(Reading time: 8 - 15 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அதிரதனிடம் தந்தான்.

"ஒரு ப்ளட் சாம்பிள் டெஸ்ட் பண்ணணும். உடனே ரிப்போர்ட் தருவீங்களா?"

"என்ன டெஸ்ட் சார்.."

"டைஎதிலமைட்  இருக்கான்னு டெஸ்ட் பண்ணணும்"

"எல்சிடி டெஸ்ட் தானே சார். இங்கே ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி லேப் இருக்குஅவங்கட்ட செய்து தரேன் சார்"

"அப்புறம் ஒரு எடிபிள் சாம்பிள் தரேன்அதுலயும் இந்த டெஸ்ட் செய்துடுங்க"

"ஓகே சார்"

"தேங்க் யூ. நான் சம்பத்திடம் தரேன்" தொடர்பை துண்டித்தான்.

"எதுக்கு அந்த டெஸ்ட்மாப்பிள்ளை"

"துளசி அத்தை குற்றமில்லாதவங்கன்னு நிருபிக்கஒரு துரோகியை அடையாளம் காட்ட…"

"எனக்கு எதுவும் புரியலஆனால் துளசிம்மா நல்லவங்கன்னு நிருபிக்க நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்."

"இங்கே வெயிட் பண்ணுங்கநான் சாம்பிள் எடுத்துட்டு வரேன்."

உள்ளே சென்ற அதிரதன் அதிதியிடம் பேசினான்.

"அதிம்மாதுரை அங்கிள் உனக்கு வைரஸ் ஃபீவர் இருக்கலாம்னு சொல்றார். உன்னோட இரத்தத்தை டெஸ்ட பண்ணிடலாம் சொல்றார்."

அவள் அமைதியாக இருந்தாள்.

"நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதிக்கு வலிக்கும்னு பயப்படுவாஅவள் ஒரு பயந்தாங்குளின்னு சொல்லிட்டேன்"

"நோடாடி நான் பயப்பட மாட்டேன். ப்ளட் எடுத்துக்கோங்க. அன்னிக்கு ஸ்கூல்லகூட தந்தேன். நான் அழவேயில்லை" கையை நீட்டினாள்.

அவன் சிரிஞ்சில் இரத்தத்தை எடுத்து கூல் பாக்ஸில் பத்திரப்படுத்தி பேக் செய்தான். மீதமிருந்த லட்டுவையும் பேக் செய்தான். அதனை வெளியே காத்திருந்த சம்பத்திடம் கொடுத்தான்.

"கவனம் சம்பத்இந்த ரிப்போர்ட் கையாட வேணும். அப்புறம் நாம பிடிச்சு வச்சிருக்கறவனை விசாரிக்கனும். யாருக்கும் இதுபற்றி தெரிய வேண்டாம். நான் அதிதியை தூங்க வச்சிட்டு வந்திடறேன்."

சம்பத்தை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.

"அதிம்மா நான் காபி போட்டு வரேன்." என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.