை போட்டு காப்பாற்ற அபிதாவும் இல்லைஉடல் நிலை சரியில்லாததால்  அவளால் சிம்னியை விட்டு வெளியே வர முடியாது. தடுப்பாரின்றி லட்டவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

கையில் இருந்த லட்டுவை அதிதி ஆர்வமாக சாப்பிடுவதை திருப்தியாக பார்த்து விட்டு அஞ்சலை வெளியேறினாள். ஊருக்கு வெளியே சென்றவள்புளிய மரத்தடியில் நின்ற ஒருவனிடம் சைகை காட்டி சென்றாள்.

துளசிக்கு எதிர்பாராமல் நடந்தது இப்போது திட்டமிட்டே நடத்தப்பட போகிறது… அவள் திருப்தியாக வீட்டுக்கு திரும்பி சென்றாள்.

ஆனால் அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அதிரதனை எச்சரிக்கை செய்ய நினைத்த செல்வா அவனிடம் மாலையில் சந்தித்து பேசலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் டவுனுக்கு செல்லும் வழியில் தாதிபட்டி விலக்கில் வைத்து அவனை பார்க்கவும் உடனடியாக அவனிடம் பேச நினைத்தார்.

அப்போது அதிரதன் வினயிடம் இருந்து ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தான்.

"மை காட் நீ சொல்றது ரொம்பவும் அதிர்ச்சியாக இருக்கு"

"சார் அந்த ஸ்பெஸிமென் என்ன ஆச்சுனு தெரியலை . இப்போது இருக்கும் டெக்னாலஜியில் அதை சரி செய்ய முயற்சி செய்யலாம்."

"நீ ஜீன் எடிட்டிங் பற்றி சொல்கிறாய்னு நினைக்கிறேன். அது மட்டும் போதாது.. "

"ஓகே.. நாமும் நல்லதா புதுசா செய்வோம்னு நினைச்சேன்."

"இந்த ஃபைல் எங்கிட்ட இருக்கட்டும். முழுவதுமாக படித்தால்தான் ஏதாவது புரியும். நீ இப்போது கிளம்பு. நான் பிறகு பேசுகிறேன்" என்றான்.

அதிரதனுக்கு ஒரு சந்தேகம் வந்திருந்தது. ஸ்பெசிமனுக்கும்.. 'அது'விற்கும் தொடர்பு இருக்கிறதோ? அந்த ரிப்போர்ட்டை படித்தால் புரிந்து விடும் என்று எண்ணினான்.

வினயிடம் இப்போது எதையும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து அவனை அனுப்பிவிட்டு வண்டியை கிளப்பினான்.

அப்போதுதான் செல்வா அவனருகில் வந்தார்.

"வணக்கம் மாப்பிள்ளை"

"வணக்கம்நீங்கள்?"

"அதிதியோட சித்தப்பா. ஊரிலிருந்து இப்போது தான் வந்தேன். உங்கள்ட்ட ஒரு விஷயம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.