(Reading time: 8 - 15 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சமாளிக்க வேண்டும்.

அவன் அதிதியிடம் பேச ஆரம்பித்தான்.

"அதிம்மா.. ஏன் கோவிச்சுக்கற… "

"ஹாங் நீங்க கேக் ஆர்டர் பண்ணது எப்ப வரும்? அபிக்கா பர்த்டேக்கு டெக்கரேட் பண்ணணும். நீங்க இன்னும் எதுவுமே செய்யல…"

ஓ.. அந்த நாள் நினைவிலேயே இருக்கிறாளா? அப்படியே ஃபாலோ பண்ணணும்

"எல்லாம் செஞ்சிடலாம்மாநீ ஏன் ரொம்ப டல்லா இருக்கேஸ்கூல்ல எப்படி இருநதுச்சு.. டீச்சர் என்ன சொன்னாங்கஒரு கெஸ்ஸிங் செய்து பேச்சை வளர்த்தான்.

"ஸ்கூல்ல ஒண்ணும் இல்லப்பா…  ஒரு ஸ்பீச் காம்படிஸன் இருக்கு. அவ்ளோதான்..."

"குட்நீதான் நல்லா பேசுவியே"

"எனக்கு தலை வலிக்குது"

"அதான பார்த்தேன். மாத்திரை போட்டுக்கலாமா?"

"எனக்கு காபி வேணும்"

அடடா.. காபி போட தெரியாதே.. என்ன செய்யலாம்?

அப்போது சம்பத் அவனை அழைக்கும் குரல் கேட்டது.

"அதிம்மாதுரை அங்கிள்ட்ட பேசிட்டு வரேன். அப்புறம் காபி போட்டு தரேன்.அதுவரை  நீ கண்ணை மூடி படுத்துட்டு இரு."

"ஓகேப்பா.. அம்மாவை கூட்டிட்டு வாங்க" என்றபடி சோபாவிலேயே  படுத்தாள்.

கதவை திறந்து வெளியே சென்ற அதிரதன்.. சம்பத்தை பார்த்தான்.

"அவனை பிடிச்சிட்டீங்களா?"

"பிடிச்சு கட்டி வச்சிருக்கேன். வாய திறக்க மாட்டேங்கறான். அப்பாட்ட பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்"

"விட்றாதீங்கஅவன பேசியே ஆகணும். அப்புறம்எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா"

"சொல்லுங்கசெய்யறேன்"

"ஒரு ப்ளட் சாம்பிள் பரிசோதனை செய்யணும். டவுன்ல உங்களுக்கு யாரையாவது தெரியுமா?"

"என்னோட ஃப்ரண்ட் இருக்கான். அவன் கிட்ட கேட்கலாம். யாருடைய இரத்தத்தை டெஸ்ட் பண்ணணும்."

"அதிதியோடதுதான்அவள் சுயநினைவில்லாததுபோல இருக்கிறாள்என்ன விஷயம்னு அப்புறம் சொல்றேன். உங்க ஃப்ரெண்ட் கிட்ட நான் பேசலாமா?"

"இதோ அவன்னுக்கு கால் பண்றேன். நீங்க பேசுங்க" அலைபேசியில் நண்பனை அழைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.