(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“இப்போ எதுக்கு சார் அந்த கதை எல்லாம் பேசறீங்க...”

“சும்மா சொல்லுங்க சார் உங்க பையனுக்கு என்ன ஒரு பத்து வயசு இருக்குமா....”

“ஆமா சார் போன வாரம்தான் பத்தாவது பொறந்தநாள்  கொண்டாடினோம்....”, வேலு இவர்கள் எதற்கு தன் பிள்ளையை பற்றி பேசுகிறார்கள் என்று தெரியாமல் மிடறு விழுங்கினார்...

“இன்னைக்கு அவனுக்கு செஸ் கிளாஸ் இருக்கு இல்லை... சைக்கிள்லதானே போவான்...”

“சார் இப்போ எதுக்கு சார் இதை எல்லாம் கேக்கறீங்க....”

“நீங்க உங்க மனைவிக்கு போன் பண்ணி அவன் கிளம்பிட்டானான்னு கேளுங்களேன்....”, மதி சொல்ல, வேலு பதறியபடியே தன் மனைவியை அழைத்தார்....

அவர் வீட்டுத் தொலைபேசிக்கு அழைக்க அதை யாரும் எடுக்காததால் மனைவியின் கைப்பேசிக்கு அழைத்தார்.... அவர் அழைத்த அடுத்த நிமிடம் அவர் மனைவியின் கைப்பேசி அவர் இருந்த இடத்தின் அருகிலேயே சத்தமிட்டது.... சத்தம் வந்த திசையை நோக்கி அவசர நடை போட்டார் வேலு...

“எங்க இத்தனை அவசரமா போறீங்க வேலு...”

“சார் என் மனைவி போன் இங்கதான் பக்கத்துல அடிக்குது... அது எப்படி இங்க வந்துதுன்னு தெரியலை....”

“போன் மட்டும் தனியா நடந்து வரலை வேலு... உங்க மனைவியும் அது கூடவே வந்திருக்காங்க... வாங்க போய் பார்க்கலாம்...”, மதி சொல்ல, தன் மனைவி எதற்காக இங்கு வந்தாள் என்று யோசித்தபடியே உள்ளே சென்றார் வேலு...

உள்ளே சென்று அவர் கண்டது கை, கால்கள் எல்லாம் கட்டியபடி மயக்க நிலையில் இருந்த மகனையும், மனைவியையும்....

“மதி சார் என்ன இது... உங்களை எவ்ளோ நல்லவர்ன்னு நினைச்சுட்டு இருக்கோம்.... நீங்க இப்படி ஒரு காரியம் பண்ணலாமா.... எதுக்காக சார் என் மகனையும், மனைவியையும் கட்டி வச்சிருக்கீங்க....”, அவர்களின் அருகில் சென்று கட்டை அவிழ்க்க போக....

“ரொம்ப உணர்ச்சி வசப்பட்றீங்களே வேலு... உங்க மனைவிக்கும், மகனுக்கும் மயக்க மருந்து கொடுக்கலை... நாங்க கொடுத்திருக்கறது விஷ ஊசி... இன்னும் மூணு மணி நேரத்துக்குள்ள அவங்களுக்கு மாத்து மருந்து கொடுக்கலைன்னா மேரா பாபா மர்கயா நிலைதான்... இப்போ நீங்க உண்மைய சொன்னீங்கன்னா மாத்து மருந்து கொடுக்க ஏற்பாடு செய்வோம்... இல்லைனா அவங்களுக்கு காரியம் பண்ண நீங்க ஏற்பாடு பண்ணிக்கோங்க... உங்க வசதிப்படிதான்.... இது ஏதோ உங்களை மிரட்ட நாங்க பண்ற டிராமான்னு நினைக்காதீங்க.... உணமைதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.