(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 29 - ஜெய்

ணியின் நண்பன் வந்து அவன் பின்னந்தலையில் அடிபட்டிருந்ததாக தன்னிடம் கூறியதாக சாரங்கன் கூற உண்மை தெரிந்து விட்டதோ என்று பதற ஆரம்பித்தார் கான்ஸ்டபிள்.....

“சாரங்கன் சார் அப்படிலாம் எதுவும் இல்லையே... நீங்க வேணா மெடிக்கல் ரிப்போர்ட் பாருங்க.....”

“அந்த ரிப்போர்ட் இருக்கற தைரியத்துலதான அத்தனை தப்பும் பண்ணிட்டு தெனாவட்டா இருக்கீங்க...”

“மதி சார்.... நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை... உங்களுக்கு ஏதோ தப்பான தகவல் வந்திருக்குன்னு நினைக்கிறேன்....”

“அப்படியா தப்பான தகவலா... உங்களுக்கு படிக்க தெரியும் இல்லையா... இந்த ரிப்போர்ட் பாருங்க....”

மதி அந்த கான்ஸ்டபிளிடம் ஒரிஜினல் ரிப்போர்ட் காட்ட அதை படிக்க ஆரம்பித்ததும் அவர் கை உதற ஆரம்பித்தது...

“என்ன வேலு சார் கை, கால் எல்லாம் ஆட்டம் காட்டுது.... பாருங்க குப்புன்னு முகமெல்லாம் வேர்த்து கூட போச்சு... என்னாச்சு சார்....”

“அது ஒண்ணும் இல்லை சாரங்கன் தம்பி... இங்க கொஞ்சம் புழுக்கமா இருக்கு இல்லை... அதுனாலதான் வேர்த்து போச்சு.... மதி சார் இது தப்பு ரிப்போர்ட் சார்... யாரோ வேணும்ன்னே போலீஸ் மேல பழி வர  பண்ணி இருக்காங்க... அந்த பையன் நிஜமாவே ஷாக் அதிச்சுதான் செத்து போனான்... நீங்க அரசாங்க ரிப்போர்ட் நம்ப மாட்டீங்களா....”

“வேலு சார்... இப்போ உங்க கைல இருக்குறது என்னது... அல்வா கடைக்காரர் கொடுத்ததா... அதுவும் அரசாங்க டாக்டர் கொடுத்ததுதான்... இதுதான் ஒரிஜினல்... அந்த டாக்டர் கையெழுத்து இருக்கு பாருங்க... நீங்க வச்சிருக்கறது போலி.... அந்த டாக்டரை என்ன சொல்லி மிரட்டி போலி சான்றிதழ் கொடுக்க வச்சீங்க... உண்மைய சொல்லுங்க....”

“என்ன சார் இது... இப்படி மொத்த பேரையும் ஏதோ குற்றவாளிங்க மாதிரி பேசறீங்க... இது நல்லா இல்லை சார்... இது போலி... நாங்க கொடுத்ததுதான் உண்மையான ரிப்போர்ட்....”

“மலைக்கு மாலை போட்டுட்டு இப்படி பொய் சொல்லலாமா வேலு... அப்பறம் சாமி கண்ணை குத்திடாது... ஒழுங்கா உண்மைய சொல்லுங்க....”

“சார் நீங்க எப்படி கேட்டாலும் இதுதான் உண்மை சார்....”

“அப்படியா சாரங்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... வேலு சார்க்கு கல்யாணம் ஆனதே படு லேட்,,, குழந்தையும் அவர் கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் பொறந்தது... அவர்க்கு அந்த பையன்னா உசிரு... சரிதானே சார்....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.