(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“ஓ யார்கிட்டேயிருந்து போன் வந்துச்சு தெரியுமா....”

“இல்லை சார் அது தெரியாது.... இன்ஸ்பெக்டர் செல்லுக்கு வந்துச்சு....”

“ஹ்ம்ம் சரி அந்த அரசாங்க டாக்டரை எப்படி பொய் சான்றிதழ் கொடுக்க ஒத்துக்க வச்சாரு உங்க இன்ஸ்பெக்டர்....”

“அதுவும் எனக்கு தெரியாது சார்.... இன்ஸ்பெக்டர் மட்டும்தான் உள்ள போய் பேசிட்டு வந்தாரு.... நானும் இன்னொரு ஏட்டும் வெளியதான் நின்னுட்டு இருந்தோம்.... சார் நான்தான் எல்லா விஷயமும் சொல்லிட்டேனே.... இப்போவே ஒரு மணி நேரம் ஆகுது.... மாத்து மருந்து கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க சார்....”

“உங்க பையன் அப்படிங்கும்போது துடிக்குது... இப்படித்தானே மணியை பெத்தவங்களுக்கும் அவனை சடலமா பார்க்கும்போது இருந்து இருக்கும்... நமக்கு வந்தா ரத்தம்... அடுத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னி போல....”

சாரங்கன் சொல்ல வேலு தலை குனிந்தார்....

“வேலு ஒரு தற்கொலை பத்திதான் சொல்லி இருக்கீங்க... அடுத்து அந்த காலேஜ் பொண்ணு விவகாரம்... அதை சொல்லலையே...”, மதி கேட்க, ஐயோ அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு தெரிந்து விட்டதா என்று அதிர்ந்து பார்த்தார் வேலு....

“சொல்லுங்க அதுவும் உங்க கைங்கர்யம்தானே போலி ரிப்போர்ட் வாங்கினது...”

“ஆமாம் சார்... ஆனா அன்னிக்கு நான் இன்ஸ்பெக்டர் கூட நான் காலேஜ் போகலை... அதுனால அங்க நடந்தது என்னன்னு தெரியாது.... நேரா ஆஸ்பத்திரிக்குதான் போனேன்... அதுனால ரிப்போர்ட் மாத்தி கொடுத்தது மட்டும் தெரியும்....”

“ஹ்ம்ம் ஓகே வேலு நல்லபடியா எங்களுக்கு வேண்டிய தகவலை தந்துட்டீங்க;... ரொம்ப நன்றி... இப்போ என்ன பண்றீங்க... அப்படியே நல்ல பிள்ளையா போய் அந்த சேர்ல உக்காருங்க.... இன்னும் ரெண்டு நாள் உங்களுக்கு எல்லாம் இந்த ரூம்லதான்... பொண்டாட்டி, புள்ளைகூட சந்தோஷமா இருங்க... வேளாவேளைக்கு சாப்பாடு வரும் சாப்பிட்டு நல்லா தெம்பா இருங்க.... ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறோம்... அது வரைக்கும் உங்களை இவங்க பார்த்துப்பாங்க....”, சாரங்கன் சொல்ல ஆஜானுபாகுவான நான்கு பேர் வேலுவை கூட்டி சென்று நாற்காலியுடன் சேர்த்து கட்டினார்கள்....

“சார் சார் நான்தான் எல்லா உண்மையும் சொல்லிட்டேனே... அப்பறம் எதுக்கு சார் ரெண்டு நாள் அடைச்சு வைக்கறீங்க... சார் மொதல்ல மாத்து மருந்து கொடுங்க சார்....”

“ஹ்ம்ம் நீங்க எங்கக்கிட்ட சொன்னா மாதிரியே உங்க இன்ஸ்பெக்டர்கிட்டயும் போய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.