(Reading time: 6 - 11 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

 " ஐயோ பாவமே!"

 " புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கறாப்போல, மத்தியதர வர்க்கமும் ஏழைங்களும் பணக்காரங்களை பார்த்து அவங்களைப்போல, வாழ ஆசைப்படறாங்க! ஆசைப்படுவது தப்புன்னு சொல்லலே, அதுக்குத் தகுந்த வருமானம் இல்லாத காரணத்தாலே, அநியாய வட்டிக்கு கடன் வாங்கி மூழ்கிப் போயிடறாங்க, இந்த நிலமையிலே, திடீர் திடீர்னு வேலை போயிடுது, ஏதேதோ காரணத்தாலே! மழை, வெள்ளத்திலே தினக்கூலி வராது! ஏன்னா, அன்று வேலை இருக்காது!"

 " ஏங்க! தெருவிலே ரயில்லே பஸ்ஸிலே கடைகளிலே சினிமா தியேட்டர்களிலே எல்லா ஊரிலேயும் மக்கள் அலை மோதுதே, அது எப்படி?"

 " அதான் சொன்னேனே, கடன் வாங்கியாவது பொருள் வாங்கி கஷ்டப்படறாங்க!"

 " அப்ப, இந்த நாடு முன்னேறுவது கஷ்டமா?"

 " நோ, நோ, நோ, கஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம் நிறைய பேர் காலேஜிலே படிக்கிறாங்க! ஒரு மாவட்டத்துக்கே ஒரே ஒரு காலேஜ் இருந்த காலம் மாறி, இப்ப காலேஜ் இல்லாத ஊரே இல்லை, அதுவும் நகரங்களிலே அரசு கல்லூரி, தனியார் கல்லூரி, ஆர்ட்ஸ் காலேஸ், மெடிகல் காலேஜ், இன்ஞினீயரிங் காலேஜ், டென்டல் காலேஜ், ஏன், தனியார் பல்கலை கழகங்களே வந்தாச்சு. நிறைய பேர் பட்டம் பெற்று வெளிநாடு போய் சம்பாதிக்கிறாங்க, வீட்டுக்கு ஒருத்தராவது, நகரங்களிலே, வெளிநாட்டிலே வேலை பார்க்கறாங்க! முன்னெல்லாம் உள்ளூரிலேயே வேலை தேடுவாங்க, இப்போ உலகத்திலே எந்த மூலையிலே வேலை கிடைச்சாலும், போறாங்க!"

 " அப்ப, நல்லது கெட்டது கலந்தே இருக்கு!"

 " நல்லது அதிகமா இருந்தாலும், அது வெளியே தெரிவதில்லே! ஆனா, இந்த ஊடகங்களினாலே, கெட்டவைகளுக்கு வெளிச்சம் போட்டு பெரிசா கண்ணை உறுத்தறாப்போல காட்டறாங்க! அப்பத்தானே அவங்களுக்கு விற்பனை! வீட்டுக்கு வீடு டி.வி.! ப்ரிட்ஜ்! டூவீலர், நகரங்களிலே வீட்டு காம்பௌண்டுக்குள்ளே இடம் போதாம, தெருவிலே நிக்கவைக்கிற அளவுக்கு கார்கள்!"

 " மொத்தத்திலே, நாடு முன்னேறிக்கிட்டுதான் இருக்கு, ஆனா அது வெளியிலே தெரியலே, ஊடகங்களினாலே தவறான அபிப்பிராயம் ஏற்படுதுங்களா?"

 " எனக்கு அப்படித் தாங்க, தோணுது, வரேங்க!"

 வசந்தா மீண்டும் தனிமையில் விடப்பட்டாள்!

பார்வதியின் அனுபவங்களை அடுத்த தொடரிலே பார்ப்போமா?

தொடரும்

Episode # 03

Episode # 05

Go to Idhu namma naadunga story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.