(Reading time: 8 - 15 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அப்போது அவனுடைய அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தான்.

'அட.. வினய் இவன் எதற்காக கால் பண்றான்' என்று யோசித்தபடி ஆன் செய்தான்.

"குட் மார்னிங் சார்.."

"குட்மார்னிங் வினய். ஏதாவது அவசரமா?"

"உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அது அவசரமா அல்லது அவசியமான்னு தெரியவில்லை. "

"லீவு முடிந்து நான் வரும்வரை காத்திருக்க முடியாதா?" அதிரதனுக்கு இப்போதைக்கு அவனிடம் இருக்கும் கேள்விகளுக்கு விடை கிடைத்தால்தான் மற்ற விஷயத்தில் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றியது.

"சார்.. எனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வரும் போலிருக்கு. அதுக்குள்ள இந்த விஷயத்தை உங்களிடம் டிஸ்கஸ் செய்தால் நல்லதுனு தோனுச்சு"

" டிரான்ஸ்பரா திடிர்னு சொல்றே. சரி ஓகே.. நீ தாதிபட்டிக்குள் வர வேண்டாம். ஆறு  கிலோ மீட்டர் முன்பே தாதிபட்டி விலக்குன்னு போர்ட் இருக்கும் அங்கே நில்லு. நான் வரேன்." என்றான்.

வீட்டில் வைத்து வினயுடன் பேசுவதைவிட அங்கு சென்றால் அமைதியாக பேசலாம் என்று நினைத்து இந்த ஏற்பாட்டை செய்தான். அதிதியை அழைத்து,

"அதிதி.. நான் வெளியே போய்ட்டு வர்றேன். ஒரு மணி நேரத்தில் வந்திடுவேன். லஞ்ச்க்கு இருப்பேன்."

"முக்கியமான விஷயமா.. மாமா எதுவும் சொன்னாரா?"

"இல்லை. இது அலுவலக வேலை. நீ பத்திரமா இரு…"

"ஆமாம் ரௌடிங்க கூட ஒரு ஃபைட் வேற நடந்திருக்கு." சிரித்தாள்.

"ப்ச்.. சீரியஸா சொல்றேன். கேர் ஃபுல்.. உங்க சித்தி வீட்டுக்கு கூட போக வேண்டாம்."

"சரிங்க சார். பத்திரமா வீட்டை பூட்டிட்டு இருக்கேன்."

அவளிடம் விடைபெற்று கிளம்பினான். அதிதியும் சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

"அதிதி கண்ணு.." அஞ்சலை குரல் கேட்டது.

"சித்தி" என்று கதவை திறந்தாள்.

அங்கே அஞ்சலை நின்றிருந்தாள்.கையில் சிறிய பை இருந்தது.

"வாங்க சித்தி.." உள்ளே வரச் சொன்னாள்.

"இந்தா…  உனக்கு பிடிக்குமேன்னு நெய் லட்டு வாங்கி வந்தேன். சாப்பிடு…"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.