என்னை ராமநாதபுரம் தண்ணியில்லாக் காட்டுக்கு போகச்சொல்லி ஆர்டர் வந்திருக்கு, நீதான் அமைச்சரிடம் சிபாரிசு பண்ணி, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணவைச்சு, ஹைவேஸ் செக்கிங்லே போடச் சொல்லணும், உனக்கு கொடுக்கவேண்டியதை சொல்லு, கொடுத்திடறேன் நாளைக்கே........"
" அப்படியென்ன இருக்கு, அந்த போஸ்டிங்லே?"
" தெரியாதமாதிரி, கேட்காதேண்ணே! அப்படி, இப்படின்னு ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா பணம், ஒண்ணோ ரெண்டோ விஸ்கி பாட்டில், அரிசி மூட்டை இப்படி ஏதேதோ......"
" உன்னை மேலதிகாரிங்க கையும் களவுமா பிடிச்சு டிஸ்மிஸ் பண்ணிட மாட்டாங்களா?"
" எங்க மூலமா, அமைச்சர் வரையிலும், எல்லா லெவல்லே உள்ளவங்களுக்கும் இதிலே பங்குண்டு.........."
" அப்படின்னா, ஒருநாளைக்கு அவ்வளவு மாமூலா கிடைக்குது?"
" நீ ஒரு ஆளுண்ணே! சட்டவிரோதமா, எல்லாவிதமான தவறும் ஹைவேஸிலேதான் நடக்குது. அவங்க எங்களுக்கு கொடுப்பது, ஆயிரக் கணக்கிலேன்னா, அவங்க கோடிக்கணக்கிலே கொள்ளை அடிக்கிறாங்க....."
"தவறான வழியிலே போயாவது, பணம் சேர்க்கணுமா?"
" பணம் சேர்க்கறதா? வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கத் தானே, இந்தப் பணம்!"
" அவ்வளவு பணம் எதுக்கு கடன் வாங்கினே?"
" ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துத் தானே, போலீஸ் உத்தியோகத்துக்கு வந்தேன், அந்தக் கடனை திருப்பி தரவேண்டாமா?"
" சரி, அமைச்சரிடம் பேசிப் பார்க்கிறேன், உன் பேரு, எந்த காவல் நிலயம், எல்லாம் எழுதிக்கொடு!"
" இந்தாண்ணே! அதெல்லாம் எப்பவும் ரெடியா இருக்குண்ணே!"
போலீஸ்காரன் மகிழ்வுடன் நகர்ந்ததும், இங்கர்சால் அடுத்தது ஒரு மருத்துவ மனைக்குள் நுழைந்தார்.
இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில்
தொடரும்
Go to Idhu namma naadunga story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.